Daily Archive: June 10, 2019

ர் ,ன் என்பவை…

அன்புள்ள ஜெ.. ஒரு கன்னட மொழி பெயர்ப்பு நூல் படித்தேன்..மொழி பெயர்ப்பில் என்னை ஒரு விஷ்யம் குழப்பியது.. யோசிக்கவும் வைத்தது.மாணவர்கள் , பேராசிரியர்கள் , அதிகாரிகள் என அனைவரையுமே அவன் இவன் என குறிப்பிடுவது சற்றே குழப்பியது.. பொதுவாக தமிழில் , அவர் இவர் அவன் இவன் என்பதற்கு சில குறிப்பிட்ட ( எழுதப்படாத ) விதிகள் உண்டு.அமைச்சர் வந்தான் என யாரும் எழுதுவதில்லை.. ஆனால் வேலைக்காரன் வந்தான் என எழுதலாம்…நடிகன் விக்ரம் என எழுத முடியாது… …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122249

‘ சப்தம் ஆப்பிள் வடிவிலானது’ – அருணாச்சலம் மகாராஜன்

ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் பேசப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் – அருணச்சலம் மகாராஜன் கவிதை என்ற இலக்கிய வடிவம் மானுடம் சிந்திக்கத் துவங்கிய முதற்கணத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும்.மொழி என்பது பொருள் உணர்த்துவதற்கும், வினையறிவிப்பிற்கும் ஆன ஒன்று. மொழி என்பதுசொல்லாகவும், செயலாகவும்  இடத்துக்கேற்ற வகையில் உருமாறும் ஒன்று. உதாரணத்திற்கு “அவள் கனிவு கொண்டிருந்தாள்” என்பது எதையோ உணர்த்த வருகிறது என்றால், “உன்னை நேசிக்கிறேன்” என்பது செயலாகவும்வருகிறது. மொழி என்பது பொருட்சொற்களாலும், வினைச் சொற்களாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122663

காணப்போகும் விழா

இசையும் வண்ணமும் [மார்கழியில் மல்லிக பூத்தால் பாட்டுக்கு கீழே கமெண்ட்ஸ் பகுதியில் ஒருவர் எழுதிய குறிப்பின் தமிழாக்கம். மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘காணான் போகண பூரம் பறஞ்ஞு அறியிக்கணோ?” .பொருள் ,காணப்போகும் திருவிழாவை விவரித்துச் சொல்லவேண்டுமா என்ன? வரப்போகும் கொண்டாட்டம். அதை எத்தனை கற்பனைசெய்தாலும் சென்றடைய முடியாது. ஆனால் வரப்போகும் கொண்ட்டாடத்தைப்ப்போல பெரிய கொண்டாட்டம் வேறில்லை. காணப்போகும் பூரம் எஸ்.கோபிநாதன் சிவராமபிள்ளை பல ஆண்டுகளுக்கு முன் நான் வழக்கறிஞர் வேலையில் சேர்ந்து கொஞ்சநாள்தான் ஆகியிருந்தது. என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122612

மோடி,ராகுல் -கடிதங்கள்

ராகுல் -ஒரு கடிதம் ராகுல் காந்தி தேவையா? வணக்கம் ஜெ ராகுல் குறித்தும் மோடி குறித்தும் நீங்கள் உங்கள் கருத்துகளைக் கூறி வருகிறீர்கள். அதற்கு எதிர்வினையும் வருகிறது. சிலர் அவர்களுடைய அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து கருத்துகளை கூறிவரலாம். அது பெரிய தவறல்ல. ”ராகுல்,மோடி -கடிதங்கள்” பக்கத்தில் ‘ஆர்.ராஜசேகர்’ என்பவரின் கடிதம் மிக நகைப்புக்குரிய ஒன்று. முதலில் அவர் பயன்படுத்தியிருக்கும் ‘சங்கி’ என்கிற வார்த்தை. இது ஒரு நாலாந்தர கேலிச் சொல். பன்னிருபடைக்கலாம் வரை வாசித்த ஒருவரால் எப்படி இப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122571

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-62

கிருதவர்மன் கைகளை ஊன்றி தரையிலிருந்து எழுந்து நின்றபோது உடலுக்குள் நீர் நலுங்க கால்கள் தள்ளாடின. இரு கைகளையும் சிறகுபோல் விரித்து, கால்களை நன்கு அகற்றி, கண்களை மூடி அசையாமல் நின்று அகத்தை நிலைநிறுத்திக்கொண்டான். செவி ரீங்கரிக்கும் அமைதி எங்கும் சூழ்ந்திருந்தது. கண்களைத் திறந்தபோது அவனை மெல்லிய சாம்பல் நிறத் துணியால் எவரோ மூடி சுழற்றிக் கட்டியிருந்ததுபோல் தோன்றியது. அவன் கண்களை மூடி தன் உளச் சொற்களைக் குவித்து மீண்டும் திறந்து அப்பகுதியை நோக்கினான். சூழ்ந்திருந்த புகை மூச்சிரைக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122452