Daily Archive: June 9, 2019

இன்று விருதுவிழாவும் கருத்தரங்கும்…

  2019 ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது இளங்கவிஞர் ச.துரைக்கு வழங்கப்படுகிறது. மத்தி என்னும் கவிதைத் தொகுதிக்காக. விழா வரும் ஜூன் 9 ஆம் தேதி நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரன் பிறந்தநாள். அன்று அரங்கு எடுக்கப்படுவதனால் வழக்கம்போல மதியம் ஒரு சிறிய கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் நண்பர்களால் குறிப்பிடத்தக்கவை என தெரிவுசெய்யப்பட்ட மூன்று தொகுதிகளை முன்வைத்து மூவர் பேசுகிறார்கள்   நேரம் மதியம் 2 மணி இடம் தக்கர்பாபா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122415

தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 2

தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1 பகுதி இரண்டு: மேலும் துல்லியமான காலண்டர் மீரானுக்கு முன் இஸ்லாமிய வாழ்க்கையைத் தமிழிலக்கியத்தில் எழுதியவர்கள் இல்லையா? இலக்கியச்சூழலில் இல்லை. வணிக இலக்கியச் சூழலில் இரண்டு பெயர்களைச் சொல்லலாம். கருணாமணாளன், ஜே.எம்.சாலி. இருவருமே அன்றைய பிரபல இதழ்களில் எழுதியவர்கள். எழுதிக்குவித்தவர்கள் என்று சொல்ல்லாம். அவர்களின் எழுத்தின் போதாமைகள் சில உண்டு. அவற்றில் வணிகச்சூழலில் எழுதியமையால் அமைந்தவை முதன்மையானவை. அவற்றை எளிய வாழ்க்கைச்சித்திரங்கள் என்று மட்டுமே சொல்லமுடியும். வாசகனுக்கான இடைவெளிகள் அற்றவை. ஆசிரியரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121989

பி.ராமன் கவிதைகள், மேலும்

பி.ராமன் கவிதைகள் ஒரு துளி   கூரைக்குமேல் ஒரு துளி விழுவது கேட்பதற்காக நான் விழித்தெழுந்தேன் இன்று பெய்யக்கூடும் இன்று பெய்யக்கூடும் என்னும் கனவுகள் கருமைகொண்டெழுந்தன இன்று பொழியக்கூடும் என்ற எண்ணத்தான் மின்னி மின்னி நான் இருந்தேன்   நாளைக் காலையில் மழைக்காலம் வந்தது என்னும் சொற்றொடரால் மூழ்கும் அனைத்தும் பாதித்துயிலில் பெய்யும் இரைச்சல் கேட்டு சாளரவாயில் திறந்தேன் துயிலில் நனைந்து ஊறிய மழை என்ற ஒற்றைச் சொல்லில் ஜன்னல் கதவு  நின்றாடியது. ஆகவே இன்று துயிலாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122185

லண்டன் தமிழ் இலக்கிய குழுமம் சந்திப்பு -கடிதம்

லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்   இனிய ஆசிரியருக்கு, இன்று நான் இரண்டு வாரங்களாக எதிர்நோக்கி இருந்த நாள், லண்டன் தமிழ் வாசிப்பு குழுமும் கூடுகே இன்று இனிதே நடந்தது ! ஒன்றிய மனம் உடைய நபர்கள் ஒன்று சேரும் பொழுது வரும் ஒரு விழாக்கால மனநிலையையே நீடித்திருக்குறேன். எங்கே தூங்கினால் நினைவுகளில் நீடிக்கும் ஆளுமைகளும், அவர்கள் முகங்களும் மறந்துவிடுமோ என்று அவசரமான மனநிலையில் எழுதும் மடல். பிழையிருப்பின் பொருத்தாள்க ! விழா அரங்குக்கு நுழையும்பொழுதே – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122446

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61

படைகளைக் கடந்து பின்பகுதிக்குச் சென்றதும் அர்ஜுனனின் தேர் விரைவழிந்து தயங்கியது. பெருமூச்சுவிடுவதுபோல் அதன் சகடங்கள் ஓலமிட்டன. அதன்பின் புரவிகள் ஒவ்வொன்றாக நீள்மூச்செறிந்து அமைந்தன. ஒரு புரவி மட்டும் தலையை அசைத்துக்கொண்டே இருக்க அந்த ஓசை தாளம்போல் ஒலித்தது. இளைய யாதவர் தேரை நிறுத்தியது ஏன் என அர்ஜுனனுக்கு புரியவில்லை. ஆனால் அவன் விழிதூக்கி நோக்கவில்லை. புரவிகளில் ஒன்று செருக்கடித்தது. அவர்களைச் சூழ்ந்து பாண்டவப் படையினர் ஆங்காங்கே அமரத்தொடங்கிவிட்டிருந்தனர். எரிசூழ்ந்த மண்ணில் அவர்கள் குந்தி அமர்ந்தனர். பின்னர் உடற்களைப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122411