Daily Archive: June 8, 2019

தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1

  பகுதி ஒன்று . பக்கிரியும் பாடகனும்   தோப்பில் முகம்மது மீரான் என்னை முதன்முதலில் சந்தித்தபோது கேட்ட்து “நீங்க பசீரை பாத்திருக்கேளா?” என்றுதான். அவருக்கு வைக்கம் முகம்மது பஷீர் முன்னுதாரண எழுத்தாளர். “பசீர் போல எளுத முடியாது…” என்று ஏக்கத்துடன் சொல்வார். தமிழில் மீரானுக்கு முன்னோடிகள் இல்லை. அவருடைய முன்னோடி பஷீர்தான். மாணவராக இருக்கையிலேயே அவருக்கு பஷீர் அறிமுகமாகிவிட்டார். ”பஷீரை முதல்ல படிக்கிறப்பம் ஒரு தமாசக்காரன்னாக்கும் நினைச்சது. உள்ள போயி அவருக்கு உள்ள இருக்கப்பட்ட சூப்பிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121994

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

குமரகுருபரன் – விஷ்ணுபிரம் விருது வழங்கும் விழா நாளை சென்னையில் நிகழ்கிறது. இது மூன்றாவது விருது. முதல் விருது 2017ல் சபரிநாதனுக்கும் இரண்டாவது விருது 2018ல் கண்டராதித்தனுக்கும் வழங்கப்பட்டது. மூன்றாவது விருது ச.துரைக்கு அவருடைய மத்தி என்னும் கவிதைத்தொகுதிக்காக வழங்கப்படுகிறது      

Permanent link to this article: https://www.jeyamohan.in/122172

நாகராஜன் இ.ஆ.ப

இரவோடு இரவாக 1,500 பேருக்கு பணி ஆணை! என்னுடைய நல்ல வாசகர்களில் ஒருவர் நாகராஜன். குமரிமாவட்டத்தில் பணியாற்றியபோது  இங்குள்ள அரசுப்பள்ளிகள் சிறப்புறச் செயல்படுவதற்காக பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். என் நண்பரும் ஊர்க்காரரும் லண்டன்வாசியுமான சுகுமாரன் நாயர் வலிநீக்கு இறப்புத்தருண மருத்துவத்தின் பொருட்டு ஒரு தொண்டுநிறுவனத்தைத் தொடங்கியபோது அதற்கு எல்லா உதவிகளையும் செய்தார். அந்நிகழ்வில்தான் சந்தித்தேன்.   சமீபத்தில் தேர்தல்காலத்தில் வீட்டுக்கு வந்தார். நள்ளிரவு வரை இலக்கியம், மதம் சார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அடிப்படையில் காந்திய விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர். அவரைப்பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122616

ச.துரை பேட்டி -அந்திமழை

குமரகுருபரன்- விஷ்ணுபுரம்  விருது உங்களுக்கு வழங்கப்படுவதை எப்படி உணருகிறீர்கள்? அறிவிக்கப்பட்டதுமே பதற்றமாகிவிட்டேன். இப்போதும் கூட அந்த பதற்றம் இருக்கிறது. குமரகுருபரனின் சாம்பல் நிற பனியன் அணிந்த அந்த புகைப்படம் ஒருமுறை நினைவுவந்தது. இன்னும்நிறைய பொறுப்பும் நான் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருப்பதாகவும் என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன். ச.துரை பேட்டி – அந்திமழை

Permanent link to this article: https://www.jeyamohan.in/122630

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60

பன்னிரண்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான மச்சர் சுரைக்காய்க் குடுவையில் எருதின் குருதிக்குழாயை உலர்த்தி முறுக்கி நரம்பாக்கி இழுத்துக் கட்டி உருவாக்கிய ஒற்றைத்தந்தி யாழில் தன் சுட்டுவிரலை மெல்ல தட்டி விம்மலோசை எழுப்பி அதனுடன் இணைந்துகொண்ட ஆழ்ந்த குரலில் கர்ணன் களம்பட்ட செய்தியை பாடினார். அங்கிருந்த பதினொரு சூதர்களும் உதடுகளிலிருந்து எழாமல் நெஞ்சுக்குள் முழங்கிய ஒலியால் அதற்கு கார்வை அமைத்தனர். “சூதரே, மாகதரே, விண்ணின் முடிவிலா நீரப்பரப்பு ததும்பி கதிரவன் மீது பொழிந்தது. சுடரனைத்தும் அணைந்து வெம்மை மறைந்து, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122395