Daily Archive: June 7, 2019

இசையும் வண்ணமும்

செம்மீன் படத்தின் பெரிய வெற்றி அதேபோல பல படங்களை உருவாக்கும் ஆசையை உருவாக்கியது மலையாளத்தில். பல நாவல்கள் படமாயின. செம்மீன் போலவே சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசையுடன் அவை தயாரிக்கப்பட்டன. பல படங்களை அன்றைய தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுடன் ஒப்பிட்டுப் பாத்தால் மலையாளப்படங்களில் ஒளிப்பதிவு அபாரமான செவ்வியல்தன்மையுடன் இருப்பதைக் காணலாம்.   அன்று தமிழ்ப்படங்கள் திரைப்படநிறுவனங்களின் வழக்கமான ஒளிப்பதிவாளரால் ஒளிப்பதிவுசெய்யப்பட்டன. அவற்றுக்கு ஒரு இயந்திரத்தனமான இலக்கணம் இருந்தது. மேலும் அன்றைய பொது ரசனை கண்கூசவைக்கும் வண்ணங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122464

பூமணியை வாசித்தல் – சென்னை இலக்கிய நிகழ்வு

இடம் இக்ஸா மையம் எழும்பூர்   நாள்  8-6-2019   பொழுது காலை 930   தேவிபாரதி, கல்யாணராமன், பெருந்தேவி, ஜே.எஸ்.கார்த்திகேயன், பெருமாள் முருகன், காசி மாரியப்பன், ராஜன் குறை, ஸ்டாலின் ராஜாங்கம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/122461

குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பாளர்- பி.ராமன்

  பி.ராமன் கவிதைகள் மலையாளக் கவிஞர்களில் முதன்மையானவராக கருதப்படும் பி.ராமன் தன் இளம்வயதிலேயே குற்றாலத்தில் [1998]  நடந்த தமிழ் – மலையாளம் கவிதையரங்கில் கலந்துகொண்டவர். தொடர்ந்து ஊட்டி குருகுலத்தில் நடந்த குருநித்யா கவிதையரங்குகள் அனைத்திலும் பங்குகொண்டவர். தமிழ்க்கவிதையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர்.   1972ல் பாலக்காட்டில் பட்டாம்பியில் பிறந்தார்.கனம், துரும்பு என இரு தொகுதிகளாக கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. பாஷையும் குஞ்ஞும் என்னும் தலைப்பில் கவிதைபற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.மலையாளம் முதுகலை பட்டம்பெற்றவர். ஆசிரியராகப் பணிபுரிகிறார்.   பி.ராமன் கவிதைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122121

ராகுல் -ஒரு கடிதம்

ராகுல் காந்தி தேவையா? ஆசிரியருக்கு,   இருப்பதை அகற்ற சாத்தியமான உடனடி மாற்று அது மலிவாக இருந்தாலும் சரி அதை தேர்வு செய்வோம்  என்பது  அரசியல் விமர்சகர்களின் குறுகிய காலப் பார்வையாக இருக்கும் என  நான் எண்ணுகிறேன். தற்கால அரசியல் நெருக்கடிகளில் இருந்து விடுபட்டு  சாத்தியமான லட்சிய ஜனநாயகத்தை  குறித்து தத்துவர்த்தமாகவும் சித்தாந்த ரீதியாகவும் சிந்திப்பது  சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் நோக்கமாக இருக்கும் என  நான் எண்ணுகிறேன். ஆனால் உங்களின்  ராகுல் காந்தி தேவையா ? என்கிற கட்டுரையில் அவ்வாறு நிகழவில்லை. ஒரு அரசை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122496

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-59

அர்ஜுனன் அம்புகளால் கர்ணனை தாக்கியபடி களத்தில் முன்னெழுந்தான். “அவனை அல்ல, அவன் தேரை தாக்குக!” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் தேர் இருக்கும் வரை அவனை வெல்லமுடியாதென்று உணர்க! தேரில் முதலில் கொடியை உடைக்கவேண்டும். கொடியில்லாத தேருக்கு எந்த விசையிழப்பும் இல்லை. ஆனால் தன் தேரின் கொடி வெட்டப்பட்டுவிட்டதை உணர்ந்த வீரன் நிலையழிகிறான். கொடியில்லாத தேரில் நின்றிருக்கிறோம் என்னும் உணர்வை அவன் கடக்கவே இயல்வதில்லை.” இளைய யாதவர் அவனுடைய தேர்த்தூண் வளைவில் வந்து ஆணையிட்டார். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122372