Daily Archive: June 6, 2019

வாசிப்பு எனும் நோன்பு

1000 மணிநேர வாசிப்பு சவால் வாசிப்புச் சவால் -கடிதங்கள் வாசிப்புச் சவால் – கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். ஜப்பானெல்லாம் சென்று வந்து உடல் நலமுடன் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் ஜப்பான் உரையை பாதி கேட்டுள்ளேன். மீதியை நாளை தொடர வேண்டும். இந்தக்கடிதம் 1000 மணி நேர வாசிப்பு சவாலில் எனது பங்கு மற்றும் நிலைமை பற்றியது. நான் எப்பொழுதும் வாசிப்பவன். வாசித்ததை spreadhseet-ல் கணக்குப்போட்டுவைத்திருப்பவன். ஆதலால் ஒரு வருடத்திற்கு எத்தனை புத்தகங்கள் வாசிப்பேன் என்றுஎனக்கு நன்றாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122216

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- சிவா கிருஷ்ணமூர்த்தி

  2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.   இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் என்னும் சிறுகதைத் தொகுதி குறித்து காளிப்பிரசாத் பேசுகிறார். சிவா கிருஷ்ணமூர்த்திஅறிமுகம்   கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்   – ஜெயமோகன் ஈராயிரம் தருணங்கள்… சிவா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122124

இன்றைய பண்பாட்டு விவாதங்களில்… கடலூர் சீனு

விமலரும் வராகரும் சமணத்தில் வராகர் வராகர் -ஒரு கடிதம் சமணம் வராகர் – கடிதங்கள்   இனிய ஜெயம்   இந்துத் தாலிபானியம் இங்கே வந்து விட்டதா எனும் கேள்விக்கு [ சமணம் வராகர் – கடிதங்கள்]அப்டித்தான் போல என்றே சொல்லத் தோன்றுகிறது.  பொதுத் தளத்தில் இது மூன்று அலகுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். ஒன்று இத்துப் பண்பாட்டு இயக்கம் மீதான அறியாமை.  அந்த அறியாமையில் நின்று இந்துக் காலாச்சாரக் கூறுகள் அனைத்தையும் உயிர் இயக்கத்திலிருந்து  துண்டித்து உறைநிலையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122494

காத்திருக்கிறாள் இரவுமகள்

சந்தன நதியில்… அன்புள்ள ஜெ   மலையாள பாடல்களை இங்கே அவ்வப்போது கொடுத்துவருகிறீர்கள். எதையும் எவரும் கேட்பதில்லை என்றும் எழுதியிருந்தீர்கள். நான் நீங்கள் கொடுக்கும் பாடல்களை எல்லாம் கேட்பேன். பலமுறை. உங்கள் தளம் வழியாகத்தான் நான் மலையாள மெலடி உலகுக்கே நுழைந்தேன். பைத்தியக்காரிபோல கேட்டுக்கொண்டிருக்கிறேன்.   இவற்றைக் கேட்பதற்கு ஒரு தனி ரசனை வேண்டும். மலையாள மொழியின் அழகு கொஞ்சம் பிடிகிடைக்கவேண்டும் [நான் பாலக்காட்டில் இளமைக்காலத்தில் இருந்திருக்கிறேன்] சம்ஸ்கிருதத்தின் அழகு ஊறிய மொழி அது. மென்மையான சொற்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122327

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58

ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன். பாண்டவப் படையினர் பின்னால் சென்று அர்ஜுனனையும் இரு மைந்தரையும் தனித்து விட்டனர். கௌரவப் படையினர் கர்ணனையும் மைந்தரையும் விட்டு பின்னகர்ந்தனர். இருவரும் தாங்களே பலவாகி பெருகி அம்புகளென ஆகி விண்ணிலெழுந்து மோதிக்கொண்டனர். வெடித்து அனலுமிழ்ந்தனர். சுழித்து குருதிச்சகதிப் புழுதிக்குப்பையை அள்ளி சுழற்றிவீசினர். உறுமியபடி சென்று ஒவ்வொன்றையும் பற்றி உலுக்கினர். ஆற்றாது திரும்பி வந்தனர். மீண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122313