Daily Archive: June 5, 2019

தோப்பிலின் புகையிலை நெட்டு

  ஜெ குளச்சல் மு யூசுப் இதை எழுதியிருந்தார். கூடவே தோப்பிலின் பழைய டிவிஎஸ் 50 படத்தையும் பகிர்ந்திருந்தார் நூற்றுக்கணக்கான அஞ்சலிகளில் என்னைக் கவர்ந்தது இது. ஏனென்றால் இதில் ‘சின்ன’விஷயங்கள் சில உள்ளன. இவைதான் ஒரு மனிதரை நெருக்கமாகக் காட்டுபவை. பொதுவாக அஞ்சலிகளில் ‘மிகச்சிறந்த எழுத்தாளர். நல்ல மனிதர். பேரிழப்பு’ என்ற டெம்ப்ளேட்தான் இருக்கும். சிலவற்றில் ‘நான் எவ்வளவு முக்கியமானவன் என்று அன்னார் பலமுறை என்னிடம் சொன்னதுண்டு’ என்றவகையான சுயபிலாக்காணம் இருக்கும் நீங்கள் ராஜமார்த்தாண்டன், லோகிததாஸ் போன்றவர்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122237

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்

  2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.   இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் அனோஜன் பாலகிருஷ்ணனின் பச்சை நரம்பு என்னும் சிறுகதைத் தொகுதி குறித்து சுனீல்கிருஷ்ணன் பேசுகிறார்.   ஒருதுளி இனிமையின் மீட்பு -அனோஜன் பற்றி ஜெயமோகன் யானை – அனோஜன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122126

பான்ஸாய் கடல் -கடிதங்கள்

உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்   பான்ஸாய்க் கடல் அன்புள்ள ஜெ   போன்ஸாய் கடல் படித்தேன். பெரிதானவற்றை மிகச்சிறியனவாகவும், சிறியனவற்றை மிகப் பிரம்மாண்டமாகவும் காட்டும் கலைப்படைப்புகளைக் காணும்போது எழும் கிளர்ச்சி இயல்பானது. அதுவும் உயிர் உள்ளதாலும், பெரும் உழைப்பால் உருவாவதாலும் போன்ஸாய் நம்மை ஈர்ப்பதில் ஆச்சரியமில்லை. இதைப்படித்த போது இதை மையமாய் வைத்து சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் சுஜாதா வேறு கோணத்தில் எழுதிய ஒரு சிறுகதை (பெயர் நினைவில் இல்லை) ஞாபகத்துக்கு வந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122383

ராகுல்,மோடி -கடிதங்கள்

ராகுல் காந்தி தேவையா? பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். பாரதப்பிரதமர் மோதி அவர்களின் அபிமானியான, நான் சில சூழ்நிலைகளில் அவரின் செயல்பாடுகளைப் பற்றி(பணமதிப்பு நீக்கம்,வரிசீர்திருத்தம்,கஷ்மீர் அரசியல் போன்றவை)முன்பு உங்களிடம் விளக்கம் கேட்டு, சிலநேரங்களில் பதிலும் பெற்றிருக்கிறேன்.இடையில் மோதி மற்றும் பிஜேபி அரசின் செயல்பாட்டை கடுமையாக விமரிசித்து நீங்கள் எழுதியமோடி அரசு, என் நிலைபாடு என்ற கட்டுரையை படித்தபோது மிகவும் அதிர்ச்சியுற்றேன் அது பற்றி தங்களிடம் விளக்கம் கேட்கலாமென்றால் அக்கட்டுரையின் இறுதியில் ……. “மேற்கொண்டு எதையும் பேசப்போவதில்லை. இது என் அரசியல் நிலைபாடு. எளிய குடிமகனின் அரசியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122489

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57

பதினொன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான கும்பகர் பெரிய மண் கலத்தின் வாயில் மெல்லிய ஆட்டுத்தோலை இழுத்துக் கட்டி உருவாக்கப்பட்டிருந்த உறுமியின்மீது மென்மையான மூங்கில் கழிகளை மெல்ல உரசி மயில் அகவும் ஒலியையும் நாகணவாய் புள்ளின் கூவலையும் எழுப்பி அதனுடன் இணைந்துகொண்ட தன் ஆழ்ந்த குரலில் கர்ணன் அர்ஜுனனை எதிர்கொண்ட போர்க்களத்தின் இறுதிக் காட்சியை சொல்லில் வடிக்கலானார். சூதர்கள் அவர்களுடன் இணைந்துகொள்ள ஒருவர் விட்ட சொல்லை பிறிதொருவர் எடுக்க ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் தகைமைகொண்ட சொற்கள் காட்சிகளென மாறி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122364