Daily Archive: June 4, 2019

கோடைநாளில்…

சென்ற ஒருவாரமாக அருண்மொழி ஊரில் இல்லை. அவள் இப்போதெல்லாம் உலகப்பயணி. ஜப்பானிலிருந்து வந்து துணிகளை துவைத்து அடுக்கி பெட்டியைத் தூக்கிக்கொண்டு சிங்கப்பூர் சென்றுவிட்டாள்.  கூட அஜிதனும் சைதன்யாவும். அங்கே நண்பர்களுடன் தங்கி சிங்கப்பூரை கழற்றி மாட்டிக்கொண்டிருக்கிறாள். நான் இங்கே வீட்டில் டோராவுடன் தனியே. வெண்முரசு எழுதுவது வாசிப்பது பாட்டுகேட்பது வாயைப்பிளந்தபடி சும்மா உட்கார்ந்திருப்பது என்று பொழுது கடுகிச்செல்கிறது   உச்சகட்ட வெயில். ஆகவே வெளியேபோய் சாப்பிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அருண்மொழி தோசைமாவு வைத்திருந்தாள். முதல் ஆறுநாட்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122398

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்

  2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.   இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் எஸ்.சுரேஷ் எழுதிய பாகேஸ்ரீ என்னும் சிறுகதைத் தொகுதி குறித்து விஷால்ராஜா பேசுகிறார். எஸ்,சுரேஷின் பாகேஸ்ரீ- கிரிதரன் ராஜகோபாலன் பாகேஸ்ரீ – பதாகை  

Permanent link to this article: https://www.jeyamohan.in/122131

சமணம் வராகர் – கடிதங்கள்

விமலரும் வராகரும் சமணத்தில் வராகர் வராகர் -ஒரு கடிதம் இனிய ஜெயம்,   அண்ணன் அனீஷ் கிருஷ்ணன் அவர்களின் பதில் மகிழ்வளித்தது. நன்றி. மணிபத்ர வீரன். மனதுக்குள் பதித்துக் கொள்கிறேன். கலாச்சார தனித்தன்மைக் கூறுகளில் அவரது ஞானம் பிரமிப்பு அளிக்கிறது.   கோவிலுக்கு வெளியே பூசாரி யை தேடிச் சென்றுதான் முதலில் கேள்வி கேட்டேன். என் வினோத உருவம் அங்கே தடை.  எல்லாம் உங்க சாமி மாதிரிதான் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டு வேறு பணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122417

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56

சிகண்டி தன்னை வெறிகொண்டு எதிர்த்த கிருதவர்மனை விழிதூக்கி நோக்கவில்லை. அப்போர்க்களத்தில் அவர் பீஷ்மரைத் தவிர எவரையுமே நோக்கவில்லை. பீஷ்மரை எதிர்த்துநின்றபோது முதற்கணம் அவருடைய விற்தொழிலும் உடலசைவும் உள்ளம் செல்லும் வழிகளும் முன்னரே நன்கறிந்திருந்தவை எனத் தோன்றின. முதல் நாள் முதல் அம்பில் அவர் பீஷ்மரின் கால்களை அடித்தார். அத்தனை ஆண்டுகாலம் அவர் தவம்செய்திருந்த வடிவம். அவர் அணுவணுவாக தன்னுள் நிகழ்த்திக்கொண்ட போர். ஆனால் ஒவ்வொருநாளும் பீஷ்மர் அவர் அறிந்தவற்றிலிருந்து எழுந்து வளர்ந்தபடியே சென்றார். அவர் அவருடன் சேர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122289