Daily Archive: June 3, 2019

ராகுல் காந்தி தேவையா?

  அன்புள்ள ஜெ   ராகுல்காந்தி தலைமையேற்கப் போவதில்லை என்று சொல்ல அதற்கெதிராகக் காங்கிரஸ் தலைவர்கள் கூட  ‘எங்கள் தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்’ என்று மிரட்டும் நிலையைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பரம்பரை ஆட்சியின் இந்த கேடுகெட்ட நிலையை ராகுல்காந்தியின் எளிமையை ரசித்த உங்களால் ரசிக்கமுடியும் என்று நினைக்கிறேன். எஸ்.ஸ்ரீனிவாஸ்   அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,   எளிமையான கேள்வி. இந்திய ஜனநாயகத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உள்ளதா? ஆம் என்று சொன்னீர்கள் என்றால் மேலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122282

ச.துரை – கவிதை

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது இளம்கவிஞர் ச.துரைக்கு வழங்கப்படுகிறது. வரும்9-6-2019 அன்று சென்னை தக்கர்பாபா கூடத்தில் பரிசளிப்புவிழா ந்டைபெறுகிறது. இவை அவருடைய மத்தி தொகுப்பிலுள்ள கவிதைகள் ச.துரை – நான்கு கவிதைகள் ச.துரை ஐந்து கவிதைகள்  ச. துரை கவிதைகள்             1   சப்தங்கள் மெல்லிய நரம்புகளால் முடிச்சிடப்பட்டவை நரம்புகள் அறுந்து சப்தம் உடையும்போதுதான் சப்தம் உருவாகிறது 2 கண்ணாடி என்கிறார்கள் எனக்கு அவற்றின் பிரதிபலிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122233

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா சிறுகதை அரங்கு- பேச்சாளர்கள்

  2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.   இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. பேசுபவர்கள்   விஷால்ராஜா எழுத்தாளர் விஷால்ராஜா எஸ்.சுரேஷின் பாகேஸ்ரீ என்னும் நாவலை முன்வைத்துப் பேசுகிறார்   நவீன நாவல் -விஷால்ராஜா தஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா – கடிதம் பாரஞ்சுமக்கிறவர்கள்  (அசடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122164

வராகர் -ஒரு கடிதம்

விமலரும் வராகரும் சமணத்தில் வராகர் திரு ஜெமோ   வைணவர்களின் வராகமூர்த்தி சமணத்தில் இருந்து வந்தவர் என்று நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். எந்த ஆதாரமும் இல்லாத இந்த அவதூறு உங்கள் தரம் என்ன என்று காட்டுகிறது.வராகமூர்த்தி வைணவத்தில் அநாதிகாலம் தொட்டு இருந்துவரும் வழிபாடு என்பதை அறியாதவர்கள் இருக்க முடியாது. அதை சமணர்களின் தெய்வத்தை நகல் எடுத்தது என்று சொல்வதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். ஆதாரங்கள் இல்லாவிட்டால் நீங்கள் மன்னிப்பு கோரவேண்டும்.   இந்துவழிபாடுகளும் தெய்வங்களும் சமணத்தில் இருந்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122375

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55

போர் தொடங்குவதற்கான முரசு ஒலித்ததும் தன்னை அறியாமலேயே “எழுக! எழுக!” என கையசைத்து அம்புகளைத் தொடுத்தபடி சுபாகு பாண்டவப் படைகளுக்குள் ஊடுருவிச்சென்றான். அவனை எதிர்த்து வந்த பாஞ்சால இளவரசர்களை அம்புகளால் அடித்து பின்னடையச் செய்தான். தன்னியல்பாகவே அது நிகழ்ந்தது. தன் கைகளால் அவன் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்துவந்த படைவீரகள் இயல்பாக அவன் உடலென ஆகிவிட்டிருந்தனர். அவனே படையென தன்னை எண்ணத் தொடங்கியிருந்தான். போர் மூண்ட சில கணங்களுக்குள் அங்கே அவ்வாறு என்றும் போரிட்டுக்கொண்டிருந்ததே தன் வாழ்வும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122357