Daily Archive: June 1, 2019

இடதுசாரிகள் கேரளத்தில் நீடிப்பார்களா?

வங்கத்தில் என்ன நடக்கிறது?     கேரளத்திலும் இடதுசாரிகளின் அரசியல் முடிந்துவிட்டது, வங்கம்போல அவர்கள் இங்கே இனி எழவே முடியாது என்று சிலர் எனக்கு எழுதியிருந்தார்கள். பெரும்பாலானவர்களின் விழைவு அது, அத்தகைய விழைவுகளை அவர்கள் வருடிக்கொண்டிருக்கவேண்டியதுதான். சிலர் உண்மையான ஆதங்கத்துடன் கேட்டிருந்தார்கள். தமிழகத்தைப்போலவே கேரள அரசியலைக் கூர்ந்து நோக்கி வருபவன் என்பதனால் அவர்களுக்காக இதை எழுதுகிறேன் வங்கத்திற்கும் கேரளத்திற்குமான வேறுபாடு என்ன? வங்கத்தில் இடதுசாரி அரசியல் என்பது முழுக்க முழுக்க கல்கத்தாவை மட்டுமே நம்பிச்செயல்பட்டது. வங்கத்தில் பயணம்செய்தவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122242

சந்தன நதியில்…

  பி.சுசீலா நிறைய மலையாளப் பாடல்களைப் பாடியிருக்கிறார். மலையாள உச்சரிப்புக்கு ஒவ்வாத ஒரு அழுத்தம் அவருடைய ற ளக் களில் உண்டு. அதோடு பொதுவாக மலையாளப் பெண்களின் குரல் அல்ல அது. ஓங்கிய மணியோசை. மலையாளப்பெண் பாடுவதுபோலவே பாடியவர் எஸ். ஜானகிதான்   ஆனால் சிலபாடல்களில் சுசீலாவின் உச்சரிப்பும் குரல்மணியோசையும் அழகாக முயங்கி அற்புதமான அனுபவமாக ஆகியிருக்கின்றன .அவற்றிலொன்று இந்தப்பாடல். சந்ந்ந்ந்ந்ந்த்ர என்னும் அந்த இழுப்பு நாற்பத்தைந்து ஆண்டுகளாக என்னை மயக்கிக்கொண்டிருப்பது.   என் பத்துவயதில் திருவந்தபுரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122303

மூவகைத் துயர். ச.துரை கவிதைகள் மூன்று

[2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெறும் ச.துரையின் கவிதைகள் குறித்த ஓரு ரசனை. கடலூர் சீனு     வெடிகுண்டு நகரத்திடம் சொன்னது ”நான் விழுந்துகொண்டிருக்கிறேன்” நகரம் கேட்டது ”நீ யாருடைய பக்கம்” வெடிகுண்டு சொன்னது ”நான் யாருடைய பக்கமும் இல்லை நான் விழுந்துகொண்டிருக்கிறேன்” நகரம் சொன்னது ”உன்னை சுற்றிப் பார்” வெடிகுண்டு கூறியது ”காலம் கடந்துவிட்டது ” நகரம் எதுவும் சொல்லவில்லை.   -நினா கோஸ்மான்- ரஷ்யா-   [தமிழில்  வெ.நி. சூர்யா] …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122227

குமரகுருபரன் நினைவலைகள்

குமரகுருபரன் மறைந்து நான்காண்டுகள் ஆகின்றன.  இந்த நான்காண்டுகளில் அவருடைய பெயர் உரையாடல்களில் வந்துகொண்டே இருக்கிறது. ஓர் இளங்கவிஞனின் மறைவு என்பது குறியீட்டளவிலேயே ஆழமானது. பெரும்பாலான கவிஞர்கள் முதுமையற்றவர்கள். முதுமையிலும் இளமையில் வாழ்பவர்கள். இளமையில் மறைந்த கவிஞன் தன் உடலையும் தன் கவிதைக்கு அடையாளமாக ஆக்கிவிட்டுச் சென்றுவிடுகிறான் குமரகுருபரனுடனான என் உறவு சிக்கலானது. பலமுறை சொன்னதுபோல இரவில் ஒருவர் பகலில் பிறிதொருவர். பலவகையான ஒவ்வாமைகளால் அலைக்கழிக்கப்பட்டவர். அதை இரவில் வெளிப்படுத்தியவர். பலவகையான பெரும்பற்றுகளால் ஈர்க்கப்பட்டவர். அதை பகலில். என்னைப்போலவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122167

கேரளமும் இடதுசாரிகளும் -கடிதம்

இடதுசாரிகள் கேரளத்தில் நீடிப்பார்களா? கேரளத்தில் ஏன் கம்யூனிஸ்டுகள் சக்திவாய்ந்தவர்களாக  இருக்கிறார்கள் என்பதற்கு கோரவில் உள்ள நல்ல பதில்கள்   https://www.quora.com/How-is-the-CPIM-so-powerful-at-Kerala   இந்த பதில் மிகவும் விவரமானது   https://www.quora.com/How-is-the-CPIM-so-powerful-at-Kerala/answer/Arun-Mohan-അരുൺ-മോഹൻ?ch=3&share=23922d7c&srid=tiqZ     இதற்கு தொடர்பில்லாத ஒரு செய்தி   தமிழிலில் கோரா தளம் இயங்குகிறது இதில் தமிழில் கேள்வி பதில்களை பார்க்கலாம்   https://ta.quora.com   ராம் குமரன்   அன்புள்ள ஜெ   கேரளத்தில் இடதுசாரிகளின் நிலை பற்றி விரிவாக எழுதியிருந்தீர்கள். அதில் கேரளத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122378

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-53

அஸ்வத்தாமனின் பாகன் திரும்பி நோக்கி “முன்னேறவா, அரசே?” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். “முன்னேறுக!” பாகனின் விழிகள் மங்கலடைந்திருந்தன. அவன் ஆழ்ந்த துயிலில் இருப்பதுபோல் குரலும் கம்மியிருந்தது. இவன் எப்படி தேர்நடத்த முடியும் என்று அஸ்வத்தாமன் ஒருகணம் எண்ணினான். ஆனால் புரவிகள் அவன் கையின் அசைவால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. சொல்லப்படுவதற்குள்ளேயே உடலசைவுகளிலிருந்தும் முகத்தின் மெய்ப்பாடுகளிடமிருந்துமேகூட அவன் ஆணைகளை பெற்றுக்கொண்டான். ஆடிவளைவில் தன்னை நோக்கிக்கொண்டிருக்கும் பாகன் எந்த வில்லவனுக்கும் தெய்வத்துணைபோல. பாகனுடன் உடலால், விழியால், சொல்லால் உரையாடிக்கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122300