Monthly Archive: June 2019

எப்படி இருக்கிறேன்?

தாடை! இல்லாத மணிமுடி மாயாவிலாசம்!   நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்தபடியே உள்ளன. என் உடல்நிலை, உளநிலை குறித்த உசாவல்கள். சுருக்கமாக, நன்றாகவே இருக்கிறேன் கைகளிலும் கழுத்திலும் இருந்த வீக்கங்களும் கீறல்களும் மறைந்துவிட்டன. உடல்வலியும் நீங்கிவிட்டது. எஞ்சியிருப்பது தாடைவலி. அது அத்தனை எளிதாகச் சீரமையாது. முதல்சிலநாட்கள் மெல்ல முடியாதபடி கடுமையான குத்தல் வலி இருந்தது. ஆகவே டாக்டர் முகம்மது மீரானைச் சென்று பார்த்தேன். தாடையை மண்டையோட்டுடன் இணைக்கும் குருத்தெலும்பில் அடிபட்டிருப்பதாகவும் நாட்பட சரியாகும் என்றும் சொன்னார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123310

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -6

  ஹிரோஷிமா- நாகசாகி இரு ஊர்களும் நாம் பள்ளிப்பாடங்களிலேயே அறிந்தவை. சேர்த்துப் படித்து ஒற்றை ஊராகவே நம் மனதில் நின்றிருப்பவை. நான் ஆறாம்வகுப்பு பாடத்தில் படித்த அந்த இரண்டு பெயர்களுக்கு அப்பால் உண்மையில் அங்கு  நிகழ்ந்ததென்ன என்பதை புரிந்துகொண்டது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது வாசிக்க நேர்ந்த டாக்டர் தகாஷி நாகாயி எழுதிய த பெல்ஸ் ஆஃப் நாகசாகி என்ற புத்தகத்தின் தமிழாக்கம் வழியாக. [நாகசாகியின் மணிகள்] அந்நூல் பேர்ல் பதிப்பகம் வழியாக வெளிவந்ததா என ஓர் ஐயம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123040

மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா?-சரவண ராஜா

சாம்ராஜ் ஜார் ஒழிக நூல் வாங்க கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “பட்டாளத்து வீடு” மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ஜார் ஒழிக!”, பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது கதைகளின் தொடர்ச்சியாகவும், அதே வேளையில் சில அம்சங்களிலும், சில கதைகளிலும் விலகி நிற்கிறது. இத்தொகுப்பில் வரும் செவ்வாக்கியம், மரிய புஷ்பம் ஆகியோர் அவரது ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123257

வாசிப்பு நோன்பு- கடிதங்கள்

வாசிப்பு எனும் நோன்பு வாசிப்புச் சவால் -கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நலம் அறிய ஆவல். ஒரு வாசகருக்கு, கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றிய தங்களது எதிர் வினையையும், கடலூர் சீனு-வின்கடிதத்தையும் வாசித்தேன். அதற்கு எனது சார்பாக ஒரு கடிதம் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டேஇருந்தேன். காரணம் , என்னடா இவனும் இப்படி ஆகிவிட்டானே என்று நீங்களும் , கடலூர் சீனுவும் நினைத்துவிடக்கூடாதுஎன்று ஒரு சிறு தயக்கம். இன்னோரு பக்கம், தாங்கள் புத்தகத்திற்கும், காட்சியூடகத்தில் வந்ததற்கும் நிறைய வேறுபாடுஇருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123217

கோவை சொல்முகம் கூடுகை – ஜுன் 2019

  அன்புள்ள ஜெ., திட்டமிட்டபடி கோவை சொல்முகம் வாசகர் குழுமம் வரும் ஞாயிறு, ஜூன் 30ம் தேதியன்று காலை சரியாக 10 மணிக்கு கூடுகிறது. இம்மாத அமர்வில் ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களையும் முன்வைத்து விவாதங்களும் கலந்துரையாடல்களும் நடைபெறும். அருகிலிருக்கும் ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் கலந்துக் கொள்ள அழைக்கிறோம். தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: நரேன் – 7339055954 சுஷீல் – 96002 74704  

Permanent link to this article: https://www.jeyamohan.in/123378

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -5

நாராவின் ஆலயங்கள் வழியாகச் செல்கையில் அவற்றின் வரலாற்றை முழுக்கத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் உந்துதல் ஏற்பட்டது. மிகுந்த முயற்சிக்குப்பின்னரே அதைக் கட்டுப்படுத்த முடிந்தது. இப்பயணத்தில் நான் ‘முறையாக’ எதையும் தெரிந்துகொள்ள முயலக்கூடாது என்றும் என்னென்ன இயல்பாக கண்ணுக்குப்படுகின்றனவோ எனக்குள் என்னென்ன எழுகின்றனவோ அவையே போதும் என்றும் எண்ணியிருந்தேன். ஆயினும் வரலாற்றை அறியும் ஆர்வம் எழுந்தபடியேதான் இருந்தது. ஜப்பானிய வரலாற்றை முழுமையாக அறியும் ஒரு நூலை வாசிக்கவேண்டும் ஜப்பான் பலவகையிலும் பிரிட்டனுக்கு நிகரானது. சிறிய தீவுகளின்கூட்டம். இன்று அவை பாலங்களாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123197

யாதும்!

அன்புள்ள ஜெ.   நலம் தானே. சங்கச்சித்திரங்கள் புத்தகத்தை  படித்து அதிலிருந்து ஊக்கம் பெற்று  நண்பர் ராஜன் சோமசுந்தரம் உலக இசை கலைஞர்களை ஒருங்கிணைத்து  சங்கம் ஆல்பத்தை படைத்துள்ளார். இதில்   “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல் ஒளி/ஓலி வடிவிலும் சிறப்பாக அமைந்துள்ளது.   அவரின் நேர்க்காணல்     யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல்     நன்றி விவேக்    

Permanent link to this article: https://www.jeyamohan.in/123103

ஆடல்வல்லான் -கடலூர் சீனு

    அம்பலத்து ஆடுவான்  இந்த ஆடல்வல்லான்  இவன் அலகில் சோதியன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் உலகெலாம் உணர்ந்தும்  ஓதற்கு அரியவன்.     அரைநூற்றாண்டுக்கு முன்பு, திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட விழா மலரான . ஆடல்வலான் எனும் தலைப்பிட்ட, ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் எழுதிய, நடராஜமூர்த்தம் மீதான நூலை முதல் வாசிப்பின் வழியாக அறிமுகம் செய்து கொண்டேன். ஆம் அறிமுகம் செய்து கொண்டேன் என்பதே சரியான சொல்.இனிதான் அதையும் அதைச்சார்ந்தும்  பயிலவேண்டும்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123254

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4

கியோட்டோவில் 24 அருங்காட்சியகங்களும் 37 பௌத்த ஜென், ஷிண்டோ மதப் பல்கலைக்கழகங்களும் தத்துவக் கல்லூரிகளும் உள்ளன. கிட்டத்தட்ட முன்னூறு ஆலயங்கள். இவற்றை முழுமையாக பார்ப்பதற்கு பல வாரங்கள் ஆகும் நாங்கள் கியோட்டோவின் ஒரு கீற்றை மட்டும் ஒரு நாளில் அறிமுகம் செய்துகொள்ளும் எண்ணம் கொண்டிருந்தோம். ஆகவே நகரத்தின் சாலைகளினூடாக சுற்றி வந்தோம் நகரத்தை ஓரிரு முறை சுற்றிப்பார்த்து புரிந்துகொண்டோம். ஒரு நகரம் நம்மில் ஆழ்ந்த பதிவொன்றை உருவாக்குகிறது. மனித முகங்களை அவற்றின் வெவ்வேறு சிறுகூறுகளை முன்பு அறிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123160

கலை வாழ்வுக்காக

சமீபத்தில் மறைந்த ஸ்ரீபதி பத்மநாபா, கோவையில் வாழ்ந்துகொண்டு கவிதை, மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தமிழ் இலக்கிய பரப்பில் இயங்கி வந்த ஒரு கலைஞன். அவர் மறைவிற்குப்பிறகு நமது சமூகம் அவர்கள் குடும்பத்தை கைவிட்டு விடலாகாது. ஸ்ரீபதியின் குடும்பத்திற்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் நிதி திரட்டி வருகிறார்கள். “ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா சமீபத்தில்தான் புற்றுநோய் பாதிப்பால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தேறி வந்திருக்கிறார். நன்கு படிக்கும் பெண்ணான பாரதிஅன்னைக்குப் பணிவிடை செய்ய வேண்டி கடந்த வருட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123268

Older posts «