Monthly Archive: May 2019

வங்கத்தில் என்ன நடக்கிறது?

  அன்புள்ள ஜெ,   உங்கள் தளத்தில் மேற்குவங்கம் மற்றும் கேரள இட்துசாரிகளைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். மேற்குவங்கத்தை இடதுசாரிகளின் கோட்டை என்பார்கள். அது ஏன் சரிந்தது என்பதைப்பற்றி ஒரு நல்ல ஆய்வு ஆங்கிலத்திலோ தமிழிலோ என் கண்களுக்குப் படவில்லை. உங்கள் குறிப்பு மிகப்பெரிய திறப்பை அளித்தது. அங்குள்ள சூழலை கண்முன் காட்டியது. 8 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. அதற்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிபாசுவின் இறப்பை ஒட்டி எழுதிய கட்டுரையிலேயே விரிவாக இந்த சித்திரத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122061

சென்னை, மூன்று நாவல்கள்- நிஷா மன்ஸூர்

ஞானமும் கல்வியும் நாழி அரிசிக்குள்ளே நாழி அரிசியை நாய்கொண்டு போய்விட்டால் ஞானமுங் கல்வியும் நாய்பட்ட பாடே. -சூஃபி ஞானி கல்வத்து நாயகம் ரஹிமஹுல்லாஹ் கடந்த ஆறுமாதங்களில் நான் வாசித்த நூல்களில் மூன்று முக்கியமான நூல்களைப்பற்றியும் அதையொட்டி எனக்குள் எழுந்த சிந்தனைகளையும் இந்தக் கட்டுரை மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஜெயமோகனின் “வெள்ளையானை” எஸ்.ராமகிருஷ்ணனின் “யாமம்” தமிழ்பிரபாவின் “பேட்டை”ஆகியனவே அந்த மூன்று நூல்கள். இவை மூன்றுக்கும் ஒரு ஆழமான ஒற்றுமை இருக்கிறது. சென்னை என்கிற பெருநகரத்தின் வரலாற்றை அடிநாதமாகக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121977

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48

படைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த எச்சரிக்கையை பயிற்றுநர்கள் அளித்திருந்தார்கள். சொல்லிச்சொல்லி விழிகளில் அந்தக் கூர்வு எப்போதுமே இருந்தது. காட்டுமரங்களுக்கு அப்பால் செவ்வானத்தை கண்டால்கூட உள்ளம் பற்றிக்கொள்ளும் அளவுக்கு. ஒரு கணத்திற்குப் பின் அகம் அமைந்தபோதும் அது எரி என்றே தோன்றியது. நாணிழுத்து அம்புகளைத் தொடுத்தபடியே அவன் மீண்டும் நோக்கியபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122057

தேவதேவனின் ஏஞ்சல்

தேவதேவன் கவிதைகள்- ஏஞ்சல் வாங்க ஆறு   கழுத்தளவு மூழ்கியவர்களாய் நதிப்புனலில் மனிதர்கள் நீர்ப்பூக்கள் போல் ஒளிரும் முகங்கள்   ஆற்றில் தண்ணீர் உயரமில்லை என்றால் என்ன உடம்பை ஒடுக்கிக்கொண்டால் போச்சு   உடம்பெல்லாம் நீருக்குள்ளே வைத்துக்கொண்டாலும் நீர்ப்பூப்போல் தலையை வெளியே காட்டத்தான் விருப்பம்   துயரமாய்த்தான் இருக்கிறது பசித்தவனின் வயிற்றில் கட்டிக்கொண்ட ஈரத்துணிபோல் ஆறு   யாரும் துயரக் கண்ணீர் வடிப்பதே இல்லை ஆறு தன் உடலை ஆரத்தழுவிக்கொண்டிருக்கையில்   பாதாள நதியையும் பார்த்ததில்லை ஆகாய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121247

நமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன?

அன்புள்ள ஜெ, நான் வளர்ந்தது அருமனை. அங்கே என் உறவினர்களில், கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொழிற்சங்கங்களிலும் இருப்பவர்கள் ஒரு புறம், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் மறு புறம் என்கிற சூழலில் தான் நான் வளர்ந்தேன். ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் சிறுவனாகக் கலந்து கொண்டிருக்கிறேன். விளையாட்டும், உடற்பயிற்சியும், தேசபக்தி பாடல்களுமாக கழியும் அந்தி வேளைகள் எனக்கு அப்போது மிகப் பிடித்திருந்தன. பிறகு மெல்ல வாசிக்கும் பழக்கம் ஆரம்பித்த போது இடதுசாரி சிந்தனை உள்ளவர்களே எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16742

ஊமைச்செந்நாய்- கடிதம்

  ஊமைச்செந்நாய்– 1 ஊமைச்செந்நாய் -2 ஊமைச்செந்நாய் -3 தங்களின் ஊமைசெந்நாய் குறுநாவலை வாசித்தேன்.குறுநாவல்  செம்மையாய் இருந்தது.நாவலின் தொடக்கமே, “யானை துப்பாக்கி” என ஆரம்பிக்க மொத்த நாவலுமே துப்பாக்கியும் யானையும் தான் ஆக்கிரமிக்க போகிறது என வாசகனுக்கு முன்னறிவிப்பு அளிக்கிறீர்கள்.   கதையின் நாயகனை ஊமைசெந்நாய் என உருவகப்படுத்த அவன் ஒரிரு இடங்களில் மட்டுமே பேசுவது, சிங்கத்தின் வேட்டை மிச்சத்தை செந்நாய் தின்பது போல்,துரையின் எச்ச உணவுகளை தின்பது நிகழ்த்தி காட்டியுள்ளீர்கள்.   நாவலில் பெண் பாத்திரமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122003

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-47

சல்யர் தன்னை மிகையாக காட்டிக்கொள்வதை விருஷசேனன் நோக்கினான். கைகளை வீசி உரத்த குரலில் “யாரங்கே? பின்சகடத்தின் ஆரத்தை இன்னொருமுறை பார்க்கச் சொன்னேனே? அடேய் சம்புகா, நான் வந்தேனென்றால் குதிரைச்சவுக்கு உனக்காகத்தான்” என்று கூவினார். “அறிவிலிகள், பிறவியிலேயே மூடர்கள்” என்று முனகியபடி திரும்பி வந்து ஒவ்வொரு புரவியின் வாயாக பிடித்து பிளந்து நாக்கை பார்த்தார். அவற்றின் கழுத்தை தட்டியபடி “புரவிகள் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. இன்னும் சற்று மலைமது வரட்டும்” என்றார். அதைக் கேட்டு இரு ஏவலர் விரைந்ததைக் கண்டபின்னரும் “அடேய்! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122041

கடவுளும் கவர்மெண்டும்

  கடவுளும் கவர்மெண்டும் ஒன்று அதைத் தூற்றாதே; பழி சேரும் உனக்கு. அதற்கு ஆயிரம் கண்கள்: காதுகள். ஆனால் குறையென்றால் பார்க்காது கேட்காது கை நீளும்; பதினாயிரம் கேட்கும், பிடுங்கும். தவமிருந்தால் கொடுக்கும். கவர்மெண்ட் பெரும் கடவுள் அதைப் பழிக்காதே பழித்தால் வருவது இன்னும் அதிகம் கவர்ன்மெட்தான்.   கி. கஸ்தூரி ரங்கன் [ஆகஸ்ட் 1965]

Permanent link to this article: https://www.jeyamohan.in/122037

தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக்

தமிழாக்கம் டி ஏ பாரி   டாக்டர் லேப்ரின் கண்களை மங்கலாக மூடியவாறே தனது புல்வெளி நாற்காலியில் சாய்ந்தார். போர்வையை முழங்காலுக்கு மேலே இழுத்துவிட்டுக்கொண்டார்.   ”அதாவது?” நான் பேச்சுக் கொடுத்தேன். இறைச்சி சுடும் கனலடுப்பின் அருகே நின்று என் கைகளை தேய்த்துக் கொண்டிருந்தேன். அதுவொரு தெளிவான குளிர்நாள். லாஸ் ஏஞ்சல்ஸின் பிரகாசமான வானத்தில் கிட்டத்தட்ட மேகங்களே இருக்கவில்லை. லேப்ரினுடைய அந்த நடுவாந்திரமான வீட்டுக்குப் பின்னால் மலையடிவாரத்தின் எல்லை வரை மரங்கள் அடர்ந்த பசுமையின் நீட்சி இருந்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121958

ஜப்பான் – ஷாகுல் ஹமீது

  ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,   தற்போது கப்பல் காரன் டைரி என சில கப்பல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறேன் .ஜப்பான் குறித்து எனது பார்வையை எழுதவேண்டுமென நினைத்து நீண்ட நாட்களாக தள்ளிப்போய்கொண்டிருந்தது.உங்கள்  ஜப்பான் பயணம் பற்றி தளத்தில் கண்டதும் நீங்கள் ஊர் திரும்பும் முன் எழுதிவிட வேண்டுமென நினைத்ததால் எழுந்த வேகத்தில் எழுதிய பதிவு இது .   அன்புடன் , ஷாகுல் ஹமீது . டோக்கியோ உரை பற்றி… ஜப்பானிலிருந்து திரும்பினோம்…   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121974

Older posts «

» Newer posts