Daily Archive: May 29, 2019

உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்

[2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா வரும் ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் தக்கர்பாபா அரங்கில் நிகழ்கிறது. மதியம் 2 மணிமுதல் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கும் மாலை 6 மணிமுதல் விருதளிப்புவிழாவும் நடைபெறும்] இருபத்தெட்டாண்டுகளுக்கு முன்பு எர்ணாகுளத்தில் ஓர் இலக்கியவிவாத அரங்கில்  பேராசிரியர் எம்.என்.விஜயன் அவர்கள் ‘இலக்கியத்தின் உளவியல் மாதிரிகள்’ என்னும் தலைப்பில் பேசினார். பேராசிரியர் ஃப்ராய்டின் மேல் பெரும் ஈடுபாடுகொண்டவர். மார்க்ஸியர். “அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122099

மலைகளை அணுகுதல், இன்னொரு பதிவு- விஜயபாரதி

மலைகளை அணுகுவது ஊட்டி காவிய ஆய்வரங்கு நடந்து முடிந்த மூன்றாம் நாள் மாலை குடிலின் முன்னறையில் அறுவர் அமர்ந்திருந்தோம். உள்ளறைக்கு வந்து திரும்பிச்சென்ற ஓர் இளைஞரைச் சுட்டிக்காட்டி “சென்ற முறை ஊட்டி காவிய ஆய்வரங்குக்காக இங்கு வந்தவர். குருகுலத்திலேயே தங்கிவிட்டார்.” என்றனர். அதிர்ச்சியாக இருந்தது. அந்த இளைஞர் மறுமுறை கடந்து சென்றபோது ஓரிரு வார்த்தைகள் பேசினார். அவர் குரு முனி நாராயண பிரசாத்துடன் கேரளா செல்லப்போவதாக நினைவு. இம்முறை பங்கேற்ற 110 பேரில் அங்கேயே தங்கிவிடும் யாரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122110

சொல்முகம் வாசகர் குழுமம் – கோவை

  அன்புள்ள ஜெ., நலம்தானே? தங்கள் ஜப்பான் பயணம் இனிதே நிறைவுற்றது குறித்து மகிழ்ச்சி. கோவையில் ஒரு “புக் ரீடர்ஸ் கிளப்” தொடங்குவதென்பது நீண்ட நாட்களாக மனதில் உருட்டிக் கொண்டிருந்த ஒரு எண்ணம். பல முறை இதைப் பற்றி பேசியும் செயல்படுத்த முடியாமல் போனது. நமது நண்பர்கள் சென்னையிலும் பாண்டியிலும் வெண்முரசு கூட்டங்களை மாதம்தோறும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கிறார்கள். ஆனால் விஷ்ணுபுர வாசக வட்டம் மையம் கொண்டிருக்கும் கோவையில் வாசிப்பை முன்வைத்து தொடர்ச்சியான கூட்டங்களை நடத்த முடியாமலாகிக் கொண்டிருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122103

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50

அனல் பெருகிநின்ற குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் விஜயத்தை கையிலேந்தியவனாக அர்ஜுனன்மேல் அம்புடன் எழும்பொருட்டு திரும்பிய கர்ணனிடம் சல்யர் துயரும் ஆற்றாமையுமாக சொன்னார் “மைந்தா, என் சொற்களை கேள். நான் பெரிதும் கற்றறிந்தவன் அல்ல. நான் ஈட்டியவையும் குறைவே. ஆனால் எத்தனை எளியோன் ஆயினும் ஒவ்வொரு தந்தையும் தன் மைந்தனுக்கு அளிக்கும் பிறிதில்லாத மெய்மை என ஒன்று உண்டு. அதை நான் உனக்கு அளிக்கிறேன். கேள்.” கர்ணன் நாணொலி எழுப்பி “செல்க… அவனை இன்றே கொல்கிறேன், செல்க!” என்றான். “அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122153