Daily Archive: May 28, 2019

உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்

‘தற்செயல் என்பது ஒரு சொகுசு அல்ல, அது விதியின் மறுபக்கம், அதைத் தவிரவும் வேறேதோவும்கூட… மறு எல்லையில் தற்செயல் என்பது பூரண சுதந்திரம். தற்செயல் எந்த விதிகளுக்கும் உட்பட்டதில்லை, ஒருவேளை அப்படியே கட்டுப்பட்டாலும் அவை எவை என்று நாமறிய முடியாது. தற்செயல், இந்த உவமையை பயன்படுத்த நீங்கள் அனுமதித்தால், நமது கோளில் ஒவ்வொரு நொடியும் கடவுளின் இருப்பை பறை சாற்றுவதை போன்றது. நோக்கமற்ற கடவுள் நோக்கமற்ற சமிக்ஞைகளை நோக்கமற்ற ஜீவராசிகளை நோக்கிப் புரிகிறார்.’ – ராபர்டோ போலனோ, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122027

ச. துரை- ஐந்து கவிதைகள்

[2019 ஆண்டுக்கான -குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா வரும் ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் தக்கர்பாபா அரங்கில் நிகழ்கிறது. மதியம் 2 மணிமுதல் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கும் மாலை 6 மணிமுதல் விருதளிப்புவிழாவும் நடைபெறும்]       சற்றே உங்கள் பாழடைந்த குகைப்பூதங்கள் ங்கள் முன் தோன்றுவதை நிறுத்துங்கள் தேவனே என்ன வேண்டும் கூறுங்கள் கூறுங்கள் என நச்சரிக்கின்றன நிலத்தின் மொழியைக் கேளுங்கள் அவற்றில் ரத்தமில்லை நரபலியில்லை தோட்டாக்களில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122073

தோப்பில் – கடிதங்கள்

அஞ்சலி- தோப்பில் தோப்பில் முகமது மீரானுக்கு ஓர் இணையதளம் மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.   “ஆங்….கேட்டியா பிள்ளே..” எனும் வகையில் உரிமையோடு நம் கையில் தோள்போட்டுக் கதை சொல்லும் யதார்த்தவாதியாகவே நான் தோப்பில், ஆ. மாதவன் மற்றும் நாஞ்சில் ஆகியோரைக் காண்கிறேன்.  “சாய்வு நாற்காலி”யும் அடூரின் எலிப்பத்தாயமும் ஒன்றெனவேத் தோன்றும். நாற்காலியில் சாய்ந்தபடி இருக்கும் போதே உலகம் அசுர வேகத்தில் காலடியில் நழுவிச் செல்வதை அடூரும் தோப்பிலும் சொல்லியிருப்பர். அதிகம் பதிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122015

நீதிக்கான சோதனை

    இனிய ஜெயம்   வாரம் ஒரு முறை,செய்திகளை [தலைப்பு செய்திகளை மட்டும்] மேய்வது எனது வழக்கம். இந்த வாரம் நான் கண்ட சுவாரஸ்யமான, பொது ஊடகங்கள் பெரிதாக கவனம் செலுத்தாத, [ பிரான்சிஸ் க்ருபா, கொலை,மர்மம், திடுக்கிடும் செய்திகள், கூப்பாட்டில் ஒரு சதவீதம் கூட இதற்க்கு இல்லை] செய்தி இது.   http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62981-no-one-has-won-the-district-justice-exam-in-first-section.html   தமிழகம் முழுதும், முப்பத்தி ஒன்று மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான காலி இடங்களை நிரப்ப, நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122007

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49

ஒன்பதாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான சார்ங்கர் தன் கையிலிருந்த பித்தளைக் கம்பியை வளைத்துச் செய்ததுபோன்ற சிறிய இசைக்கலனை உதடுகளுடன் பொருத்தி, நாவாலும் உதடாலும் அதை மீட்டி, சிறு தவளைகள் போலவும் வண்டுகள் சேர்ந்து விம்மலோசை எழுப்புவது போலவும் அதை இசைத்து, போர்க்களத்தின் காட்சியை விரித்துரைக்கலானார். பிற சூதர்கள் அவருடன் இணைந்துகொண்டனர். அங்கு குருக்ஷேத்ரத்தின் பதினேழாவது நாள் போர்க்களம் மீண்டும் நிகழ்வதுபோல் தொட்டுவிரிந்து அகன்று அலைகொள்ளும் காட்சிகளென விரிந்தது. அவர்களின் சொற்களின் நடுவே பந்தங்களின் ஒளியில் உடலெங்கும் அணிச்சுடர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122134