Daily Archive: May 27, 2019

ச.துரை – நான்கு கவிதைகள்

[2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா வரும் ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் தக்கர்பாபா அரங்கில் நிகழ்கிறது. மதியம் 2 மணிமுதல் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கும் மாலை 6 மணிமுதல் விருதளிப்புவிழாவும் நடைபெறும்]         எங்களுடைய உவர் நிலத்தில் வெட்டுண்ட காய்ந்த மரத்தி ஒருத்தி இருக்கிறாள் ஏழடி இருப்பாள் எனக்குத்தெரிய முக்கால் ஆண்டுகளாக ஒரே இடத்தில் அலைபார்க்கிறாள் காற்று வாங்குகிறாள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122070

அஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக்

தமிழாக்கம் டி.ஏ.பாரி   அன்பின் ஜெ,   இம்மொழியாக்கத் தொடரில் ஒரு இலகுவான கதையை தேர்வு செய்யலாம் என்று யோசித்தவுடன் முதலாவதாக நினைவுக்கு வந்த பெயர் ஸ்டீபன் லீகாக். முன்பு தளத்தில் வந்திருந்த இப்பதிவின்  மூலமே இவரை அறிந்தேன். அப்போது இக்கதை என்னுள் பெரும்சலனம் எதுவும் ஏற்படுத்தாவிட்டாலும் பகடிக் கதை என்ற அளவில் நினைவில் நீடித்தது. இப்போது மீண்டும் வாசிக்கையிலும் இக்கதைக்கான மனநிலையுடன் வாசித்தால் நல்ல கதையாகவே பட்டது. மொழியாக்கத்தை பகிர்ந்த போது சில நண்பர்கள் இக்கதை சற்றே சுமாரானதாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122051

வங்கத்தில் என்ன நடக்கிறது?

  அன்புள்ள ஜெ,   உங்கள் தளத்தில் மேற்குவங்கம் மற்றும் கேரள இட்துசாரிகளைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். மேற்குவங்கத்தை இடதுசாரிகளின் கோட்டை என்பார்கள். அது ஏன் சரிந்தது என்பதைப்பற்றி ஒரு நல்ல ஆய்வு ஆங்கிலத்திலோ தமிழிலோ என் கண்களுக்குப் படவில்லை. உங்கள் குறிப்பு மிகப்பெரிய திறப்பை அளித்தது. அங்குள்ள சூழலை கண்முன் காட்டியது. 8 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. அதற்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிபாசுவின் இறப்பை ஒட்டி எழுதிய கட்டுரையிலேயே விரிவாக இந்த சித்திரத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122061

சென்னை, மூன்று நாவல்கள்- நிஷா மன்ஸூர்

ஞானமும் கல்வியும் நாழி அரிசிக்குள்ளே நாழி அரிசியை நாய்கொண்டு போய்விட்டால் ஞானமுங் கல்வியும் நாய்பட்ட பாடே. -சூஃபி ஞானி கல்வத்து நாயகம் ரஹிமஹுல்லாஹ் கடந்த ஆறுமாதங்களில் நான் வாசித்த நூல்களில் மூன்று முக்கியமான நூல்களைப்பற்றியும் அதையொட்டி எனக்குள் எழுந்த சிந்தனைகளையும் இந்தக் கட்டுரை மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஜெயமோகனின் “வெள்ளையானை” எஸ்.ராமகிருஷ்ணனின் “யாமம்” தமிழ்பிரபாவின் “பேட்டை”ஆகியனவே அந்த மூன்று நூல்கள். இவை மூன்றுக்கும் ஒரு ஆழமான ஒற்றுமை இருக்கிறது. சென்னை என்கிற பெருநகரத்தின் வரலாற்றை அடிநாதமாகக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121977

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48

படைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த எச்சரிக்கையை பயிற்றுநர்கள் அளித்திருந்தார்கள். சொல்லிச்சொல்லி விழிகளில் அந்தக் கூர்வு எப்போதுமே இருந்தது. காட்டுமரங்களுக்கு அப்பால் செவ்வானத்தை கண்டால்கூட உள்ளம் பற்றிக்கொள்ளும் அளவுக்கு. ஒரு கணத்திற்குப் பின் அகம் அமைந்தபோதும் அது எரி என்றே தோன்றியது. நாணிழுத்து அம்புகளைத் தொடுத்தபடியே அவன் மீண்டும் நோக்கியபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122057