Daily Archive: May 25, 2019

கடவுளும் கவர்மெண்டும்

  கடவுளும் கவர்மெண்டும் ஒன்று அதைத் தூற்றாதே; பழி சேரும் உனக்கு. அதற்கு ஆயிரம் கண்கள்: காதுகள். ஆனால் குறையென்றால் பார்க்காது கேட்காது கை நீளும்; பதினாயிரம் கேட்கும், பிடுங்கும். தவமிருந்தால் கொடுக்கும். கவர்மெண்ட் பெரும் கடவுள் அதைப் பழிக்காதே பழித்தால் வருவது இன்னும் அதிகம் கவர்ன்மெட்தான்.   கி. கஸ்தூரி ரங்கன் [ஆகஸ்ட் 1965]

Permanent link to this article: https://www.jeyamohan.in/122037

தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக்

தமிழாக்கம் டி ஏ பாரி   டாக்டர் லேப்ரின் கண்களை மங்கலாக மூடியவாறே தனது புல்வெளி நாற்காலியில் சாய்ந்தார். போர்வையை முழங்காலுக்கு மேலே இழுத்துவிட்டுக்கொண்டார்.   ”அதாவது?” நான் பேச்சுக் கொடுத்தேன். இறைச்சி சுடும் கனலடுப்பின் அருகே நின்று என் கைகளை தேய்த்துக் கொண்டிருந்தேன். அதுவொரு தெளிவான குளிர்நாள். லாஸ் ஏஞ்சல்ஸின் பிரகாசமான வானத்தில் கிட்டத்தட்ட மேகங்களே இருக்கவில்லை. லேப்ரினுடைய அந்த நடுவாந்திரமான வீட்டுக்குப் பின்னால் மலையடிவாரத்தின் எல்லை வரை மரங்கள் அடர்ந்த பசுமையின் நீட்சி இருந்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121958

ஜப்பான் – ஷாகுல் ஹமீது

  ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,   தற்போது கப்பல் காரன் டைரி என சில கப்பல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறேன் .ஜப்பான் குறித்து எனது பார்வையை எழுதவேண்டுமென நினைத்து நீண்ட நாட்களாக தள்ளிப்போய்கொண்டிருந்தது.உங்கள்  ஜப்பான் பயணம் பற்றி தளத்தில் கண்டதும் நீங்கள் ஊர் திரும்பும் முன் எழுதிவிட வேண்டுமென நினைத்ததால் எழுந்த வேகத்தில் எழுதிய பதிவு இது .   அன்புடன் , ஷாகுல் ஹமீது . டோக்கியோ உரை பற்றி… ஜப்பானிலிருந்து திரும்பினோம்…   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121974

விஷ்ணுபுரம் கடிதம்

விஷ்னுபுரம் நாவல் வாங்க https://vishnupuram.com/ ஜெயமோகன் ,   எப்படி இந்த பேரூவகையை வார்த்தைகளில் கடத்துவது என தெரியவில்லை. விஷ்ணுபுரம் நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். எட்டு நாட்கள் நூறு நூறு பக்கங்கள் என கணக்கிட்டு அண்ணா நூலகத்தில் அமர்ந்து வாசித்து முடித்தேன். கடந்து போகவே முடியாத கனவு என்று இந்த நாவலை நினைத்திருந்தேன். இந்த விடுமறை அந்த கனவை சாத்தியப்படுத்திவிட்டது.   சேமித்து வைக்கப்பட்ட வாசிப்பின் அற்றலை இந்த நாவல் கோருகிறது. அந்த ஆற்றல் வெறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121971

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46

மென்மழை நின்றுகொண்டிருந்த குருக்ஷேத்ரக் களத்தில் கௌரவப்படைகள் அணிவகுத்து சூழ்கை அமைத்தன. படைக்கலங்களும் தேர்களின் உலோகமுகடுகளும் ஒளியென்றும் மெல்லிருளென்றும் மாறி மாறி விழிமாயம் காட்டிய நீர்த்திரைக்குள் மின்னி திரும்பின. புரவிகளின் குளம்படி ஓசைகளும் சகட ஒலிகளும் ஆணைகளின் பொருட்டு எழுந்த கொம்பொலிகளும் சங்கொலிகளும் நீர்த்திரையால் மூடப்பட்டு மழுங்கி கேட்டன. கூரையிடப்பட்ட காவல்மாடங்களில் எழுந்த முரசொலிகள் இடியோசைகளுடன் கலந்து ஒலித்தன. முரசுத்தோற்பரப்பு சாரல் ஈரத்தில் மென்மை கொள்ளாதிருக்கும்பொருட்டு காவல் மாடத்தில் அனல்சட்டிகளை கொளுத்தி தோலை காய்ச்சிக்கொண்டிருந்தார்கள். மழைக்குள் நூற்றுக்கணக்கான காவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122019