Daily Archive: May 22, 2019

அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்

(2019 ஊட்டி குரு நித்யா காவிய முகாமில் சுசித்ரா பேசியதன் கட்டுரை வடிவம்)   அறிவியல் புனைகதை என்ற வடிவை பற்றி சுறுக்கமாக பேசி அதனை ஒட்டி ஒரு விவாதத்தை முன்னடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். அறிவியல் புனைகதை என்ற இலக்கிய வடிவம் அடிப்படையில் நவீன அறிவியலைச் சார்ந்து உருவாகி வந்துள்ள ஒன்று. நவீன அறிவியல் மேற்கத்திய அறிவியக்கத்தின் குழந்தை. மேற்கத்திய அறிவியக்க வரலாற்றை புரிந்துகொள்ளாமல் அறிபுனையின் இடம், அதற்கான வரலாற்றுத் தேவை,  அதன் வகைமைகள், எல்லைகளை நோக்கிச் செல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121933

திருமாவளவன் ஒரு கடிதம்

விடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம் அன்புள்ள ஜெ,   திருமாவளவன் அவர்களை ஆதரிப்பது குறித்து நீங்கள் வெளியிட்ட விளக்கத்தின் இறுதி வரிகள் சற்று சங்கடப் படுத்தின. நீங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.  நான் உறுதியான பாஜக ஆதரவாளன்.  இந்தியாவில் தலித்துகளுக்கு இன்று உண்மையில் ஆதவரான கட்சி பாஜக தான் என நம்புகிறேன். பஸ்வான் முதல் கிருஷ்ண சாமி வரை பெரும்பாலான தலித் தலைவர்கள் பாஜக ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர். திருமாவளவனும் பாஜக கூட்டணியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121715

துங்கா நதிக்கரை ஓரத்திலே

  சில ராகங்களுக்கு ஒரு மலையாளத்தன்மை உண்டு. அவற்றை மலையாளத்தின் நாட்டார் பாடல்கள் மிகுதியாகப் பயன்படுத்துவதுதான் காரணமாக இருக்கலாம். இந்தப்பாடல் எனக்கு ஒரு மலையாளப்பாடலாகவே ஒலித்தது. பி.சுசீலா பாடி 2005 ல் வெளிவந்த அம்மன் இசைமலர்  என்ற தொகையின் எல்லா பாடல்களுமே பெரும்புகழ்பெற்றவை. பெரும்பாலும் செவிகளில் விழுந்துகொண்டே இருப்பவை. அவற்றில் இரு பாடல்கள் எனக்கு பிடித்தமானவை. இன்னொரு பாடல்  ‘தாய்வீடு சமயபுரம்’   இந்தப்பாடல்களின் இசை மரபானது. [இசை குன்னக்குடி வைத்யநாதன்] இசைக்கோப்பும் சாதாரணம். சுசீலாவின் குரலால்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121951

பிரபஞ்ச மௌனம்- கடிதம்

பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங் அன்பு ஜெயமோகன்,   பாரியின் மொழிபெயர்ப்பில் வெளியான பிரபஞ்ச மெளனம் சிறுகதையை வாசித்தேன். குரலின் மெளனம்எனும் தலைப்பு பொருத்தமானதாக இருக்கும் எனத் தோன்றியது.   மிக மிக எளிய கதை; ஐந்து நிமிடங்களில் வாசித்துக் கடந்து விடலாம். அக்கதைக்குள் அமர்ந்து கொண்டு நமக்கு அதைச் சொல்லிக் கொண்டிருந்த கிளியின் குரலை அப்படி கடந்துவிட முடியுமா? என்னால் இயலவில்லை.   கிளி என்றதும் நினைவுக்கு வருவது குரல்தான். அவ்வகையில் அதன் குரலிலேயே கதை துவங்குவது சிறப்பு. பறவைகளில் அறிவுக்கூர்மையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121784

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43

குருக்ஷேத்ரத்திற்கு தென்கிழக்காக செறிந்த காட்டிற்குள் அமைந்த சிறு ஊற்றுக்கண் சூரியதாபினி என்று அழைக்கப்பட்டது. அங்கு அரிதாக சில நிமித்திகர்களும் விண்ணுலாவியை வழிபடும் யோகியரும் ஒழிய பிறர் எவரும் செல்வதில்லை. அவ்வாறொன்று அங்கிருப்பது நிமித்த நூல்களில் மட்டுமே இருந்தது. முள்செறிந்த காட்டுக்குள் வழி தேடி அங்கு செல்வது எளிதாக இருக்கவில்லை என்பதனால் அவ்வாறொன்று இருப்பதையே கற்பனை என்று பெரும்பாலானோர் எண்ணினர். அது கற்பனை என்பதனால் ஆழ்ந்த பொருளை அதற்கு அளித்து, உருவகமென வளர்த்து, பிறிதொன்று என்று ஆக்கி பிறிதொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121867