2019 May 20

தினசரி தொகுப்புகள்: May 20, 2019

இறைவிருப்பம்

   கவிஞர் வயலார் ராமவர்மா குருவாயூர் கோவில் மேற்குவாசல்முன் நின்றுகொண்டிருந்தார். ஒரு சிகரெட் பற்றவைத்து இழுத்து புகைவிட்டு குருவாயூரப்பனைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அதைக்கண்டு காவலாள் ஓடிவந்தார். ''அய்யோ சார், இங்கே புகைபிடிக்கக் கூடாது...அபச்சாரம்...பாவம்''....

மலேசியாவிலிருந்து ஊட்டி முகாமுக்கு… – பவித்தாரா

இலக்கியத் துறையில் நான் எடுத்து வைக்கும் முதல் சில அடிகளை அழகான நினைவுகளாக பாதுகாக்கிறது, விமர்சனப் போட்டியில் வென்றதற்காக வல்லினம் திட்டமிட்டுத் தந்த ஊட்டி முகாம். விமானப் பயணம், இந்திய பூமி,...

யானை – கடிதங்கள்

இலஞ்சி ஆலய யானை இறப்பு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நெல்லையப்பர் கோயிலுக்கு சில நாள்களுக்கு முன் சென்றிருந்தபொழுது அங்குள்ள யானை காந்திமதி சூழல் வெப்பத்தால் மிகவும் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் தும்பிக்கையால் உடலில் ஊதிக்கொணுடிருந்தது. கண்ணில் ஒளியே...

மலைக்காட்டுப் பிச்சாண்டி

சீ.முத்துசாமி தமிழ் விக்கி உலகிலேயே மிக மோசமான வன்முறை என்பது ஒரு மனிதன் தான் பிறந்து வாழ்ந்த நிலத்தை விட்டு முற்றிலும் அந்நியமான வேறொரு நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்படுவதுதான். போர்கள், பஞ்சங்கள், அதிகாரத்தின் அடக்குமுறைகள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-41

புலரிச்சங்கொலி எழுந்தபோது கௌரவப் படைகளுக்குள் எந்த அசைவும் ஏற்படவில்லை. சுபாகு  தலையில் பாயாலான மழைமூடியை கவிழ்த்துக்கொண்டு காவல்மாடத்தின்மீது சாய்ந்த மழைச்சரடுகளுக்கு சற்றே குனிந்து உடல்கொடுத்து நின்றிருந்தான். புலரிமுரசு அமைந்த பின்னரும் படை அசைவிலாதிருக்கக்...