Daily Archive: May 19, 2019

டோக்கியோ உரை பற்றி…

  ஜெயமோகனின் ஜப்பான் வருகை பற்றி சமூக வலைத்தளத்தில் அறிவித்த சில நாட்களில், அவரது படைப்புகளை நேசிக்கும் நண்பர்கள், தொடர்ந்து உரைக்காக உருவாக்கப்பட்ட குழுவில், இணைந்தார்கள். தோக்கியோ கித்தா கசாய் சமூக அரங்கில் சென்ற ஞாயிறு (12-05-2019) அன்று நடந்த ஜெயமோகனின் உரைக்கு மொத்தம் நாற்பத்தி ஐந்து பேர் வந்திருந்தார்கள். அனைவரும், அவரது படைப்புகளை படித்த வாசகர்கள். ஜெயமோகனின் தோக்கியோ இலக்கிய உரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/121871

மரபும் மாற்றமும்- இரு கவிதைகள், அந்தியூர் மணி

[அந்தியூர் மணி ஊட்டி குரு நித்யா அரங்கில் முன்வைத்த இரு மரபுக்கவிதைகளும் அவற்றின் மீதான வாசிப்பும்] நண்பர்களே,   ஊட்டி காவிய முகாமில் நடந்த என்னுடைய மரபுக் கவிதை பற்றிய அரங்கில் நான் தேர்ந்தெடுத்து என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட இரு பாடல்களை பற்றி விளக்கமாக கட்டுரை வடிவில் எழுதுமாறு ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டார். ஆகவே நான் தேர்ந்தெடுத்த இரண்டு பாடல்களையும் அதனுடைய விளக்கங்களையும் இந்த கட்டுரையாக்குகிறேன். 1.புறநானூறு.பாடல்-12 பாடியவர் : நெட்டிமையார். பாடப்பட்டோன் : …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121682

லோகி பற்றி…

வாழ்க்கை எனும் அமுதத்துளி அன்புக்குரிய ஜெ அவர்களே, ‌ வழக்கம்போல காலையில் அலுவலகத்தில் நுழைந்து கணினியை தூக்கத்திலிருந்து தட்டிஎழுப்புவதற்க்கு முன்னால் உங்களது வலை தளத்தை திறந்து வாசித்து செல்வது வழக்கம்.இன்றும் காலை அதை தொடர்ந்தேன் ஆனால் சில நொடிகளிலே நான் கண்ணீர் மல்க அழுதுவிட்டேன்,காரணம் லோகிதாதாஸ் என்ற மிகசிறந்த படைப்பாளியின் செங்கோல் என்ற படத்தில் வரும்” மதுரம் ஜீவாம்ருத பிந்து” பாடல் காட்சியில் அதன் முக்கிய கதாபாத்திரமான சேதுமாதவனின்  வாழ்வில் ஏற்படும் வேதனையான சந்தர்பங்களில் மோகன்லால் அவர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121816

கங்கைக்கான போர் -கடிதம்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர் ஏன் எதிர்வினையாற்றவில்லை, ஏன் சுரனையற்று போனது என்ற உங்களின் கேள்விக்கு முட்டி கொண்ட தன்மை தான்.  இன்று வந்த நவீன் கடிதம் ஆசுவாசம் தந்தது. ஆம் ராகவேந்திரன் சொன்னது போல சாமனியர்களின் சூன்யவாழ்க்கையில் இவைகளை எடுத்த செல்ல முடியவில்லை.இந்த சுழல் உழல் வாழ்வின் ஒட்டங்களில், ஸ்டாலின் போன்றவர்களின் தேடல், அவர்களின் பயணம்-பதிவு- புத்தகம் என்பவைகளும் இத்தகைய இறப்புகளும் தூரமாக, எட்ட முடியாத லட்சிய வாழ்வாக மின்னுகிறது. ஆற்றாமையை எட்டிப்பார்க்க வைக்கின்றன். இத்தனை சுத்திகரிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121217

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-40

ஏழாவது களமான துலாவில் அமர்ந்திருந்த சமன் என்னும் சூதர் தன் முறை வந்ததை உணர்ந்து நீள்குழலை எடுத்து வாயில் பொருத்தி அதன் பன்னிரு துளைகளில் விரலோட்டி சுழன்று சுழன்றெழும் கூரிய ஓசையை எழுப்பி நிறுத்தி தன் மெல்லிய குரலை அதன் மீட்டலென தொடரச்செய்து சொல்லாக்கி, மொழியென விரித்து கதை சொல்லத் தொடங்கினார் “தோழரே கேளுங்கள், இது பதினேழாவது நாள் போரின் கதை.” முந்தைய நாள் இரவு முழுக்க ஓங்காது ஒழியாது குருக்ஷேத்ரத்தின் படைவிரிவின்மீது மென்மழை நின்றிருந்தது. அனைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121835