16-5-2019 அன்று காலை டோக்கியோவில் இருந்து கிளம்பினோம். இரவு 110 மணிக்கு சென்னை. காலவேறுபாட்டால் கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் மிச்சமானதனால் ஒருநாள் பயணம். விமானநிலையத்திற்கு சண்முகம் ரகு ஆகியோர் வந்திருந்தார்கள். டோக்கியோ பயணம் என் நண்பரும் ஜப்பான் முழுமதி அமைப்பின் பொறுப்பாளருமான செந்தில் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்தது. செந்தில் நெடுங்காலமாக என் நண்பர். விஷ்ணுபுரம் வட்டத்தைச் சேர்ந்தவர். செரிபிளாஸம் பார்க்கச் செல்வதாக எண்ணம். ஆனால் அவர் அழைத்தபோது செல்லமுடியவில்லை. ஊட்டி நிகழ்ச்சி ஊடே வந்தது. இருமுறை …
Daily Archive: May 18, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/121846
மரபிலக்கியக் கவிதைகள்-ஜெயகாந்த் ராஜு
இலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு [ஊட்டி குரு நித்யா ஆய்வரங்கில் மரபிலக்கிய விவாத அமர்வில் ஜெயகாந்த் ராஜு முன்வைத்துப் பேசியது] ஒருமொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங் கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய் கருமொழியிங் குனக்கில்லை மொழிக்கு மொழி ருசிக்கக் கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங் கண்டனை மேல் தருமொழி யிங்குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத் தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே. -தாயுமானவர். பொருள்: குருவின் உபதேச மொழி அல்லது மந்திரம் பற்பல சிந்தனைகளுக்கும், அனுபவங்களுக்கும், ஆன்மீக சாதனைகளுக்கும் இடங் கொடுக்கும். அந்த உபதேசமொழியானது நம்முடைய சந்தேகங்களையெல்லாம் நீக்கி, மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயைகளை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/121780
விஷ்ணுபுரம் கடிதம்
விஷ்னுபுரம் நாவல் வாங்க https://vishnupuram.com/ அன்புள்ள ஜெயமோகன், விஷ்ணுபுரம் வாசித்த பின்னர் ஒரு மாபெரும் கனவு போல் சொற்கள் மட்டுமே என்னுள் நிறைந்துள்ளது. விஷ்ணுபுரம் சார்ந்த அனைத்தினையும் சங்கர்ஷனின் “பத்மபுராணம்” சார்ந்த உரையாடல்கள் வாயிலாக நீங்களே வினவி, ஆராய்ந்து, விவரித்து, மறுத்து, ஆதரித்து, விளக்கியும் உள்ளீர்கள். அது வாசகர்களை பெரும் உவப்பிற்குள்ளாக்குகிறது. இப்படி ஒரு மாபெரும் கனவை, ஒரு காவிய நகரை எழுத்தை தூரிகையாக்கி வாசகர்களின் மனதுள் தீட்டி, அதனை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/121598
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39
யுதிஷ்டிரன் தளர்ந்த குரலில் “பிறகென்ன? உன் விருப்பப்படி நிகழட்டும். நீ எண்ணுமிடத்தை சென்று எய்துக அனைத்தும்!” என்றார். இளைய யாதவர் புன்னகை மாறாமுகத்துடன் “அதுவே நிகழும்” என்றார். மீண்டும் அவையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. அர்ஜுனன் திருஷ்டத்யும்னனிடம் “பாஞ்சாலரே, நாளைக்கான படைசூழ்கைகளை வகுத்துள்ளீர்களா?” என்றான். “நான் எதையும் இதுவரை எண்ணவில்லை. படைசூழ்கை என ஒன்று இனி பெரிதாக தேவைப்படும் என்றும் தோன்றவில்லை. நம் படைகள் நம் விழிவட்டத்திற்குள்ளேயே இப்போது திரண்டுள்ளன” என்றான். “ஆனால்…” என சாத்யகி சொல்ல …
Permanent link to this article: https://www.jeyamohan.in/121793