Daily Archive: May 17, 2019

லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்

  அன்புள்ள ஜெ,   இங்கிலாந்தில் வசிக்கும் , தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் உள்ள நண்பர்கள் இணைந்து  ‘லண்டன் தமிழ் இலக்கிய குழுமம் ‘ என்ற அமைப்பை ஜுன் ஒன்றாம் தேதி தொடங்குகிறோம்.   இந்த அமைப்பின் நோக்கம் வாசிப்பில் ஆர்வமிருக்கும் நண்பர்கள் ஆர்வம் உள்ள  மற்ற நண்பர்களுடன் கலந்துரையாட வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை பற்றிய உரையாடல்கள் மற்றும் விமர்சன கூட்டங்களை ஒருங்கிணைப்பதுமாகும்.   தொடக்க விழாவன்று விமர்சனம் மற்றும் கலந்துரையாடலுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121753

ஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு

மலைகளை அணுகுவது ஊட்டி சந்திப்பு – நவீன் ஊட்டி சந்திப்பு -சிவமணியன் ஊட்டி குருநித்யா இலக்கியக் கருத்தரங்குக்கு செல்வதில் உள்ள சிக்கல் பேருந்தில் பயணம் செய்யவேண்டும் என்பதுதான். முன்பெல்லாம் அது எனக்கு ஒரு பிரச்சினையே அல்ல. இப்போது கழுத்துவலி, இடுப்பு வலி. கோவை வரை ரயிலில் வந்து பேருந்தில் செல்லலாம். ஆனால் கோவை ரயில் காலை 7 மணிக்கே வரும். அதன்பின் கிளம்பினால் 11 மணிக்கே ஊட்டி செல்லமுடியும். ஒருநாள் முன்னரே வந்து தங்கலாம். அருண்மொழி, சைதன்யா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121757

மலைகளை அணுகுதல் – கடிதங்கள்

மலைகளை அணுகுவது அன்புள்ள ஜெ வணக்கம்…   சைதன்யாவின் கடிதம் வாழ்வின் இரண்டு முக்கியமான பகுதிகளை குறித்து சிந்திக்க வைத்தது.   நான் பிறந்தது முதல் 18 வயது வரை வாழ்ந்த ஒரு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் அங்கே சென்றபோது அடைந்தது கடும் ஏமாற்றமே.   குழந்தைப் பருவத்திலும் முதிரா இளமையிலும் உயிரியக்கத்தின் உச்ச வேகத்தில் கனவுகளும் ,கற்பனைகளும், வெடித்துப் பரவி வாழ்ந்திருந்த தெருக்களிலும்,  உடனாடிய பழைய நண்பர்களையும், காண்கையில் அவைகள் எல்லாம் வேறு ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121750

திராவிட இயக்கம் – கடிதம்

  மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   நான் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவள். உங்களுடைய படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்களுடைய எழுத்தாற்றலுக்கு ஈடாக உங்களுடைய துணிச்சலும் நேர்மையும் என்னை கவர்ந்த பண்புகள். குறிப்பாக நீங்கள் திராவிட இயக்கம் பற்றிய கருத்துகள் மிக முக்கியமானவை. திராவிட இயக்கத்தின் போலித்தனம், முரட்டுத்தனம், மோசடித்தனம் பொய் பித்தலாட்டங்கள் என்னைப் போன்றவர்களை விலகி நிற்க வைக்கின்றன.   என் பணியிடத்தில் இதை அனுபவித்து உள்ளேன். ஆண் ஆசிரியர்கள் (குறிப்பாக தமிழ்) திராவிட இயக்கத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121600

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38

திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரனின் சிற்றவை முகப்பில் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு புண்பட்ட கால்களை மெல்ல அசைத்து, உடலை முழு உளவிசையாலும் உந்தி நடந்து குடில் வாயிலை சென்றடைந்து அதன் தூணைப்பற்றியபடி நின்றான். உடலெங்கும் பலநூறு நரம்புகள் சுண்டி இழுபட்டு வலி நிறைத்தன. தனித்தனியாக நூறுவலிகள். அவை ஒன்றெனத் திரண்டு ஒற்றை வலியாக ஆகாது போவது ஏன்? அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கிறது. ஒவ்வொரு செயல்முறை இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருமொழியில் அவனிடம் பேசிக்கொண்டிருந்தன. மூச்சைத்திரட்டி கால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121686