Daily Archive: May 16, 2019

அந்நியரும் மொண்ணையரும்

வெள்ளையானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன் சுரேஷ் பிரதீப் அவருடைய தளத்தில் எழுதியிருந்த இக்கட்டுரையை வாசித்தேன். வெள்ளை யானை நாவல் குறித்த ஒரு விவாதத்திற்கு இலக்கியத்துடன் சம்பந்தமில்லாத ஒரு கும்பல் அளித்த எதிர்வினைக்குப் பதிலாக எழுதியிருக்கிறார். வெள்ளையானை – தஞ்சைகூடல் – சில விளக்கங்கள்- சுரேஷ் பிரதீப்   கடந்த ஏப்ரல் 27ல் நடந்த தஞ்சைகூடல் இலக்கிய வட்டத்தின் இருபத்தைந்தாவது நிகழ்வு குறித்த சில சர்ச்சைகள் முகநூலில் ஓடியது கவனத்துக்கு வந்தது. நிகழ்வில் பேசிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121797

ஊட்டி சந்திப்பு- கடிதம்

மலைகளை அணுகுவது ஊட்டி சந்திப்பு – நவீன் ஊட்டி சந்திப்பு -சிவமணியன் அன்புள்ள ஜெயமோகன்,   ஊட்டி முகாமில் பேசாத சில வாசகர்களில் நானும் ஒருவன். பல வருடங்களாக கூட்டங்களில் பேசாமல்போனதால், சில வருடங்களாக பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பதால், ஒரு மெளனம் என்மேல் கவிந்திருக்கிறதென்று உணர்ந்தேன். அங்கே நண்பர்கள் பலருடன் பேசுகையில் இருந்த இயல்பு, கூட்டத்தில் விவாதம் நடக்கும்பொழுது மறைவது எனக்கே விந்தையாக இருந்தது. 2-3 அரங்குகளில் திட்டவட்டமான கருத்தும் கேள்வியும் இருந்தும் கையை தூக்கி பேசமுடியவில்லை. இதுவரையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121766

இயந்திரக் கிருமிகள்

அன்புள்ள ஜெமோ, அறிவியல் உலகம் நம் கற்பனைகளுக்கு ஈடு கொடுக்கும் போது புதிய உலகத்தின் சாத்தியக்கூறுகள் விரியும்.அதன் உள எழுச்சி மானுடத்தின் மீது மீள நம்பிக்கையைத்துளிர்க்கச்செய்யும். இதோ அத்தகைய தருணம். https://youtu.be/N7lXymxsdhw அன்புடன், வா.ப.ஜெய்கணேஷ்

Permanent link to this article: https://www.jeyamohan.in/121810

காலையில் துயில்பவனின் கடிதம்- 2

காலையில் துயில்பவனின் கடிதம் காலையில் துயில்பவன் அன்புள்ள ஜெ,   கடிதம் அனுப்பிய பிறகும், பின் வெளிவந்த பிறகும் எனக்கு பயம் ஏற்பட்டது. vulnerability யை முழுவதும் வெளிப்படுத்திவிட்டோமோ? இனிமேல் இலக்கிய சந்திப்புகளுக்கு வந்தால் கூட அனுதாபத்துடன் தான் பார்ப்பார்களோ! என்றெல்லாம் எண்ணங்கள். ஆனால் எழுதிய பிறகு ஒவ்வொருநாளும் அதிகமாக மீண்டுகொண்டிருக்கிறேன். சிலர் எனக்கு அன்புடன் கடிதம் எழுதியிருக்கிறார்கள். லோகமாதேவி அம்மா அவர்களும், ஷாகுல் ஹமீது அவர்களும் அளவுகடந்த அக்கறையை காட்டுகிறார்கள்.   மேலும் என்னுடைய கடிதத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121594

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-37

சுபாகு துரியோதனனின் குடிலை அடைந்தபோது உள்ளிருந்த மருத்துவ ஏவலன் வெளியே வந்தான். அவன் சுபாகுவைக் கண்டதும் திடுக்கிட்டு நின்று பின் தன் மூச்சை சேர்த்துக்கொண்டு “வணங்குகிறேன், அரசே” என்றான். “மூத்தவர் என்ன செய்கிறார்?” என்று சுபாகு கேட்டான். “துயில் கொள்கிறார்” என்றான் ஏவலன். “விழித்தாரா? எவரையாவது பார்த்தாரா? என்று சுபாகு கேட்டான். “’இல்லை. அளவுக்கு மிஞ்சியே அகிபீனாவும் மதுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நினைவு மீளவே இல்லை” என்று ஏவலன் சொன்னான். சுபாகு “செல்க!” என்று சொல்லி கைகாட்டிவிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121669