Daily Archive: May 15, 2019

குரு நித்யா ஆய்வரங்கு, ஊட்டி – கடலூர் சீனு

  இனிய ஜெயம்   மகிழ்சிகரமான மற்றொரு மூன்று நாட்கள்.  மூன்று நாட்கள் தீவிரமான விஷயங்களை மட்டுமே பேசியபடி இரவுகளில் பாடல்களும் சிரிப்புமாக என உண்மையில் இந்த மூன்று நாட்களும் ஓடிய வேகமே தெரியவில்லை.  திரும்புகையில் நண்பர்கள் உரையாடலிலும் இதையே தெரிவித்தனர். செறிவான கலந்துரையாடல்கள் அமைந்த கச்சிதமான நேரக்கட்டுப்பாட்டின் மீது அமைந்த கூடுகை.   எப்போதும்போல நாஞ்சில் சாரின் கம்பராமாயண அமர்வு கனவுகளை எழுப்பும் ஒன்றாக அமைந்தது.குளிக்கையில் உடல் தேய்க்க மேரு மலையை பயன்படுத்துபவன் கும்பகர்ணன் எனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121723

குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதாளர்கள்.

கவிஞர் குமரகுருபரன் விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் எனக்கும் அணுக்கமானவராக இருந்தார். அவருடைய மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட விருது குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது. இளம்கவிஞர்களுக்குரிய விருதாக இதை இப்போது வரையறை செய்திருக்கிறோம். புனைவெழுத்தாளர்களுக்கும் விரிவாக்கலாமா என்னும் எண்ணமும் உண்டு   2017 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் கண்டராதித்தனுக்கு அளிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் ச.துரைக்கு வழங்கப்படுகிறது. இக்கவிஞர்கள் மீதான கூர்ந்த வாசிப்பு நிகழ்வதற்கான களமாக இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121717

ஊட்டி- கடிதம்

ஊட்டி சந்திப்பு – நவீன் ஜெ. அவர்களுக்கு   வணக்கம். ஊட்டி சந்திப்பு குறித்து நவீன் எழுதிய பதிவை வாசித்தேன். நவீனுடன் பயணித்து, அவருடனே முகாமில் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.  உங்கள் பார்வையை பலியாட்டை தேடும் பூசாரியின் கண்கள் என்று சொன்னதை பொங்கி சிரித்தபடி வாசித்தேன். நவீன் பகிர்ந்த பல விஷயங்களுக்குள், அவர் இந்த அமர்விற்கான முன் தயாரிப்பு செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121712

நிழலின் தனிமை பற்றி… சுரேஷ் பிரதீப்

நிழலின் தனிமை வாங்க   தேவிபாரதியின் நிழலின் தனிமை மனித குலம் சமூகமாகத் திரளத் தொடங்கியதில் இருந்தே எதிர்கொண்டு வரும் ஒரு சிக்கலை பேசுகிறது. கணநேரத்தில் தோன்றி மறையும் ஒரு உணர்வினால் ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்கவும் பீடிக்கப்பட வாய்ப்பிருக்கும் அவலத்தையும் அப்படி பீடிக்கப்படும் ஒரு மனம் அடையும் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் பேசும் படைப்பாக நிழலின் தனிமை நிலைகொள்கிறது. தன்வரலாற்றுத் தொனி கொண்ட, கதை சொல்லியின் பார்வையிலேயே நகரும் எளிமையான கட்டமைப்பை நிழலின் தனிமை கொண்டிருக்கிறது.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121519

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36

ஆறாவது களமான குமரியில் அமர்ந்திருந்த சூதரான விசுத்தர் தாழ்ந்த குரலில் அகன்ற தோற்பரப்பு கொண்ட கிணைப்பறையை சுட்டுவிரலால் சுண்டி புலி உறுமுவது போன்ற மெல்லிய ஓசையை எழுப்பி பாடினார். அவருடன் இணைந்துகொண்ட பிற சூதர்களின் குரல்களும் அவ்வாறே உள்ளடங்கி நெஞ்சுக்குள் ஒலிப்பதுபோல் எழுந்தன. வெண்கல்லாக புதனும் பொற்கலத்தில் நீர் வடிவில் நாராயணனும் அச்சொற்களைக் கேட்டு அமர்ந்திருந்தனர். போர்க்களத்தின் காட்சியை விசுத்தர் பாடினார். தோழரே, இந்தக் காட்சியை நான் கண்டேன். இருபுறமும் படைவீரர்கள் தனித்து துயருற்று முகில் நிறைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121667