Daily Archive: May 14, 2019

மலைகளை அணுகுவது

நவீன துரோணர்   [ஊட்டி சந்திப்புக்குப்பின் சைதன்யா நண்பர்களுடன் க்ளென்மோர்கனில் உள்ள குரு டேவிட்டின் ஆசிரமத்திற்குச் சென்றிருந்தாள்.  அவர்கள் குரு ஃப்ரெடியின் மாணவர்கள். குரு ஃப்ரெடி என அழைக்கப்படும் ஃப்ரெடி வான் ஃபோர்ட்  நடராஜகுருவின் மாணவர். விற்கலை நிபுணர். அதையே யோகசாதனையாகக் கொண்டவர். அவருடைய குருமரபு நித்ய சைதன்ய யதியின் மரபுக்குத் தொடர்பில்லாத தனியான அமைப்பாக நீடிக்கிறது.  அதில் ஒரு கிளை குரு டேவிட்டின் அமைப்பு. ஊட்டி எமரால்ட் அணைக்கட்டுக்கு அப்பால் கிளென் மார்கன் என்னும் ஊரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121690

இஸ்லாமும் உபநிடதங்களும்

  அன்புள்ள ஜெ.,   இந்திய தத்துவ ஞானத்தின் மிக உயர்ந்த கொடுமுடியான உபநிடதத்தை காளிதாசன் உட்பட பல இந்திய அறிஞர்கள் வியந்து போற்றியிருக்கிறார்கள்.  ஜுவான் மஸ்காரோ என்ற ஸ்பானிய அறிஞரோ ‘ஆத்மாவின் இமாலயம்’ என்று மிக அழகாகச் சித்தரிக்கிறார். வேதம் செறிந்த இமாலயத்திலிருந்து பாய்ந்தோடிய ஜீவ நதிகளாகத்தான் உபநிடதங்களைக் காண்கிறார் ஜெர்மானிய அறிஞர் கௌண்ட்கைசார்லிங்(1880-1946). ஒவ்வொரு வேதமும் பல்வேறு சாகைகளைக் கொண்டிருந்தன. ‘சாகை’  என்றால் கிளை. அப்போது வேதம் ஒரு மரம் என்கிற அர்த்தம் வருகிறதல்லவா? மாக்ஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121579

ச. துரை கவிதைகள்

  கொடி கட்டப்பட்டது உப்புகரித்த நாவால் தலைவன் பாடுகிறான் மீன்களை முந்தானைக்கொண்ட தலைவி பெரும் விமோசனங்களை உண்பதற்க்கு நுண் பாவங்கள் சமைத்தாள் பிறகு அவளே தன் விழியிழந்த குழந்தைகளுக்கு மெல்லிய சதைகளை ஊட்டி முட்களால் படம் வரைந்து காண்பிக்கிறாள். * ச. துரை கவிதை அரூ இணைய இதழ் வார்த்தை- ச.துரை கவிதை ச துரை கவிதைகள் சேரவஞ்சி

Permanent link to this article: https://www.jeyamohan.in/121678

விஷ்ணுபுரம், தத்துவம்,இலட்சியவாதம்-கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன்,   ஒரு வாரமாக விஷ்ணுபுரம் வாசித்து வருகிறேன். நீங்கள் வாசகர்களுக்கு மிக அதிகமான வேலை தருக்கிறீர்கள், அதனாலே உங்கள் படைப்புக்கள் அதற்கான வாசகர்களை அதுவே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.   ஸ்ரீபாதம் முடிந்த பின்னர் ஏதோ வெறுமையை மிஞ்சியுள்ளது. எத்தனை விதமான கதாப்பாத்திரங்கள். அனைவரையும், அனைத்தினையும் விஷ்ணுபுரம் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. நான் மிகவும் ஆரம்ப நிலை வாசகன், எண்ணெய்யே விஷ்ணுபுரத்தின் கணவுநிலையும் அதன் கட்டற்ற தன்மையும் ஈர்த்து கவர்கிறது என்றால் தேர்ந்த வாசகர்களை எவ்வளவு படுத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121419

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35

பீமன் விசையுடன் நடந்து பாய்ந்து புரவியிலேறி அதை நாற்குளம்போசையுடன் விரையச்செய்தான். அவன் உளமறிந்ததுபோல் புரவி புதர்கள் மண்டிய பாதையில் தாவிச் சென்றது. சிறு ஓடைகளை தாவிக் கடந்தது. அதன் குளம்புகளில் பட்டு கூழாங்கற்கள் பறந்தன. பீமன் கடிவாளத்தை ஒரு கையால் பற்றியபடி பற்களைக் கடித்து உடற்தசைகளை இறுக்கி அமர்ந்திருந்தான். அங்கிருந்து விலகி செல்லச் செல்ல அவன் மெல்ல ஆறுதல் அடைந்தான். தன் அகம் அத்தனை அஞ்சியிருப்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். எதன் பொருட்டு அஞ்சினேன் என தன்னையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121661