Daily Archive: May 13, 2019

நம்பிக்கையாளன் [சிறுகதை]

  திடீரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘ ‘ ‘சாத்தானின் நாக்கு ! ‘ ‘ என்றார் இன்னொருவர். ‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55

ச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்

    புதிய கவிகளில் நம்பிக்கையூட்டும் கவிகளாக மூவரை சொல்லலாம்.விஷ்ணு குமார் ,சூர்யா ,துரை ஆகியோர்.தங்கள் கவிதைகளை மங்கலாக தெரிந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.பொது உலகப்பாடுகளில் இருந்து விலகி தங்கள் கவிதைகள் இன்னதென உணர்ந்து கொள்வதே ,வெளிப்படுத்துவதே புதிய கவிஞனை அடையாளம் காணச் செய்கிறது.ஆரம்பகால கவிஞன் புதிய மின் ஊட்டம் ஒன்றினை தன்னில் கொண்டிருக்கிறான்.இந்த அம்சம் இம்மூவருக்குமே பொதுவானது .ஆரம்ப கால கவிகள் தங்களை மிகைப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால் ,அந்த எதிர்மறைப் பண்பிலிருந்து வெளியேறி வர நெடுங்காலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121673

அறம் வளர்த்த அம்மா

  அன்புள்ள ஜெ…   வழக்கமாக உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து பேசும் நீங்கள் ஓர் உரையின்போது குரல் உடைந்து கண்ணீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்துனீர்கள்   கிடைக்கும் அனைத்து வாய்ப்புக்ளையும் பயன்படுத்தி தன் நச்சுக்கரங்களை எல்லா இடங்களிலும் நீட்டி , அனைத்து வழிகளும் கொள்ளை அடிக்கும் தலைவர்களை , ஊடக வாய்ப்புகளுக்காகவும் பொருளாதார பயன் கருதியும் , மிகப்பெரிய ஆளுமைகளாக , இலக்கியவாதிகளாக , மாபெரும் தலைவர்களாக கட்டமைக்கும் ஊடகங்கள் நல்லோரை கண்டு கொள்வதில்லை என ஆழ் மன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120907

துர்கனேவின் தந்தையும் தனயர்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், துர்கனேவ் அவர்களின் “Fathers and Sons ” நாவல் படித்து முடித்த உடன் தங்களுக்கு எழுதுகிறேன் தங்களின் சென்னை கட்டண உரையில் துர்கனேவ் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் , மூன்று வருடம் முன்னரே ,பழைய கடையில் வாங்கிய பதிப்பு. இருநூறு சொச்சம் பக்கம் வாசிக்க ஒரு மாதம் ஆகியது , என் சோம்பல் காரணம், பெரிய மல்யுத்தத்திற்கான ஆயத்தத்துடன் தொடங்கி பரமபத சதுரங்க விளையாட்டின் ஸ்வாரஸ்யத்தின் சாயல் படிந்து, சின்ன தீப விளக்கின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121576

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34

பீமன் வருவதை தொலைவிலேயே மிருண்மயத்தின் மாளிகையின் காவல்மாடத்திலிருந்த வீரர்கள் பார்த்தனர். அவர்களிலொருவர் கொம்போசை எழுப்ப கீழ்த்தளத்திலிருந்து காவலர்கள் வெளியே வந்து நோக்கினர். புரவி அணுகி விரைவழிந்து நின்றதும் பீமன் அதிலிருந்து கால்சுழற்றி இறங்கி தன் இடக்கையிலிருந்த குருதிக்கலத்துடன் எடை மிக்க காலடிகள் மண்ணில் பதிந்தொலிக்க எவரையும் நோக்காமல் சென்று மாளிகையின் சிறு முற்றத்தில் நின்று உரத்த குரலில் “அரசியர் எங்கே?” என்று கேட்டான். கொம்பொலி கேட்டு உள்ளிலிருந்து வந்த ஏவலன் தலைவணங்கி “அரசியர் ஓய்வறையில் இருக்கிறார்கள், அரசே” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121611