Daily Archive: May 12, 2019

ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது

  2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருது இளம்கவிஞர் ச.துரை  அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்தி என்னும் கவிதைத்தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. சமகாலக் கவிதைத்தளத்தில் செயல்படுபவர்களில் பலரை பரிசீலித்தோம். பலரிடம் பரிந்துரை கோரினோம். கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் ச.துரையை பரிந்துரை செய்தார். நண்பர்கள் பரிசீலித்தபின் இம்முடிவு எடுக்கப்பட்டது. குமரகுருபரனின்‍ பிறந்தநாள் ஜூன் 10. ஒரு நாள் முன்னதாக ஜூன் 9 அன்று சென்னையில் விழா நிகழும். நண்பர்கள் அனைவரும் முன்னரே பயணப்பதிவுகள் செய்யவேண்டும் என கோருகிறோம். சென்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121647

பாவண்ணனுடன் ஒரு சந்திப்பு

  அன்புள்ள ஜெயமோகன்,     எம்.கோபாலகிருஷ்ணன் எண்ணமும் எழுத்தும் என்ற நிகழ்வில் எழுத்தாளர் பாவண்ணனுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஓரிரு நிமிடம் உரையாடிவிட்டு “நானும் பெங்களுரு  தான் சார்” என்று  கூறினேன். “அப்படியா?  வீட்டுக்கு வாங்களேன்” என்று கூறினார். பிறகு வேறு யாரோ அவருடன் பேச முற்பட  உரையாடல் அத்துடன் நின்று போனது. பிறகு பெங்களூரு வந்து சேர்ந்த பிறகு அந்த மென்மையான முகம், அந்த  உரையாடல் நினைவுக்கு வந்து வந்து சென்றது. ஒருவித நாணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121588

ஊட்டி சந்திப்பு – நவீன்

  இரவு ஒன்பது மணியளவில் அன்றைய நிகழ்ச்சி முடிவுற்றதும் உணவு வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வது இது இரண்டாவது முறை. இருமுறையும் நான் கவனித்தது நேர்த்தி. அதற்கான காரணம் செந்தில்குமார் என்றே கணிக்கிறேன். ஒவ்வொன்றும் அவர் கண்காணிப்பில் நடக்கிறது. இலக்கிய விவாதத்திலும் தீவிரமாகப் பங்கெடுக்கிறார். கலையும் கடமாவும்: ஊட்டி முகாம் அனுபவம்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/121642

தன்மீட்சி – கடிதம்

தன்மீட்சி நூல் வாங்க அன்புள்ள ஆசிரியருக்கு, மனமார்ந்த வணக்கம். என் பெயர் செந்தில் ஜெகன்நாதன், மயிலாடுதுறை எனது ஊர், தற்போது சென்னையில் அறை எடுத்து நண்பர்களுடன் வசித்து வருகிறேன், ‘நான் சினிமாவில் உதவி இயக்குனர். தொடர்ந்து உங்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் அவற்றை வாசித்து முடித்ததும் உங்களுக்கு கடிதம் எழுதலாம் என நினைத்து ஏதோ ஒன்று தடுக்க, வேண்டாமென இருந்துவிடுவேன். இது எனது முதல் கடிதம். பிழைகள் இருப்பின் பொருத்தருள்க. கடந்த ஐந்து மாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121506

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-33

தூமவர்ணி அரைத்துயிலில் என விழிசொக்கி அமர்ந்திருந்த குட்டிக்குரங்குகளிடம் சொன்னது “சிதல்புற்றின் முன் அமர்ந்திருந்த கபீந்திரரிடம் வால்மீகி தன் கதையை சொன்னார். கபீந்திரர் அச்சொற்களை தன் விழிகளாலும் வாங்கி உள்ளமென ஆக்கிக்கொண்டார். ஆகவே இக்கதை இந்நாள் வரை இங்கே திகழ்கிறது. என்றும் திகழும்.” உண்மையில் ஒவ்வொரு அடிக்கும் நான் நம்பிக்கை இழந்துகொண்டிருந்தேன். அவ்வாறுதான் அது முடியுமென்றும் தோன்றியது. ஆனால் என் குடியின் எல்லை கடந்து நான் சென்றதும் என்னை நோக்கி களிக்கூச்சலிட்டபடி ஓடிவந்த மைந்தரைக் கண்டதும் நானே நூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121609