Daily Archive: May 11, 2019

அஞ்சலி- தோப்பில்

  1986 ல் ஆ.மாதவனைச் சந்திக்க திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த அவருடைய செல்வி ஸ்டோருக்குச் சென்றிருந்தேன். ஒரு கைப்பிரதியை வாசித்துக்கொண்டிருந்தார். “ஒரு மிளகா வியாபாரி எழுதினது. நல்லா பண்ணியிருக்கார். சுந்தர ராமசாமி கிட்ட காட்டச் சொல்லியிருக்கேன். அவரு நெனைச்சா பப்ளிஷ் ஆயிரும்” என்றார். ஆறுமாதம் கழித்து சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அவரும் “நம்ம தேங்காப்பட்டினத்துக்காரர் ஒருத்தர் ஒரு நாவல் எழுதியிருக்கார். நல்லா இருக்கு. எம்.எஸ். அதை எடிட் பண்ணிட்டிருக்கார்” என்றார்.   அவ்வாறுதான் நான் தோப்பில் பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121637

ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் – பாலா

http://searchforhealth.ngo/ தாக்கூர் தாஸ் பங் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். பொருளாதார அறிஞர். நாக்பூரில், காந்திஜியின் தோழர்கள் துவங்கிய கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டாண்டுகள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளியான காலத்தில், இந்தியா சுதந்திரம் பெரும் அறிகுறிகள் தென்பட்டன. தாக்கூர் தாஸூக்கு பொருளாதாரத்தில் மேற்படிப்புப் படிக்க, அமெரிக்கா செல்லும் வாய்ப்பை அரசாங்கம் உதவித்தொகையுடன் வழங்க முன்வந்தது. அமெரிக்கா செல்லும் முன்பு, காந்தியிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121427

ஊட்டி சந்திப்பு -சிவமணியன்

சுசித்ரா வாழ்த்துப்பாடலுடன் துவங்க அவருடன் திருமூலநாதனும், புதுக்குரல் பழனி ஜோதியும் இணைய சைவ, வைணவ, கௌமார கடவுளார்களின் ஆசி பெற்று நிகழ்வுகள் துவங்கியது. காலைமுதல் நிகழ்வாக பாலாஜி பிருத்விராஜின் நாவல் விவாதம். ஒரு உதாரண நாவல்,  வாசகனுடன் உணர்வுத் தொடர்பினை (Emotional connect) ஏற்படுத்தி அதன் போக்கில் அந்த தொடர்பினை இறுதி வரை தக்க வைக்கும் தன்மை கொண்டிருக்க வேண்டும் எனவும். Metaphor என்னும் மையப்படிமம் நாவலுக்கு அவசியம் எனவும் . நாவலின் “பலகுரல்தன்மை” சிறுகதையிலிருந்து வேறுபடுத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121639

யூத்து -கடிதம்

யூத்து’ அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு   உங்களது யூத்து பற்றிய கட்டுரைக்கும் அதற்க்கு பதிலாக வந்த சில கடிதங்களையும் படித்தேன். எனது கருத்துக்கள். (நாம் இருவரும் சம காலத்தில் பிறந்தவர்கள்).   ஒவ்வொரு தலைமுறையினரும் அதற்கடுத்த தலைமுறையினர் வெட்டி என நினைக்கிறார்கள்.  எனது பெரியப்பா (நான் மிகவும் நேசித்த, மரியாதை வைத்திருந்த மனிதர் – தங்கமான குணமுடையவர்). 1980களில், நான் தலைமுடி அதிகமாக வைத்திருந்த ஒரே காரணத்திற்க்காக நான் உருப்பட போவதில்லை என்று நினைத்தவர். அதை பலமுறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120925

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-32

“இறுதி வெறுமை என்பது சாவு. ஆனால் அது வாழ்வில் ஒருமுறைதான் நிகழவேண்டும் என்பதில்லை. அது நிகழ்ந்து மீள்பிறப்பெடுத்தோர் முன்னிலும் ஆற்றல்கொண்டவர்கள் ஆகிறார்கள். தெய்வங்களுக்கு நிகரானவர்களாக நிலைகொள்கிறார்கள். ஆழுலகத்து தெய்வம் அல்லது விண்ணொளிகொண்ட தேவன். நான் கொடுந்தெய்வமென அத்தருணத்தில் பிறந்தெழுந்தேன்” என்று வால்மீகி சொன்னார். அருகே கபீந்திரர் அதைக் கேட்டு அமர்ந்திருந்தார். “இனிய குழந்தைகளே, கேளுங்கள். இது வால்மீகியின் கதை. என் குலமூத்தவரான கும்போதரர் நான் சிறுமியாக இருக்கையில் எனக்குச் சொன்னது. அவர்களுக்கு அவர்களின் மூத்தவர்கள் சொன்னார்கள். முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121573