Daily Archive: May 8, 2019

ஜப்பான் பயணம்

  இன்று [07-05-2019] மாலை நானும் அருண்மொழியும் ஜப்பான் கிளம்புகிறோம். அங்கே ஓர் இலக்கிய நிகழ்வு. கொஞ்சம் ஊர்சுற்றல். நண்பர் டோக்கியோ செந்தில் ஏற்பாடு. நேற்று காலையிலேயே ஊட்டியில் இருந்து நேரடியாக சென்னை வந்தோம். வளசரவாக்கத்தில் விடுதியில் தங்கினோம். பகல்முழுக்க வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். மாலையில் நண்பர்கள் வந்தனர். விமானநிலையத்திற்கு சௌந்தர், ராஜகோபாலன், காளிப்பிரசாத், சண்முகம், பழனி ஜோதி ஆகியோர் வந்து வழியனுப்பிவைத்தார்கள். கொலாலம்பூர் வழியாக டோக்கியோ..   ஜப்பானில் செர்ரிபிளாசம் பூக்கும் காலம் இது. நமக்கு பொன்கொன்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121604

கங்கைப்போர் முடிவு

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர் நீர் நெருப்பு – ஒரு பயணம் நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு   உயிர்வாழ்வதைவிட ஒரு உயரிய அறத்தைக் கடைபிடித்துச் சாவது சிறந்தது என மாறாத உளநேர்மையோடு பசித்தவம் புரிகிற, சாது ஆத்ம்போனந்த் அவர்களின் மன்றாடுதலுக்கு ஒரு சிறிய நல்விளைவு நிகழ்ந்திருக்கிறது. எளியவனின் குரலுக்கு அதிகாரம் செவிமடுத்திருக்கிறது. கங்கையைக் காப்பாற்றக்கோரி, 194 நாட்களாகத் தொடர் உண்ணாநோன்பிருந்த ஆத்ம்போனந்த், தனது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். தூய்மை கங்கைத் திட்டத்தின் தேசியப் பணிக்குழுவின் நிர்வாக இயக்குநர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121585

வானிலைப் புனைவு

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, லண்டனிலிருந்து வெளிவரும் எகானாமிஸ்ட் வார இதழ் பெரும்பாலும் வணிகத்துக்கும், அரசியலுக்கும் ஆனது. ஆனால் சில பக்கங்கள் இலக்கியத்திற்கும், கலைகளுக்கும் ஒதுக்குகிறார்கள். அண்மையில், The Tallest Story, Can the novel handle a subject as cataclysmic as climate change?  என்ற கட்டுரை படித்தேன். நான் உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருவதால் உங்கள் வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்று தோன்றியது. என்னுடைய மூலத்தை சற்று மாற்றிய சுமாரான தமிழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121423

இணையத்தின் குரல்கள் -கடிதங்கள்

மூடர்களின் நாக்கு சென்னை கண்டனக்கூட்டத்தில்… அன்புள்ள் ஜெ..   உங்கள் கட்டுரை ஒன்றில் இந்த வரியை கண்டேன் ’இந்துத்துவ வெறியன்,  இஸ்லாமை அழிக்க முயல்பவன் என்றெல்லாம் கூச்சலிட்டவர்கள் மிகப்பெரும்பாலும் இஸ்லாமியர் அல்ல. முற்போக்கினரும் திராவிட இயக்கத்தவரும்தான்””   இதில் திராவிட இயக்கம் என சுடடி இருப்பது மக்கள் ஆத்ரவு அற்ற சில லெட்டர்பேடு இயக்கங்களை என நினைக்கிறேன்..   திராவிட இயக்கம் என மக்கள் நினைப்பது எம் ஜி ஆர் இருந்த தி மு கவையும் அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121436

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29

சுபாகு தன்னிலை உணர்ந்தபோது துச்சாதனனின் இறப்பு விண்ணில் முரசொலித் தொடராக பரவியிருந்தது. அவன் முன்விழிப்பு நிலையில் அந்த முரசொலியை வேறேதோ இறப்பறிவிப்பு என எண்ணினான். மெல்ல மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தபோது “இளைய கௌரவர் வீழ்ந்தார்!” என முரசுகள் இயம்புவதை உணர்ந்தான். அவனை நோக்கி ஓடிவந்த குண்டாசி “அறிந்தீர்களா? மூத்தவர் சுபாகு யானையால் கொல்லப்பட்டார்” என்றான். அவன் தானல்லவா சுபாகு என துணுக்குற்றான். “என்ன சொல்கிறாய்?” என்றான். “யானைமேல் அமர்ந்து கங்கையை நீந்திக்கடக்கும் விளையாட்டு. அனைவரும் இறங்கினர். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121552