Daily Archive: May 6, 2019

கனடா இலக்கியத்தோட்ட விருது போகனுக்கு

கவிஞரும் சிறுகதையாசிரியருமான போகன் இவ்வாண்டுக்குரிய கனடா இலக்கியத்தோட்ட விருதை கவிதைக்காகப் பெறுகிறார். ’சிறிய எண்கள் உறங்கும் அறை’என்னும் தொகுதிக்காக இவ்விருது அளிக்கப்படுகிறது. போகன் படைப்புலகு இரு அம்சங்களால் ஆனது. நெகிழ்வும் உருக்கமும் கனவும் கலந்த படைப்புகள். அவற்றை நிகர்செய்யும்பொருட்டோ என உருவாக்கப்படும் பகடிகள். கதைகளில் அந்நெகிழ்வுகள் நேரடியாக வெளிப்படுகையில் கவிதையில் உள்ளடங்கிய வெளிப்பாடு கொண்ட படிமங்களாக திகழ்கின்றன. தமிழ்க்கவிதையின் பரப்பில் நினைவுகொள்ளவேண்டிய பல வரிகளை போகன் எழுதியிருக்கிறார்   ஒலி ஒலி கேட்காதவரால் அழிகிறது தீபங்களிடையே பேதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121544

குரு நித்யா ஆய்வரங்கப் படைப்புக்கள்

ஊட்டியில் மே மாதம் 3,4,5 ஆம் தேதிகளில் நடந்த குருநித்யா ஆய்வரங்குக்காக உருவாக்கப்பட்ட தளம் இது. இதில் அரங்கில் பேசப்பட்ட படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை வாசகர்கள் வாசித்துவிட்டு வருவதற்காக முன்னரே இணைப்புக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின்மேல் விவாதம் நிகழ்ந்தது.   குருநித்யா ஆய்வரங்கப்படைப்புக்கள்  2019

Permanent link to this article: https://www.jeyamohan.in/121434

அறிபுனை- இரு கடிதங்கள்

மூக்குத் துறவு –கே. பாலமுருகன் வணக்கம் அண்ணா,   பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பேசுவதற்குரிய சூழலை அல்லது வாய்ப்பை இயற்கை ஏற்படுத்தி தருகிறது. குறிப்பாக நாம் பேசாமல் இருந்த இடைவெளியை மீண்டும் குறைப்பது சிறுகதையாகவே உள்ளது. முன்பு ‘பேபிகுட்டி’, ‘தங்கவேலுவின் பத்தாம் எண் மலக்கூடம்’, இப்பொழுது ‘மூக்குத்துறவு’.   அரூவில் வெளிவந்த உங்களுடைய விரிவான நேர்காணலே அறிவியல் புனைவுகள் பற்றி ஒரு தீவிரமான புரிதலை உண்டாக்கியது. எனது கவிதை ஒன்றை ( காற்றடைப்பு விழா) சிறுகதையாக விரிவாக்கிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121118

காலையில் துயில்பவன் -கடிதங்கள்

காலையில் துயில்பவன்   காலையில் துயில்பவன் – கடிதம் அன்புள்ள ஜெ   மறுபடியும் பல நன்றிகள் இந்த கடிதத்தை வெளியிட்டதற்கு,   இது ஒரு படிப்பினை பலருக்கு.   இந்த கடிதத்தை இரண்டாவது முறை படித்த போது கடைசியில் அவர் எழுதியதை அவரின் முதல் தூக்கம் வரா அவஸ்தவையிலிருந்து பொருத்திப் பார்த்தேன். நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது அந்த வலியை.   படிக்கும் போது எனக்கு தோன்றியதையே நீங்களும் அவருக்கு பரிந்துரைத்திருக்கீர்கள்.   காலையில் துயில்பவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121289

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27

பீமன் மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் தங்கள் தேர்களில் அவனை தொடர்ந்தனர். படைமுகப்பை நோக்கி அவர்கள் செல்கையிலேயே மிகத் தொலைவில் அர்ஜுனன் மீண்டும் கர்ணனை எதிர்கொண்ட செய்தியை அறிவித்தன முரசுகள். திருஷ்டத்யும்னனின் ஆணை காற்றில் அலைமோதியது. “ஒருங்கிணையுங்கள்! ஒருங்கிணையுங்கள்! ஒவ்வொருவரும் பிறருடன் ஒருங்கிணைந்துகொள்ளுங்கள். வேல்முனைச்சூழ்கை திரள்க! நூற்றுவரும் ஆயிரத்தோரும் வேல்முனையின் கூர் ஆகுக! முதன்மை வீரர் பின் பிறர் திரள்க!” ஆனால் கௌரவப் படையினர் முதலை வடிவை அகற்றி பிறைவடிவை மேற்கொண்டனர். பிறையின் வலது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121514