Daily Archive: May 5, 2019

மறுபக்கத்தின் குரல்கள்

    1992ல் ஒரு டெல்லி கருத்தரங்கில் யூ ஆர். அனந்தமூர்த்தி பேசும்போது சொன்னார் ‘வரவேற்பறைகளில் இருந்து அறிக்கைகள்தான் வரமுடியும், இலக்கியம் சமையலறைகளில் இருந்தும் கொல்லைப்பக்கங்களில் இருந்தும்தான் வரும். மொத்த ஐரோப்பாவே மெல்லமெல்ல அதன் சமையலறையையும் கொல்லைப்பக்கத்தையும் இழந்துகொண்டிருக்கிறது. இங்கிலாந்து அதன் கொல்லையை இழந்தபின் அயர்லாந்தின் கொல்லையைவைத்து நெடுநாள் சமாளித்தது. இப்போது அதுவுமில்லை. இந்தியவின் கதை அதுவல்ல. நமது கொல்லைப்பக்கத்தை நாம் எட்டித்தான் பார்த்திருக்கிறோம். இன்னமும் உள்ளே நுழைந்து பார்க்கவில்லை’ நெடுநாள் என்னைக் கவர்ந்த கருத்தாக இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10919

இரவைத் தொடுதல் -சந்தோஷ்

    இரு உயிர்களிடையே, மிகவும் நெருக்கமான தொடர்பு, தொடுதல் வழியாகவே சாத்தியம் என எண்ணுகிறேன். மனிதர்களிடையே விட, மனிதனுக்கும் மிருகத்திற்குமான உறவில் தொடுதல் மேலும் முக்கியமானது.   நான் வளர்த்த பறவைகளில் தொடங்கி வீட்டின் அருகில் வளரும் நாய்கள், பூனைகள்,‌ஆடுகள், மாடுகள் ஏன் மீன்களைக் கூட தொட்டு உணர முயன்றிருக்கிறேன். தொடுதலில், அந்த உயிரின் வெம்மையை உணரமுடியும். வலிக்குமோ என்ற பிரக்ஞையுடன் மிக மென்மையாகக் கையாளவேண்டுமென்ற கவனம் இருக்கும். தொடுகைக்கு உடனடியாக ஒரு எதிர்வினையும் கிடைக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121293

வசைகள் -கடிதங்கள்

இந்தநாளில்…   அன்புள்ள ஜெ   கண்டன உரைக்குப் பிறகு தங்களுக்கு நேர்ந்தது போலவே இப்பொழுது திரு முத்தரசன் அவர்களுக்கும் நிகழ்ந்து கொண்டிருப்பது வேதனையைத் தருகிறது. பெரிய அரசியல் கட்சிகளின் மீது எத்தனையோ விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும் அவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதில் ஒரளவு கண்ணியத்தை கடை பிடிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.     திரு கருணாநிதி உயிரோடு இருந்த போதே ” நீ செத்துத் தொலை” கட்டுமரம்” என நாகரீகமற்ற வசவுகளை ஊடகங்களில் கண்டிருக்கிறேன்.  ஸ்டாலின் மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121465

அன்றைய முகம்

  அன்புள்ள ஆசிரியருக்கு,   பத்திரிக்கைகளின் கணிப்புகளை பின்னாளில் பார்ப்பது ஒருவிதமானது.இன்று மெய்யான ஒன்றை பற்றி, அன்றைய கணிப்பை பார்ப்பது என்பது சுவாரசியமானது.இது வெளிவந்த இந்தியாடுடே வில் உங்களாேடு சேர்த்து சிலஆளுமைகளை இந்தியா டுடே குறிப்பிட்டிருந்தது .அய்யாவின் புத்தங்களை குறைப்பதற்காக இதழ்களை பிரிக்கும் பாேது இதை எடுத்தேன்.உங்களின் நினைவில் …இதுவும்,இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்ட சூழலும் இருக்குமா என்று தெரியவில்லை. அன்புடன், கமலதேவி   அன்புள்ள கமலதேவி   நன்றி. நெடுங்காலம் ஆகிவிட்டது இப்போது நினைக்கையில் அன்றிருந்த எழுச்சியும் கொந்தளிப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121157

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் கர்ணனின் அணிநிறை முழுதுடலைச் சூழ்ந்து அமர்ந்திருந்த சூதர்களில் ஐந்தாமவரான மடங்கர் தன் சிறுபறையை மீட்டி ஓங்கிய குரலில் களநிகழ்வுகளை புனைந்து உரைக்கத் தொடங்கினார். அவருடன் பிற சூதர்களும் இணைக்குரல் எடுத்து சேர்ந்துகொண்டனர். வண்டு முரல்வதுபோல் எழுந்த ஓசையை மிக அப்பால் நின்று சுப்ரதர் நோக்கிக்கொண்டிருந்தார். விழுந்து மடிந்த காட்டு யானைக்கு மேல் மணியீக்கள் பறந்து எழுப்பும் முரலலென அது அவருக்கு கேட்டது. விழிதிருப்பிக்கொண்டு அப்பால் இருளில் பந்தங்கள் எரிய விரிந்துகிடந்த கௌரவப் படையை பார்த்தபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121497