Daily Archive: May 3, 2019

வண்ணநிலவனுக்கு விருது

  கோவை கொடீஷியா வாழ்நாள் சாதனை விருது இவ்வாண்டுக்கு எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜூலையில் நிகழும் புத்தகத் திருவிழாவில் இவ்விரு து வழங்கப்படுகிறது இளம் எழுத்தாளருக்கான விருது குணா கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது.   வண்ணநிலவனுக்கும் குணா கந்தசாமிக்கும் வாழ்த்துக்கள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/121504

வாட்ஸப் வரலாறு

  அன்பு ஜெயமாகனுக்கு,   உங்களின் ” உலகின் மிகப்பெரிய வேலி” எனும்  கட்டுரையை படித்தேன் மிகுந்த கிளர்ச்சியையும்  என்னுடைய பழைய சந்தேகம் ஒன்றையும் தூண்டிவிட்டது.கடந்த இரண்டு வருடங்களாக நான் இந்த பதிவை எனது வலைதளத்தில் படித்து வருகிறேன்.அந்த பதிவு நாம் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற தருணம்.   வலைத்தளப்  பதிவை முழுவதும் பதிவிட்டுள்ளேன்.இதன் உண்மை தன்மை பற்றியும் விளக்கங்களையும் தருமாறு வேண்டுகிறேன்.   இப்படிக்கு,   கிருத்திகேசன்.       இந்தியாவுக்கு சுதந்திரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119532

வல்லினம் இணைய இதழ்

மலேசியாவின் வல்லினம் இதழ் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் இலக்கியமுகத்தை அறிவதற்கு உதவியான முதன்மையான களம் இந்த இணைய இதழ்.   இவ்விதழில் வல்லினம் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்றச் சிறுகதைகளின் தொகுப்பு உள்ளது. வல்லினம் வெளியிட்ட நூல்களைப்பற்றிய விமர்சனப்போட்டியில் வென்றஶ்ரீதர் ரங்கராஜ் மற்றும் பவித்தாரா ஆகியோரின் கட்டுரைகள் உள்ளன.மலேசிய இலக்கியச் செயல்பாடுகள் தீவிரமானவை, ஒருங்கிணைப்புள்ளவை என்பதற்கான சான்றுகளாக உள்ளன இவை.   கடலூர் சீனு சீ.முத்துசாமியின் மலைக்காடு குறித்து எழுதிய விமர்சனக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.ரிங்கிட் குறுநாவல் குறித்த ஸ்ரீதர் ரங்கராஜனின் விமர்சனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121488

கங்கைக்கான போர் -கடிதம்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர் அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு   அரிய பெரும் அறப்போராட்டத்தின் விழுமியங்களையும் விளைவுகளையும் அருகில் உணரும் தருணத்தில் சாமானிய மனித மனம்  அதை முழுவதுமாக உள்வாங்க முடியாமல் நடுங்குகிறது.  பெரிதும் மரத்துப்போன ஒரு சமூகத்தில் நம்பிக்கையையும் மன உறுதியையும் மட்டுமே துணையாகக் கொண்டு போராடும் இத்தகைய நிகழ்வுகள் குறைந்த பட்ச மக்கள் அங்கீகாரம் கூட கிடைக்காமல் வெற்று செய்திகளாக மனிதர்களைக் கடந்து செல்வது வேதனைக்குரியது.   மூன்று வேறுவேறு வயதினரிடம் இதைப்பற்றி விவாதித்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121212

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-24

வேல்முனை முதலையை நோக்கி செல்ல, முதலை உடலை வளைத்து ஒழிந்து தன் வலக்காலால் அதை அறைந்தது. துரியோதனனும் துச்சாதனனும் இளையோரும் சேர்ந்து பீமனை தாக்கினார்கள். வேல்முனையின் விளிம்பிலிருந்து பிறிதொரு வேல்முனையென திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் சிகண்டியும் குவிந்தெழுந்து கர்ணனை நோக்கி சென்றார்கள். கர்ணன் தடையற்றவனாக பாண்டவப் படைகளை நோக்கி வந்தான். அவர்கள் மூவரும் தொடுத்த அம்புகளால் எவ்வகையிலும் அவனை தடுத்து நிறுத்த முடியவில்லை. விண்ணிலேயே அவர்களின் அம்புகள் முறித்து வீழ்த்தப்பட்டன. தேர்த்தட்டுகளிலிருந்து அவர்கள் கர்ணனின் ஒளிமிக்க விழிகளை மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121475