Daily Archive: May 1, 2019

அறிபுனை- அறைகூவல்கள் சாதனைகள்

அவன்  தன்ராஜ் மணி கடவுளும் கேண்டியும்    நகுல் வாசன் கோதார்டின் குறிப்பேடு  கமலக்கண்ணன் தியானி – கிபி 2500 அஜீக் நிறமாலைமானி பெரு. விஷ்ணுகுமார் பல்கலனும் யாம் அணிவோம் – ரா.கிரிதரன் ம் –கிரிதரன் கவிராஜா மின்னெச்சம் –ரூபியா ரிஷி மூக்குத் துறவு –கே. பாலமுருகன் யாமத்தும் யானே உளேன் –சுசித்ரா அன்புள்ள ஜெ   அரூ என்ற இதழ் நடத்திய அறிவியல் புனைகதை போட்டியை குறித்து உங்கள் சைட் மூலமாய் தெரிந்துகொண்டேன். கல்லூரி நாட்களில் ஆங்கிலத்தில் நிறைய அறிவியல் கதைகள் படித்திருக்கிறேன். சமீபத்தில் படித்த The Three Body Problem என்ற சீன அறிவியல் நாவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121431

பி.ஏ.கிருஷ்ணன்,நேரு – கோபி செல்வநாதன்

சேலம் மாநகரில் பாலம் என்ற அமைப்பினர்  வாரந்தோறும் வாசகர் சந்திப்பு என்ற நிகழ்வை நடத்துகின்றனர்.  இலக்கியம் என்ற வரையறைக்குள் இல்லாமல் பொதுவான  அறிதல், விவாதம் என்ற நோக்கத்தோடு  நிகழ்வை  ஒருங்கிணைக்கிறார்கள். ஒவ்வொரு   நிகழ்வுக்கும் யாரேனும் ஒரு சிறப்பு அழைப்பாளர்  கலந்துகொண்டு உரை  நிகழ்த்துகிறார்கள். இந்த வாரம்(28/04/2019) பி.ஏ.கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளர். தலைப்பு “நேரு:அவதூறுகளும், உண்மைகளும்”.  ஒரு மாதத்திற்கு முன்பு “Letters for a Nation”  என்ற புத்தகத்தை  படிக்க தொடங்கியிருந்தேன்.  நேரு பிரதமராக இருந்த காலத்தில் மதம்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121467

பனிமனிதனின் காலடி

பனிமனித வாங்க பனிமனிதன் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெமோ, இன்று காலை படித்த முதல் சேதி.. https://edition.cnn.com/2019/04/30/asia/yeti-india-army-intl/index.html பனிமனிதனின் கால் தடங்கள். என்னைவிட என் மகள்களுக்கு மிகவும் ஆனந்தம் இதைப்பார்க்க.. அன்புடன் வா.ப.ஜெய்கணேஷ் அன்புள்ள ஜெய்கணேஷ் உண்மையோ கற்பனையோ , இந்த எண்ணம் ஓர் உளக்கிளர்ச்சியை அளிப்பதாகவே உள்ளது. இதை அத்தனை எளிதில் இந்திய உள்ளம் விட்டுவிடாது என்றுதான் தோன்றுகிறது ஜெ பனிமனிதன் – கடிதம் பனிமனிதன் -கடிதங்கள் பனிமனிதன் பனிமனிதன் -கடிதங்கள் பனிமனிதன் என்னும் கற்பனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121478

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-22

எப்போது போர் தொடங்கியதென்று தெரியவில்லை. போர்முரசு ஒலித்ததை கேட்டோமா என்றே அர்ஜுனனுக்கு ஐயமாக இருந்தது. தவிர்க்கமுடியாத விசையொன்றால் ஈர்க்கப்படுபவனைப்போல் கர்ணனை நோக்கி தான் சென்றுகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். பல ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக கலிங்கத்திற்குச் சென்று கடலை பார்த்தபோது அந்த ஆட்கொள்ளல் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. மிகத் தொலைவிலேயே அவன் கடலின் முழக்கத்தை கேட்கத் தொடங்கினான். ஆனால் காற்றின் சுழற்சியில் அது அவன் தலைக்குப் பின்னும் இருபுறங்களிலுமாக மாறி மாறி ஒலித்து உளமயக்கை உருவாக்கியது. பெருந்திரளொன்று அலைகொள்வதுபோல, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121245