Monthly Archive: May 2019

பான்ஸாய்க் கடல்

  உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள் தண்ணீர்த்தொட்டிக் கடல்   ஜப்பான் சென்றிருந்தபோது பான்ஸாய் மரங்களை நிறையவே பார்க்கமுடிந்தது. இங்கே அவ்வப்போது சில நட்சத்திரவிடுதிகளின் வரவேற்பறைகளில் பான்ஸாய் மரங்களைப் பார்ப்பதுண்டு. அவை பெரும்பாலும் விரைவில் வளரும் சிலமரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. ஜப்பானின் சில ஸென் ஆலயங்களில் நூறாண்டுகள் பழமையான பான்ஸாய் அரசமரங்கள் உள்ளன. சிறுதொட்டிக்குள் கிளைவிரித்து இலைதழைத்து தடிபெருத்து திமிறி ஆனால் அடங்கி நின்றிருக்கின்றன   பான்ஸாய் மரங்களை உருவாக்குவதில் ஜப்பானியர் கொண்ட ஆர்வம் எப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122200

மீட்சி -ஒரு சிறுகதை

  நண்பர் தாமரைக்கண்னன் எழுதிய முதல் சிறுகதை ‘ மீட்சி’. முதல்சிறுகதை என்றவகையில் செறிவுடனும் நுண்மையுடனும் அமைந்திருக்கிறது. இனிய வாசிப்பனுபவமாகவும் அமைந்துள்ளது.   ஆனால் இக்கதையில் நான் காணும் சில போதாமைகள் உள்ளன. அவற்றை என் பார்வைகள் எனக் கொள்ளலாம். விவாதக்குறிப்பாகவே இதை எழுதுகிறேன்   அ. .ஒரு நவீன இலக்கியப்படைப்பு மரபான மொழிநடையை கைக்கொள்வது, மரபான மொழிபின் பகுதியாக அல்ல. அது ஒரு மறுஆக்கமாக அமையவேண்டும். மரபான மொழிநடையை அது எடுத்துக்கொண்டு நவீனமாக்கவேண்டும். மரபான மொழிநடையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122207

நவீன் -நேர்காணல்

  இதுவரை வல்லினம் மூலம் நான் நண்பர்களுடன் செய்துள்ள செயல்பாடுகள் குறித்த  அலுப்பான, சலிப்பான, எரிச்சலான, கருணையை கோரும், ஏமாற்றத்தைச் சொல்லும் ஒரு வாசகத்தை என் வாயிலிருந்து நீங்கள் கேட்டிருக்க முடியாது.  யாரும் என்னை இதைச் செய்ய சொல்லி வற்புறுத்தவில்லை. நானாகவே செய்கிறேன். அது அந்த மாபெரும் கனவு இருந்தால் மட்டுமே சாத்தியம். நவீன் நேர்காணல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/122205

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52

பத்தாவது களத்தில் அமர்ந்திருந்த கும்பீரர் என்னும் சூதர் சுரைக்குடுக்கையின் மேல் கட்டிய மூங்கிலில் முதலைத் தோல் வார்ந்து உலர்த்தி இழுத்துக் கட்டி உருவாக்கிய மூன்று இழை குடயாழை மடியிலமர்த்தி அதை வலக்கையின் சிறுவிரலாலும் கட்டைவிரலாலும் நடுவிரலாலும் மீட்டி இடக்கையால் அருகில் இருந்த சிறுமுழவைத் தட்டி தாளமிட்டபடி கர்ணன் போருக்கெழுந்த களத்தின் காட்சியை கூறலானார். அவருடன் பிற சூதர்களும் இணைந்துகொண்டனர். பின்னிரவு அணைந்துகொண்டிருந்தமையால் காட்டுக்குள் இலைகளில் இருந்து பனித்துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. முற்புலரியின் பறவைக்குரல்கள் சில எழுந்தன. ஆயினும் சிதைகளனைத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122287

விமலரும் வராகரும்

இனிய ஜெயம்   ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஆதி யோகி சிலை, மினியேச்சர் ஒரு அலங்கார வண்டியில்  அவ்வப்போது ஒவ்வொரு ஊரிலும் சுற்றி வரும் நிலையை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.   அப்படி வித்யாசமான ஒரு ஊர்வலம் ஒன்றினை இன்று காலை கடலூர் பாடலீஸ்வரர் கோவில் அருகே இருக்கும் ஸ்வேதம்பர சமணர்கள் கோவிலில் கண்டேன். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலை.பீடத்துடன் சேர்த்து பத்து அடி உயரம்.   பத்மாசனத்தில் அமர்ந்த கோலம். இடது கீழ் கையில் திரிசூலம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122176

ச.துரை -மேலும் நான்கு கவிதைகள்

  2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது பெறும் ச.துரையின் மத்தி தொகுப்பிலிருந்து சில கவிதைகள். விருதுவிழா 9-5-2019 அன்று மாலை தக்கர்பாபா வித்யாலயா, தி நகர், வினோபா அரங்கில் நிகழ்கிறது உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்   கரையில் அமர்ந்திருப்பவன் பேசவேயில்லை அலைகளைப் பார்க்கிறான்   அலைகள் குரைக்கின்றன உனக்குப் பயமில்லையா குரைக்கும் அலைகள் எதைத்தான் கேட்கின்றன?   அவன் எதுவும் பேசவில்லை சற்றே எழுந்துபோய் தடவிக்கொடுக்கிறான் அவை எக்கி எக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122198

வெள்ளையானை – பலராம கிருஷ்ணன்

வெள்ளையானை வாங்க வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒடுக்கப்பட்டவர்கள் முன்னெடுத்து நடத்திய போராட்டம் பற்றிய வரலாறு மற்றும் தமிழ்நாட்டில் 1878 களில் நிகழ்ந்த தாது வருடப் பஞ்சம் பற்றிய வரலாற்றுப் புனைவு. நாவல் வெளியான நாள்முதல் தொடர் கூட்டங்கள் வழியாக நாவலின் வாசிப்புச் சாத்தியங்கள் புதிதாக வந்தபடியே உள்ளன. சமீபத்திய நிகழ்வாக தஞ்சை இலக்கியக் கூடுகையில் வெள்ளையானை பற்றிய விவாதமும் அதற்கு சுரேஷ் பிரதீப் எழுதிய விளக்கத்தையும் சமூக வலைதளத்தில் வாசிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122181

அர்விந்த் கண் மருத்துவமனை -கடிதம்

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா அன்பின் ஜெ..   அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்திலிருந்து கடலூர் சீனு வழியாக  மருத்துவர் உதயகுமார் தொடர்பு கொண்டார்.   அவரது செய்தி பின்வருமாறு:   வணக்கம் நண்பரே… எனது பெயர் பா.உதயகுமார், நான் அரவிந்த் கண் மருத்துவ குழுமத்தில் பணிபுரிகிறேன்…   எழுத்தாளர் ஜெயமோகனின் இணைய பக்கத்தில் தங்களின் அரவிந்த் கண் மருத்துவ குழுமம் பற்றிய கட்டுரையான காந்திய முறையில் கண் மருத்துவம் கட்டுரையை வாசித்தேன்…   உள்ளபடியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122183

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51

கர்ணனும் அர்ஜுனனும் ஒருவரையொருவர் மீண்டும் அம்புமுனைகளால் சந்தித்துக்கொண்டனர். கால மடிப்புகளில் மீளமீள அவ்வாறு சந்தித்துக்கொண்டே இருப்பதைப்போல இருவரும் உணர்ந்தனர். நூற்றுக்கணக்கான சந்திப்புகளில் ஒவ்வொரு முறையும் உணர்ந்ததுபோல் அது அங்கு தொடங்கவில்லை, எவ்வண்ணமும் அங்கு முடியப்போவதுமில்லை என்ற உணர்வை அவர்கள் அடைந்தனர். எஞ்சியிருப்பது அத்தருணம் மட்டுமே. அதில் வெல்வது எவர் எனும் வினா. வென்ற பின் தொடர்வதென்ன என்பதை அவர்கள் அறியவியலாது. வெல்வது எதன் தொடர்ச்சி என்பதையும் அறியவியலாது. இருபுறமும் அறியமுடியாமைகளின் பெருவெளி அவர்களை இரு கைகளென அள்ளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122222

உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்

[2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா வரும் ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் தக்கர்பாபா அரங்கில் நிகழ்கிறது. மதியம் 2 மணிமுதல் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கும் மாலை 6 மணிமுதல் விருதளிப்புவிழாவும் நடைபெறும்] இருபத்தெட்டாண்டுகளுக்கு முன்பு எர்ணாகுளத்தில் ஓர் இலக்கியவிவாத அரங்கில்  பேராசிரியர் எம்.என்.விஜயன் அவர்கள் ‘இலக்கியத்தின் உளவியல் மாதிரிகள்’ என்னும் தலைப்பில் பேசினார். பேராசிரியர் ஃப்ராய்டின் மேல் பெரும் ஈடுபாடுகொண்டவர். மார்க்ஸியர். “அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122099

Older posts «