Monthly Archive: April 2019

சென்னை கண்டனக்கூட்டத்தில்…

  நேற்று  27-4-2019  அன்று சென்னையில் லக்ஷ்மி மணிவண்ணனும் நண்பர்களும் ஒருங்கிணைத்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். பொன்பரப்பியில் தலித் மக்களுக்கு எதிராக வன்னியர்களின் சாதிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்த்திய வன்முறைக்கு எதிராக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் குரலை பதிவு செய்யும் கூட்டம்.   26 கிளம்புவதாக இருந்தது.  என் அத்தையின் இறப்புச்சடங்குகள் காரணமாக மதியம்தான் கிளம்ப முடிந்தது. ஆகவே திருவனந்தபுரத்தில் இருந்து இறுதிக்கண விமானப் பதிவு. திருவனந்தபுரம் சென்னை விமானங்கள் பாதியாகிவிட்டன. ஆனாலும் கேட்டதுமே இடம்கிடைக்குமளவுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121377

வாசகர் கடிதமும் திறனாய்வும்

  இரவு – திறனாய்வு ஜெ   இதற்கு‌  பதிலையும் நானே கண்டடைய வேண்டுமா என தெரியவில்லை. இருந்தாலும், கேள்வியை உங்களிடம்  கேட்டு வைக்கிறேன்.   நான் இரவு நாவலை வாசித்துவிட்டு, அதைப்பற்றி எழுத நினைத்த நேரத்தில் தான் ஸ்டீபன் ரான் குலசேகரனின் ‘இரவு – திறனாய்வு’ பிரசுரம் ஆனது.   அ. அவரது வாசிப்பனுபவம் திறனாய்வா? அந்த தலைப்பு தாங்கள் அளித்ததா? ஆம் என்றால் அந்த வாசிப்பு முறையின் பயன் என்ன? அத்தியாயம் அத்தியாயமாக வாசித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120892

திராவிட இயக்க இலக்கியமும் நவீன இலக்கியமும்- கடிதங்கள்

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக… திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன் திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள் வணக்கம் ஜெ   தங்களுடைய இணையதளம் இன்று ஒரு அறிவுத்தளமாக இயங்கி வருகிறது. அதில் இலக்கியம், மதம், பண்பாடு, சமூகம், கலை போன்ற பல விஷயங்களில் பல விவாதங்கள் நிகழ்கின்றன. சில வகை கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வந்துள்ளன. குறிப்பாக மதம், பண்பாடு விஷயங்களில் ‘கலாச்சார இந்து’, ‘இந்திய ஞானம்’. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120843

சாரதாம்பரம்!

சாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் விருது அன்புள்ள ஜெ.,   என்ன ஆச்சரியம்! உங்கள் ‘மலையாளப் பாடல்கள்’ பதிவின் தொடர்ச்சியாக ஒரு ஜெயச்சந்திரனின் பாடலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கையில் அவருக்கு கண்ணதாசன் விருது என்கிற செய்தி.கொடுக்க வேண்டியதுதான். கண நேரமேனும் கவலைகளை மறக்க எத்தனையோ பாடல்கள். சுகமான பொழுதுகள். எண்பதுகளின் பிற்பகுதியில் தான் ‘டேப் ரெக்கார்டர்’ பரவலாக உபயோகத்திற்கு வந்தது. தெற்கே இளையராஜாவும் (‘எக்கோ’) வடக்கே குல்ஷன் குமாரும் (பின்னாளில் தொழில்முறை எதிரிகளால் கொலையுண்டார்) அந்த ஊடகத்தை நன்றாகப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121284

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-19

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் பந்தங்கள் சூழ்ந்த வட்டத்தின் நடுவே முழுதணிக்கோலத்தில் படுத்திருந்த கர்ணனின் உடல் செங்கனல் குவியலென மின்னிக்கொண்டிருக்க, மூடிய இமைகளுடன் புன்னகை நிறைந்த உதடுகளுடன் அவன் சுற்றிலும் ஒலித்த புகழ்மொழிகளை செவிகூர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவன்போல் தோன்றினான். பன்னிரு களங்களில் நான்காவதாக அமைந்த சூதராகிய அலவர் தன் கிணைப்பறையில் இரு விரல்களை ஓடவிட்டு விம்மலோசை எழுப்பி தோல் முழவின் முழக்கமென கார்வை கொண்டிருந்த குரலில் முனகி அடிச்சுதியை நிறுவி அதிலிருந்து சொல் திரட்டிக்கொண்டு எழுந்து கர்ணனின் புகழை பாடத் தொடங்கினார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121355

பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதல்-கண்டனக் கூட்டம்

  இப்புவியே தன் பிரத்யட்ச தரிசனமெனக் கண்டு பாடப்படுகிறது பாடல் – தேவதேவன் “பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து” எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் ,ஓவியர்கள் கண்டனக் கூட்டம் நாள் – 27 -04 -2019 இடம் – அம்பேத்கர் திடல் ,நூறடி சாலை ,அசோக் நகர் ,[ லக்ஷ்மன் சுருதி அருகில் ],சென்னை காலை பத்து மணி முதல் ஓவியர்கள் பொன்பரப்பி குறித்த ஓவியங்களை அங்கேயே வரைந்து காட்சிப்படுத்துகிறார்கள் மாலை – சரியாக 4 மணி முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121331

ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா     பச்சையப்பா கல்லூரியை நிறுவிய வள்ளல் பச்சையப்பர், தினமும் கூவம் நதியில் குளித்துவிட்டுத் தான் தன் அன்றாட அலுவல்களைத் துவங்குவார் என ஒரு கதை சொல்லப்படுகிறது. அது, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு. சென்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121080

காலையில் துயில்பவன் – கடிதம்

      அன்புள்ள ஜெ,   கடிதம் எழுதி அனுப்பிய பிறகு உங்களுக்கு இதை வாசிக்க நேரம் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. பதில் வந்ததும் எனக்கு தோன்றியது,உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள். மிகவும் முக்கியமானவை. கடிதத்தில் நீங்கள் எழுதிய வரிகளை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்த அளவுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறீர்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை.   டின்னிடஸ் பதிவில் நண்பர் “Euthanasia” பற்றி எழுதியிருந்தார். நான் வலியோடு இருந்த காலங்களில் Euthanasia ஒரு உரிமையாக இங்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120987

எம்.எல்- கடிதங்கள்

எம்.எல்.நாவல்-விமர்சனம்-உஷாதீபன் வணக்கம் ஜெயமோகன் . இன்று  வண்ணநிலவன் அவர்களின் எம் எல் என்ற நாவல் குறித்த விமர்சனத்தை கண்டேன். அந்த நாவலை நானும் வாசித்தேன். வண்ணநிலவன் அவர்களின் நாவல்களை வாசித்து புளகாங்கிதம் அடைந்த எண்பதுகளின் வாசகன் நான் ஆனால் முப்பது ஆண்டுகள் கழிந்து அவர் எழுதிய எம் எல் என்ற இந்த நாவல் மிகவும் எளிமையாகவும் ஒற்றைப்படையான பார்வை கொண்டதாகவும் அமைந்திருக்கிறது,   எம் எல் இயக்கம் குறித்த ஒரு வெறுப்புணர்வோடு எழுதப்பட்ட நாவல் இது என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121251

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18

அர்ஜுனன் தன் புரவியை நோக்கி செல்கையில் அவனை நோக்கிவந்த நகுலன் “மூத்தவரே, நீங்கள் அரசரை வந்து பார்த்துச்செல்லவேண்டும்” என்றான். அர்ஜுனன் புருவம் சுளிக்க “அவர் சென்றதுமே மது வேண்டுமென்று கேட்டார். வழக்கமாக மிகக் குறைந்த அளவுக்கே அருந்துவார். இங்கே குருக்ஷேத்ரத்திற்கு வந்தபின்னர் அது மிகையாகிக்கொண்டே வந்தது. அதை நானும் சகதேவனும் பிறர் அறியாமல் காத்தோம்” என்றான். அர்ஜுனன் “அவர் கண்களே காட்டிக்கொடுக்கின்றன” என்றான். “அவரால் துயில்கொள்ள முடியவில்லை. சில நாட்களில் அகிபீனாவும் தேவையாகும்” என்று நகுலன் சொன்னான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121127

Older posts «

» Newer posts