Daily Archive: April 29, 2019

இந்தநாளில்…

தலைமறைவு காலையில் எழுந்தால் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் வழக்கமே இல்லை என்னிடம். எழுந்ததுமே காலைநடை. நேராக எழுத்து. பல்தேய்ப்பது அருண்மொழி நினைவுறுத்தினால். அவள் இப்போதெல்லாம் மறந்துவிடுகிறாள். யாராவது வந்தால் மட்டும்தான் ’அய்யய்யோ பல்லே தேய்க்கவில்லை’ என்னும் பதற்றம்.   இதெல்லாமே அரசூழியரின் உளச்சிக்கல்கள். இருபதாண்டுகளாக காலையில் எழுந்ததும் அலுவலகம் செல்வதற்கான சடங்குகளின் ஒருபகுதி பல்தேய்ப்பது, குளிப்பது, தலைசீவிக்கொள்வது. ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாவற்றுக்குமே விடுமுறைதான். சாயங்காலம் எப்படியும்குளிப்போமே அப்போது பல்தேய்த்துக்கொண்டால் போயிற்று, வெள்ளைக்காரன் எல்லாம் பதினெட்டாம்நூற்றாண்டுவரை பல்தேய்க்கும் வழக்கம் இல்லாதவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121392

கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி…

கடந்த காலத்திலும்,நிகழ் காலத்திலும் மற்றும் எக்காலத்திலும் உள்ள அந்த மாறாத ஒன்றை இலக்கியத்தின் வழியே கண்டடையவேண்டுமெனில்,கவிஞனுக்கு கடந்த காலத்தை பற்றிய அவதானிப்புடன் கூடிய பிரக்ஞை இருக்க வேண்டும் என்கிறார் டி.எஸ்.எலியட். கடந்த காலத்தை விசாரணைக்குட்படுத்தும் வரலாற்று நாவல்கள் வழியே காலதீதமாக உள்ள அந்த ஒன்றை கண்டடைகிறான் வாசகன்;அதே வேளையில் வரலாற்று அறிஞர்கள் போல தரக்கத்தராசு கொண்டு வரலாற்றை தட்டையாக்கி ஒற்றைப்படையாக அறிய முற்படாமல் மனிதர்களை மனிதர்களாக கடந்த காலத்தில் வாழவிட்டு மெய்நிகர் அனுபவங்களை பெற முற்படுகிறான் வாசகன்,எனவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120072

கடிதங்கள்

அன்புள்ள ஜெ,   எனது பெயர் பாலாஜி, வயது 25. நான் ஒரு கணினி பொறியாளர். எங்களது நிறுவனர் உங்கள் புத்தங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நானும் உங்களது கதைகளை இணைய தளத்தில் படிப்பேன் , அதில் கைதிகள் கதை என்னை மிகவும் பாதித்தது.   இக்கதையில் குறிப்பிடப்பட்ட அனைத்து விசயங்களும் மிகவும் யதார்த்தமா இருந்தது. நானும் எட்டு மாதங்களாக அங்கேயே வாழ்வது போன்று இருந்தது. கதா பத்திரமாக மாறிவிட்டேன். குழந்தைகளை பார்க்க வேண்டும் என்ற பெருமாளின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120899

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-20

நிமித்தநூலில் திரளும் அறுதிப் பொருளின்மையை நிமித்திகர் சென்றடைவதற்கு அறுபது ஆண்டு முதிர்வு தேவைப்படும் என்பர். ஆனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்திற்கு வந்த இளைய நிமித்திகர் பதினாறு நாட்களுக்குள் அறுபது ஆண்டு முதுமையை அடைந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அந்தியில் போர்நிறுத்த அறிவிப்பை எழுப்பிய பின்னர் அங்கிருந்து தனித்து தலைகுனிந்து தங்கள் இல்லங்களுக்கு மீண்டனர். அப்போது தங்கள் கைகள் மூதாதையர் இறுதி மூச்சுவிடுகையில் விட்ட அதே முத்திரையைக் காட்டி அசைந்துகொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். தங்கள் கைகளை தாங்களே நோக்க அஞ்சினர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121407