Daily Archive: April 28, 2019

பொன்பரப்பி கண்டனக்கூட்டம் -உரை

நீங்கள் பேசியதின் கானோளி, இது நேற்று FBயில் நேரலையும் செய்யபட்டது. நீங்கள் மிக சரியாகவே சொல்ல வந்ததை முழுமையாக சொல்லி இருக்குறீர்கள் என்று எண்ணுகிறேன். https://youtu.be/6so1G_TVIoE ராகவ் இனிய ஜெயம்   கவிஞர் லட்சுமி மணிவண்ணன்  பொன்பரப்பி  சம்பவத்துக்கான கண்டனக் கூட்டத்தில் சக படைப்பாளிகளை இணைந்து கொள்ளச் சொல்லி, இணையத்தில் அறிவிப்புப் பத்திரிக்கை வெளியிட்ட அன்றே சமூக ஊடங்கங்களில்  காமடிக் கம்யுனிஸ்டுகள் தமது காமடி சர்ச்சைகளை துவங்கி விட்டார்கள்.   ஒரு படத்தில் சார்லி சாப்ளின் சுத்தியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121413

சென்னை கண்டனக்கூட்டத்தில்…

  நேற்று  27-4-2019  அன்று சென்னையில் லக்ஷ்மி மணிவண்ணனும் நண்பர்களும் ஒருங்கிணைத்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். பொன்பரப்பியில் தலித் மக்களுக்கு எதிராக வன்னியர்களின் சாதிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்த்திய வன்முறைக்கு எதிராக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் குரலை பதிவு செய்யும் கூட்டம்.   26 கிளம்புவதாக இருந்தது.  என் அத்தையின் இறப்புச்சடங்குகள் காரணமாக மதியம்தான் கிளம்ப முடிந்தது. ஆகவே திருவனந்தபுரத்தில் இருந்து இறுதிக்கண விமானப் பதிவு. திருவனந்தபுரம் சென்னை விமானங்கள் பாதியாகிவிட்டன. ஆனாலும் கேட்டதுமே இடம்கிடைக்குமளவுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121377

வாசகர் கடிதமும் திறனாய்வும்

  இரவு – திறனாய்வு ஜெ   இதற்கு‌  பதிலையும் நானே கண்டடைய வேண்டுமா என தெரியவில்லை. இருந்தாலும், கேள்வியை உங்களிடம்  கேட்டு வைக்கிறேன்.   நான் இரவு நாவலை வாசித்துவிட்டு, அதைப்பற்றி எழுத நினைத்த நேரத்தில் தான் ஸ்டீபன் ரான் குலசேகரனின் ‘இரவு – திறனாய்வு’ பிரசுரம் ஆனது.   அ. அவரது வாசிப்பனுபவம் திறனாய்வா? அந்த தலைப்பு தாங்கள் அளித்ததா? ஆம் என்றால் அந்த வாசிப்பு முறையின் பயன் என்ன? அத்தியாயம் அத்தியாயமாக வாசித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120892

திராவிட இயக்க இலக்கியமும் நவீன இலக்கியமும்- கடிதங்கள்

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக… திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன் திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள் வணக்கம் ஜெ   தங்களுடைய இணையதளம் இன்று ஒரு அறிவுத்தளமாக இயங்கி வருகிறது. அதில் இலக்கியம், மதம், பண்பாடு, சமூகம், கலை போன்ற பல விஷயங்களில் பல விவாதங்கள் நிகழ்கின்றன. சில வகை கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வந்துள்ளன. குறிப்பாக மதம், பண்பாடு விஷயங்களில் ‘கலாச்சார இந்து’, ‘இந்திய ஞானம்’. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120843

சாரதாம்பரம்!

சாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் விருது அன்புள்ள ஜெ.,   என்ன ஆச்சரியம்! உங்கள் ‘மலையாளப் பாடல்கள்’ பதிவின் தொடர்ச்சியாக ஒரு ஜெயச்சந்திரனின் பாடலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கையில் அவருக்கு கண்ணதாசன் விருது என்கிற செய்தி.கொடுக்க வேண்டியதுதான். கண நேரமேனும் கவலைகளை மறக்க எத்தனையோ பாடல்கள். சுகமான பொழுதுகள். எண்பதுகளின் பிற்பகுதியில் தான் ‘டேப் ரெக்கார்டர்’ பரவலாக உபயோகத்திற்கு வந்தது. தெற்கே இளையராஜாவும் (‘எக்கோ’) வடக்கே குல்ஷன் குமாரும் (பின்னாளில் தொழில்முறை எதிரிகளால் கொலையுண்டார்) அந்த ஊடகத்தை நன்றாகப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121284

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-19

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் பந்தங்கள் சூழ்ந்த வட்டத்தின் நடுவே முழுதணிக்கோலத்தில் படுத்திருந்த கர்ணனின் உடல் செங்கனல் குவியலென மின்னிக்கொண்டிருக்க, மூடிய இமைகளுடன் புன்னகை நிறைந்த உதடுகளுடன் அவன் சுற்றிலும் ஒலித்த புகழ்மொழிகளை செவிகூர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவன்போல் தோன்றினான். பன்னிரு களங்களில் நான்காவதாக அமைந்த சூதராகிய அலவர் தன் கிணைப்பறையில் இரு விரல்களை ஓடவிட்டு விம்மலோசை எழுப்பி தோல் முழவின் முழக்கமென கார்வை கொண்டிருந்த குரலில் முனகி அடிச்சுதியை நிறுவி அதிலிருந்து சொல் திரட்டிக்கொண்டு எழுந்து கர்ணனின் புகழை பாடத் தொடங்கினார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121355