Daily Archive: April 27, 2019

பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதல்-கண்டனக் கூட்டம்

  இப்புவியே தன் பிரத்யட்ச தரிசனமெனக் கண்டு பாடப்படுகிறது பாடல் – தேவதேவன் “பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து” எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் ,ஓவியர்கள் கண்டனக் கூட்டம் நாள் – 27 -04 -2019 இடம் – அம்பேத்கர் திடல் ,நூறடி சாலை ,அசோக் நகர் ,[ லக்ஷ்மன் சுருதி அருகில் ],சென்னை காலை பத்து மணி முதல் ஓவியர்கள் பொன்பரப்பி குறித்த ஓவியங்களை அங்கேயே வரைந்து காட்சிப்படுத்துகிறார்கள் மாலை – சரியாக 4 மணி முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121331

ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா     பச்சையப்பா கல்லூரியை நிறுவிய வள்ளல் பச்சையப்பர், தினமும் கூவம் நதியில் குளித்துவிட்டுத் தான் தன் அன்றாட அலுவல்களைத் துவங்குவார் என ஒரு கதை சொல்லப்படுகிறது. அது, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு. சென்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121080

காலையில் துயில்பவன் – கடிதம்

      அன்புள்ள ஜெ,   கடிதம் எழுதி அனுப்பிய பிறகு உங்களுக்கு இதை வாசிக்க நேரம் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. பதில் வந்ததும் எனக்கு தோன்றியது,உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள். மிகவும் முக்கியமானவை. கடிதத்தில் நீங்கள் எழுதிய வரிகளை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்த அளவுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறீர்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை.   டின்னிடஸ் பதிவில் நண்பர் “Euthanasia” பற்றி எழுதியிருந்தார். நான் வலியோடு இருந்த காலங்களில் Euthanasia ஒரு உரிமையாக இங்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120987

எம்.எல்- கடிதங்கள்

எம்.எல்.நாவல்-விமர்சனம்-உஷாதீபன் வணக்கம் ஜெயமோகன் . இன்று  வண்ணநிலவன் அவர்களின் எம் எல் என்ற நாவல் குறித்த விமர்சனத்தை கண்டேன். அந்த நாவலை நானும் வாசித்தேன். வண்ணநிலவன் அவர்களின் நாவல்களை வாசித்து புளகாங்கிதம் அடைந்த எண்பதுகளின் வாசகன் நான் ஆனால் முப்பது ஆண்டுகள் கழிந்து அவர் எழுதிய எம் எல் என்ற இந்த நாவல் மிகவும் எளிமையாகவும் ஒற்றைப்படையான பார்வை கொண்டதாகவும் அமைந்திருக்கிறது,   எம் எல் இயக்கம் குறித்த ஒரு வெறுப்புணர்வோடு எழுதப்பட்ட நாவல் இது என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121251

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18

அர்ஜுனன் தன் புரவியை நோக்கி செல்கையில் அவனை நோக்கிவந்த நகுலன் “மூத்தவரே, நீங்கள் அரசரை வந்து பார்த்துச்செல்லவேண்டும்” என்றான். அர்ஜுனன் புருவம் சுளிக்க “அவர் சென்றதுமே மது வேண்டுமென்று கேட்டார். வழக்கமாக மிகக் குறைந்த அளவுக்கே அருந்துவார். இங்கே குருக்ஷேத்ரத்திற்கு வந்தபின்னர் அது மிகையாகிக்கொண்டே வந்தது. அதை நானும் சகதேவனும் பிறர் அறியாமல் காத்தோம்” என்றான். அர்ஜுனன் “அவர் கண்களே காட்டிக்கொடுக்கின்றன” என்றான். “அவரால் துயில்கொள்ள முடியவில்லை. சில நாட்களில் அகிபீனாவும் தேவையாகும்” என்று நகுலன் சொன்னான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121127