Daily Archive: April 26, 2019

ஸ்ரீலங்காவின் குரல்கள்

கள்ள மௌனத்திலிருந்தே உருவாகின்றன வெடிகுண்டுகள் -ஷர்மிளா சையத் முஸ்லீம்களாகிய நாம் சுயபரிசீலனை செய்வோம்- பாத்திமா மாஜிதா     தமிழ் இந்து நாளிதழில் இரு கட்டுரைகளை வாசித்தேன். அவற்றில் ஷர்மிளா சையித் எழுதிய முகநூல் குறிப்பை முன்னரே பலரும் பகிர்ந்திருந்தனர். இருவரும் இன்று பொதுவாக இஸ்லாமியர் நடுவே உள்ள பதற்றத்தையும் அச்சங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.   இரு கட்டுரைகளையும் கூர்ந்து நோக்குபவர்கள் ஒரு பொதுவான உணர்வைக் கண்டடையக்கூடும். இருவருமே இஸ்லாமிய வஹாபிய அமைப்புகளின் உச்சகட்ட வெறுப்புப் பிரச்சாரத்தை, அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121259

இலஞ்சி ஆலய யானை இறப்பு

வானோக்கி ஒரு கால் -1 இலஞ்சி கோயில் வள்ளி யானை உடல் நல்அடக்கம் இலஞ்சி கோயில் யானை உயிரிழந்த விவகாரம் – விசாரணை நடத்த பக்தர்கள் கோரிக்கை!   ஜெ   திங்கள் கிழமை உரையாடலில் இலஞ்சி கோவில் யானையின் மிதமிஞ்சின எடையைப் பற்றி சொன்னீர்கள். நேற்று அந்த யானை இறந்தே விட்டது   செல்வேந்திரன்   அன்புள்ள செல்வேந்திரன்,   வருத்தம்தரும் செய்தி. ஆனால் நான் அப்போதே அந்த யானை நெடுநாட்கள் வாழாதென்று உணர்ந்திருந்தேன். அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121279

கங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…

நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு. சாது நிகமானந்தா குறித்த நூல்- வாங்க நீர் நெருப்பு – ஒரு பயணம் கங்கைக்காக ஒர் உயிர்ப்போர் அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   நாவறழத் தாகித்துத் துடிக்கும் இக்கோடையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு நீர்சொட்டின் அருமையை உயிரேற்றி வருகிறோம். தண்ணீரை தந்துகொண்டேயிருக்கும் ஒரு ஆறு சாகக்கூடாது என்பதற்காக, ஒரு துறவி தன் ஊணைச்சுருக்கி உடலைக்கரைத்து உயிர் துறந்திருக்கிறார். நிகமானந்தா என்னும் பெயருடைய அத்துறவி இறந்த கணந்தொட்டு இன்றின் இக்கணம்வரை அடித்தடுத்து ஒவ்வொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121275

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17

பாண்டவப் படைகளினூடாக அர்ஜுனன் புரவியில் மென்நடையில் சென்றான். இருபுறமும் பந்தங்கள் எரிந்த வெளிச்சப்பகுதிகளில் கூடி அமர்ந்து ஊனுணவுடன் கள்ளருந்திக்கொண்டிருந்த வீரர்கள் பேசிக்கொண்டிருந்த சொற்கள் துண்டுதுண்டாக செவிகளில் விழுந்தன. ஒரு சொல்லை பொருள்கொண்டுவிட்டால் அந்த உரையாடல் தேய்ந்து மறைவதுவரை செவியில் விழுந்தது. சிதைந்த சொற்களை உள்ளமே நிரப்பிக்கொண்டது. “கதிரவன் மைந்தர் என்கிறார். பரசுராமரின் வில்லேந்தியவர். அறிக, இக்களத்தில் இன்றுவரை அவர் வெல்லப்படவில்லை!” என்றார் ஒருவர். “அவ்வண்ணம் வெல்லப்படாதவர்களே பீஷ்மரும் துரோணரும்” என்றார் இன்னொருவர். “அவர்கள் வீழ்ந்ததே இவர் புகழ்சூடத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121057