Daily Archive: April 25, 2019

காதலைக் கடத்தல்

  அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு, நலமா? வீட்டில் அனைவரும் நலம் தானே? எங்கோ ஒரு மூலையில் உங்களின் கதைகளையும் நாவல்களையும் படித்து, அனுபவித்து, ரசித்து, தீவிர உணர்வெழுச்சியில் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் லட்சகணக்கான தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். 26 வயது. நல்ல வேலை. நல்ல நண்பர்கள். ஆனால், ஒரு இழந்த காதல். வாழ்வின் மிகவும் குழப்பமான கட்டத்தில் இருப்பது போல் இருக்கிறது. நான் தற்போது வாசித்துகொண்டிருக்கும் ‘இரவு’ நாவலும் சரி, என்னை மிகவும் பாதித்த ‘காடு’, ‘அனல்காற்று’ நாவலிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21281

வெண்முரசு விவாதக்கூட்டம்- சென்னை

  அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,   ஏப்ரல் மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது   கடந்த ஐந்து மாதங்களாக நிகழ்ந்த சொல்வளர்காடு கலந்துரையாடலின் நிறைவுப்பகுதியாக வாசகர்களின்  விவாதங்களும் கேள்வி பதில் பகுதியும் நிகழும். ராஜகோபாலன் இந்நிகழ்வுகளின் மட்டுறுத்துனராக இருப்பார்.   வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..   நேரம்:-  வரும் ஞாயிறு (28/04/2019) மாலை 5:00 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121200

வாழ்நீர் – கடலூர் சீனு

நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு. சாது நிகமானந்தா குறித்த நூல்- வாங்க   நீர் நெருப்பு – ஒரு பயணம்     விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து  உள்நின்று உடற்றும் பசி.   வள்ளுவர்.     சில வாரம் முன்பு சிவகாசியில் குலதெய்வம் கோவில் கொடைக்கு சென்றிருந்தோம். விடுதியின் குளிர்பதன  அறைக்குள் நுழைந்த கணம், ஆரோ ஏழோ படிக்கும் தம்பிமகன் குளியலறைக்கு  ஓடிச் சென்று, உள்ளே குழாயை அருவியாக திறந்து விட்டு நீரினடியில் நின்றான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119856

காலையில் துயில்பவன் – கடிதம்

காலையில் துயில்பவன்   அன்புள்ள ஜெ,   சக வாசகர் நீங்கள் அறிவுருத்தியுள்ள/வலியுருத்தியுள்ள அனைத்து புறஉலக செயல்களையும்/செயல்பாடுகளையும் கட்டாயமாக கடைபிடிப்பதோடு, இங்கு விவரிக்கப்பட்டுள்ளதனையும் செய்ய வேண்டுகிறேன்.   அவருக்கு ஒரு பரம்பரை மரபணு குறைபாடு இருக்கலாம். குறிப்பாக, 1) CRY1; OMIM ID: 614163, 2) NFIL3; OMIM ID: 605327 3) BHLHE40; OMIM ID 604256 இம்மூன்று மரபணுக்களில் ஏதோவென்றிலோ அல்லது இதுவரை கண்டறியப்படாத DSPD தொடர்பான மரபணுவிலோ திடீர்மாற்றம் (mutation) இருக்க வாய்ப்புள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121198

திரைப்பட ஏற்பு -கடிதங்கள்

திரைப்படம் – ஏற்பின் இயங்கியல் வணக்கம். உங்கள் ஏற்பின் இயங்கியல் படித்தேன்.   அரசியல்பற்று ஒருவனை ஒருவகையான மிதப்பு கொண்டவனாக ஆக்கிவிடுகிறது. உலகையே சீர்திருத்தும், வழிகாட்டும் பொறுப்பை அவன் எடுத்துக்கொள்கிறான். அதற்கான தன் தகுதி பற்றி எண்ணிப்பார்ப்பதில்லை படைப்பாளி எப்படி படம் எடுக்கவேண்டும், பார்வையாளர் எப்படிப் பார்க்கவேண்டும் என்று வகுப்பெடுக்கும் எழுத்துக்களை எழுதும் விமர்சகர்கள் உருவாவது இப்படித்தான். மிக எளிய அன்றாட அரசியல்நிலைபாடுகள், அரசியல்சரி சார்ந்த அணுகுமுறைகள் இவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன. சமூகஏற்பு போன்ற நுண்மையான ஆய்வுகளுக்கு அதன்பின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119825

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-16

புலரியில் கர்ணன் எழுந்து வெளியே வந்தபோது கண்முன் பேருருவென நின்ற இருண்ட மரம் ஒன்றைக்கண்டு வேறெங்கோ வந்துவிட்டதாக எண்ணி மலைத்தான். பின்னர் அண்ணாந்து நோக்கியபோது அது ஐந்து தலைகள்கொண்ட நாகம்போல் தெரிந்தது. பத்து மணிக்கண்களின் ஒளி விண்மீன்கள் போல வானில் நின்றது. சீறி அலையும் நாவுகளை காணமுடிந்தது. கீழே புடைத்தவேர்கள் என சுழன்று எழுந்திருந்தது நாகத்தின் சுருளுடல். எழுந்த உடலில் செதில்கள் இருளுக்குள் மெல்லொளி கொண்டிருந்தன. அவன் இலைத்தழைப்பில் காற்றோசை என அதன் சீறலை கேட்டான். அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121069