Daily Archive: April 24, 2019

சாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் விருது

2019 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கும், பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்படுகின்றன. கோவையை மையமாக்கி வழங்கப்படும் இவ்விருது தொடர்ச்சியாக விருது அளிக்கப்படும் ஆளுமைகளால் முக்கியமானதாக மாறிவிட்டிருக்கும் ஒன்று சாரு நிவேதிதா தொடர்ச்சியாக தமிழில் ஓர் இலக்கிய மையமாக விளங்கி வருகிறார். உலக இலக்கியங்களை தமிழில் அறிமுகம் செய்வது, இலக்கிய இயக்கங்களை அடையாளம் காட்டுவது என முப்பதாண்டுக்காலப் பங்களிப்பு அவருடையது. தமிழின் புனைவிலக்கியத்தில் புதிய வழிப்பாதைகளை உருவாக்கியவை அவருடைய படைப்புக்கள். சினிமா, இசை சார்ந்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121227

கட்டண உரை,பிறந்தநாள்,கோவை

கோவையில் மூன்றுநாட்கள் இருந்தேன். திட்டமிட்டிருந்தது இரண்டுநாட்கள்தான். கோவை கட்டண உரை ஏப்ரல் 20 ஆம் தேதிதான் திட்டமிடப்பட்டது. பலரிடமும் பணமும் பெற்றுவிட்டோம். ஆனால் அதேநாளில் எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புக்கள் பற்றிய முழுநாள் கருத்தரங்கை கோவையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகவே ஒருநாள் கட்டணஉரையை தள்ளிவைத்தோம்.முன்பதிவுசெய்த அரங்கத்தை கைவிடவேண்டியிருந்தது. ஒருநாள் கூடுதலாக தங்கநேர்ந்தது 21 அன்று ஞாயிறு ஆதலால் அரங்கு கிடைக்கவில்லை. சேம்பர் ஆஃப் காமர்ஸின் அரங்கை பெற்று நிகழ்ச்சியை முடிவுசெய்தோம். நான் ரயிலுக்கு முன்பதிவு செய்திருந்தேன். அதை மாற்றவேண்டியதில்லை என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121174

எம்.எல்.நாவல்-விமர்சனம்-உஷாதீபன்

  வண்ணநிலவன் எழுதிய “எம்.எல்” என்ற இந்த நாவலை வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்தாரின் வாசிப்பிற்குப் பிறகு இரண்டாவதாக வாசித்து முடித்த பெருந்தகை அநேகமாக நானாகத்தான் இருக்க வேண்டும். திரு வண்ணதாசன் அவர்கள் சொல்வனம் இணைய இதழில் தொடர்ச்சியாகப் படிக்காமல் சற்றே விட்டு விட்டுப் படித்ததாகச் சொல்லியிருந்தார். உடனடியாக நான் உட்கார்ந்து படித்து முடித்ததற்குக் காரணம் முதலில் அந்தத் தலைப்பில் ஏற்பட்ட ஈர்ப்பு. அடுத்ததாக அறுபது எழுபதுகளில் தமிழ்நாட்டில் சாரு மஜூம்தாரின் மார்க்ஸிய – லெனினியக் கட்சி பரவிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120949

டின்னிடஸ் அனுபவத்தின் வழியே…

Tinnitus காலையில் துயில்பவன் அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவிற்கு,   டின்னிடஸ் பற்றி, ‘காலையில் துயில்பவன்’ கட்டுரை வழியாக அறிந்தேன். எனக்கு இப்பிரச்சனை 2012ஆம் ஆண்டில் பள்ளியின் போட்டி விளையாட்டிற்கு மறுநாள் காலையில் ஏற்பட்டது. காதில் ஏதோ அடைத்துக் கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறது என்று காது மருத்துவர்களிடம் சென்று செலவு செய்து ஓய்ந்தும் விட்டேன். நான்கு நாள் முழு இரவு உறக்கமில்லாமல் தவித்தேன். என்ன நோய் இதுவென்று புரியாமல் தவித்தேன். கடைசியாக ஒரு மலாய் காது நிபுணர்தான் இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121191

கோடைநடை -கடிதங்கள்

கோடை நடை அன்புள்ள ஜெ கோடை நடை படித்த பிறகு எங்கள் சூழல் கூட இனிமையாய் தெரிய ஆரம்பிக்கிறது. . .நன்றி. எங்கும் ஒரே புலம்பல் தான் இப்போது – வெயில் தாங்க முடியல, வேத்து ஊத்துது, இப்பவே இப்படி, ண்ணிக்கு என்ன பண்ணப்போறோம். . . எங்களுக்கும் கோடை பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது! செடி கொடிகளெல்லாம்வாடி நிற்க தயாராகி இலைகளை உதிர்க்க ஆரம்பித்தன. காலையில் துயிலெழுப்பும் பறவைக்கூட்டத்தின் கோஷ்டிகானம் சற்று சுருதி இழக்க ஆரம்பித்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120959

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-15

மூன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதராகிய காமர் வெண்கல்லாக அமர்ந்திருந்த புதனையும் வெண்சங்கு வடிவில் அருளிய திருமாலையும் வணங்கி தன் கையிலிருந்த நந்துனியின் நரம்புகளை சிறு வெண்கலக் கம்பியால் மீட்டி, நூறு வண்டுகள் ஒன்றையொன்று சுழன்று துரத்தும் இசையை எழுப்பி, அதன் மெல்லிய சுதிக்கு தன் நெஞ்சுக்குள் மட்டுமே ஒலித்த முதல் நாதத்தை பொருத்தி, மெல்ல மூக்குக்கு எடுத்து உதடுகளில் அதிரச்செய்து, குரலென்று வெளிக்கிளப்பி முதற்சொல்லை எடுத்தார். “ஓம்!” எனும் அவ்வொலி நந்துனியின் இசையின் மீது ஏறிக்கொண்டது. தழுவிப்பறக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120982