Daily Archive: April 21, 2019

சேர்ந்து முதிர்தல்

  1991  மே மாதம் நான் ஊட்டிக்குச் சென்றிருந்தேன். அவ்வாண்டுதான் எனக்குத் திருமணமாகியிருந்தது. அருண்மொழி பட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தாள். இன்றும் தொடரும் ஒரு நட்புவட்டத்தினரை ஒரே கொத்தாகச் சந்தித்த நாள் அது. தமிழகச் சூழியல் இயக்கத்தின் முன்னோடியும் காந்தியவாதியுமான ஈரோடு டாக்டர் வி. ஜீவானந்தம் அவர்கள் ஊட்டியில் ஒரு எழுத்தாளர்கூடுகையை ஒருங்கிணைத்திருந்தார். சூழியல் சார்ந்து எழுத்தாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வை உருவாக்குவது அதன் திட்டம். அன்று சூத்ரதாரி என்று பெயர்சூட்டிக்கொண்டிருந்த எம்.கோபாலகிருஷ்ணன், பசலை என்னும் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருந்தவரும் அன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120910

கங்கைப்போர்- கடிதங்கள்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்   அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,   ஈரோடு விவாத பயிற்சிப் பட்டறையில் அளிக்கப்பட்ட குக்கூ காட்டுப்பள்ளியின் “நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு” வாசித்திருந்தேன்.  அத்துடன் அதன் வெளியீடான ”உரையாடும் காந்தி” வாங்கி வாசித்திருந்தேன்.  எதிர்வினை ஆற்றாதிருந்தது அறப்பிழையே.   சுவாமி நிகமானந்தர், சுவாமி கியான் ஸ்வருப் சானநத் கங்கையைக் காக்க உயிர் அளித்த அவர்களின் தியாகம் வீண்போகக்கூடாது என்று விழைகிறேன்.  சுவாமி ஆத்மபோதானந்தரின் உண்ணாவிரதம், அவர் உயிர் காக்கப்பட வேண்டும் என்று விழைகிறேன்.  கருத்தளவிலேனும் தம் எதிர்வினைகளின் வாயிலாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121090

அருணா ராய்,பங்கர் ராய் – கடிதங்கள்

  அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா அன்புள்ள ஜெ   அரசியல் இல்லாத இடமே இல்லை. அரசியல் இல்லாத ஆளே இல்லை. அரசியல் பேசாதவர்கள் எல்லாரும் சொம்பை . இது இன்றைக்கு பலர் கூச்சலிட்டுக்கொண்டிருப்பது. முகநூல் முழுக்க இதுதான். இவர்கள் அரசியல் என்பது கட்சிகட்டி சண்டைபோடுவது. வெறுப்பைக் கக்குவது. அவதூறு பொழிவது. தலைமைவழிபாடு. வேறு எதுவுமே தெரியாது. எதையுமே கவனிப்பதில்லை. இன்னொரு அரசியல் இருக்கிறது. ஆக்கபூர்வமான அரசியல். சத்தம்போடாத வெறுப்பை உருவாக்காத  கட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121142

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12

சல்யரின் குடிலுக்கு வெளியே துச்சாதனன் பொறுமையிழந்து காத்து நின்றிருந்தான். அவன் வந்ததுமே காவலன் உள்ளே சென்று அவரிடம் துச்சாதனனின் வரவை அறிவித்திருந்தான். உடனே உள்ளே செல்ல எண்ணியிருந்தமையால் சில கணங்களே நீளும் பொழுது எனத் தோன்றின. அவர் உடைமாற்றிக்கொள்ளக்கூடும் என்றும் பின்னர் அவர் துயில் எழுந்துகொண்டிருக்கிறார் போலும் என்றும் எண்ணி எண்ணி காத்திருந்தமையால் அவன் உணர்ந்த காலம் மிக நீண்டு சென்றது. எக்கணமும் கதவுக்கு அப்பாலிருந்து சல்யர் தன்னை அழைப்பாரென்று எதிர்பார்த்து அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அதன் அசைவின்மையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120875

கோவையில் இன்று உரையாற்றுகிறேன்

கோவை கட்டண உரை   கோவையில் இன்று உரையாற்றுகிறேன். கட்டண உரை. இருப்பிடங்கள் முன்னரே  நிறைந்துவிட்டன என்பதனால் அறிவிப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே பணம் கட்டாதவர்களுக்கு நுழைவொப்புதல் இல்லை   ஏற்கனவே ஆற்றிய இரு உரைகளின் தொடர்ச்சிதான். இந்த உரைகளை நன்கு சிந்தித்து தெளிவடைந்தவற்றை முன்வைக்கும் உரைகள் எனச் சொல்லமாட்டேன். சிலவற்றைச் சொல்லி நானே அறிந்துகொள்ளும் உரைகள் என்பேன். எல்லாச் சிந்தனைகளையும்போல இவை வெவ்வேறு சிந்தனைமுறைகளில் இருந்து எடுத்துக்கொண்ட சரடுகளை தன்னறிதலின் வழியாக முடைந்து ஒன்றை உருவாக்கும் முயற்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121122