Daily Archive: April 18, 2019

ஒரு மொழியாக்கம்

    ராகுல் காந்தியின் உரையை ஜோதி அழகாக மொழியாக்கம் செய்கிறார். வேண்டுமென்றால் சில இணைப்புச்சொற்கள் மிகுதி என்னும் குறையைச் சுட்டிக்காட்டமுடியும்.   முன்னர் தங்கபாலுவும், பி.ஜே.குரியனும் மொழியாக்கம் செய்து நகைப்புக்கு இடமானார்கள். அவர்கள் செய்த பிழைகள் என்னென்ன? முதலில் மொழியாக்கம் என்பது ஒரு மொழித்தொழில்நுட்பம். அதில் தேர்ச்சி கொண்டவர்கல் மொழியாக்கம் செய்யவேண்டும். மாறாக கட்சியில் முக்கியத்துவம் கருதி மொழியாக்கம் செய்ய முன்வருகிறார்கள். ராகுலின் அருகே நின்றிருக்கும் வாய்ப்பு என்பது பெரிதாகத்தெரிகிறது. அதை இன்னொருவருக்கு கொடுக்கும் உளநிலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121065

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா

அருணா ராய் பேட்டி 1 அருணா ராய் பேட்டி 2  தகவலறியும் சட்டத்தின் கதை கொலாபா, மும்பையின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி. அங்கு, கடற்கரையை ஒட்டி, இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கார்கில் போர் முடிந்தவுடன், போரில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடு  வழங்க வேண்டும் என்னும் நோக்கில், ஆறு மாடிக் கட்டிடம் கட்ட அரசின் அனுமதி பெற்று, ஒரு திட்டம் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கியபின், நகர் வளர்ச்சி வாரிய விதிகளுக்கும், கடற்கரையோர கட்டிட விதிமுறைகளுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120859

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை பற்றி… கிருஷ்ணன்

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை ஈரோடு விவாதப்பட்டறை – கடிதங்கள்     ஆசிரியருக்கு ,   அறிவியக்கத்தில் நாட்டமுள்ள ஒருவன் விவாதித்துக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. சொல்லப் போனால் நண்பர்களுடன் அல்லது சித்தாந்த எதிரிகளுடன் விவாதிக்குக்போது  அறிவு  சேகரிப்பை விட  நமது கொள்கையை நிலைநாட்டுவதையே பிரதானமாகக் கொள்கிறோம். ஒருவன் இவ்வளவு ஆண்டுகளாக விவாதித்து பெற்றுக் கொண்டது என்ன எனக் கேட்டால் மிக மிக சொற்பம் என தான் பதில் கிடைக்கும். என்றாவது நீங்களோ அல்லது உங்களது மறுதரப்போ உங்கள் நிலைப்பாட்டை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120818

அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்

அறிபுனை- விமர்சனப்போட்டி அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  உமா ரமணன்   அரூவின் இனைய இதழில் வெளியான பத்து கதைகளையும் வாசித்தேன்.  இந்த கதைகளை தொடர்ந்து வாசித்த பொழுது அரூப வெளியில் கொஞ்சம் கொந்தளிப்போடும் அதே சமயம் அக விடுதலையுடனும் உலாவுவதை போலிருந்தது. அது ஏற்படுத்திய உணர்வுகள் என் இருப்பின் மீது ஆழமான கேள்விகளை எழுப்பியது. அதற்கான விடைகளை மிக எளிமையாக ஏற்றுக்கொள்ள வைத்தது மரணத்தை ஏற்றுக்கொள்வதை போல. இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121049

பாரதியும் வரலாற்றுக்குரலும்

இலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம் அன்புள்ள ஜெ   பாரதியார் ‘உங்க டிலக் இப்ப எங்கே இருக்கான்?’ என்று கேட்டவரை சினந்துகொண்டதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். முகநூலில் ஒருவர் வ.ராவின் நூலில் இருந்து மூலப்பகுதியை எடுத்துப்போட்டிருக்கிறார்   புதுச்சேரி கடற்கரையில்,ஆனந்தமாக காற்று வாங்கி கொண்டிருந்தோம்…..பாரதியார் அருமையாக பயாடிக் கொண்டிருந்தார்.அந்தச் சமயம் வ.வே.சு. அய்யரின் நண்பரான திருச்சி வக்கீல்,ஒருவர் (ரொம்ப பிரபலஸ்தர்) எங்களுடன் இருந்தார்.       பாட்டு முடிந்ததும் அந்த வக்கீல்,பேச ஆரம்பித்தார்,’என் சார்! ஒங்க டிலக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121024

“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-9

அதிரதனின் இல்லத்திலிருந்து தன் அரண்மனை நோக்கி செல்கையில் தேரில் உடனிருந்த விருஷசேனனும் விருஷகேதுவும் கர்ணனிடமிருந்த ஆழ்ந்த அமைதியை அறிந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் விழிநோக்கிக் கொண்டார்கள். சம்பாபுரியின் தெருக்கள் உச்சிவெயிலுக்கு அடங்கி ஓயத்தொடங்கிவிட்டிருந்தன. கர்ணனின் தேர் செல்வதை மக்கள் அறிந்ததாகத் தெரியவில்லை. எந்த அணியுமில்லாத விரைவுத்தேர் அது. அதன் செம்பட்டுத் திரைச்சீலைகளை காணநேர்ந்த சிலர் உள்ளிருப்பவர் எவர் என நோக்கி அது கர்ணன் என அடையாளம் காண்பதற்குள் தேர் அவர்களை கடந்துசென்றது. அரண்மனையை தேர் சென்றடைந்தபோது கர்ணன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120968