Daily Archive: April 16, 2019

அழியா வண்ணங்கள்

  சென்னை விடுதியில் அரைத்துயிலில் சும்மா தொலைக்காட்சியை நோண்டிக்கொண்டிருந்தபோது  ‘ஜெயகாந்தன் ஜெயமோகன் சேர்ந்து எழுதிய கதை நீ’ என்றபாடல் எங்கேயோ ஒலித்தது. திரும்ப சென்று தேடிப்பார்க்கத் தோன்றவில்லை. ஆனால் அதிலிருந்து நினைவுகள் எழத்தொடங்கின.   சினிமாப்பாடல்களுக்கு ஓர் அழிவின்மை உண்டு. அவை சினிமாவில் நிகழும் பிறிதொரு கலையைச் சார்ந்தவை. மரபிசையின் அடித்தளம் மீது மேலைச் செவ்வியல் இசையும், மேலைப் பரப்பிசையும், நாட்டாரிசையும் கலந்து ஒவ்வொரு கணமும் புதிய வாய்ப்பொன்றைத் திறப்பவை. நம் மரபிசை தேங்கிப்போன ஒன்று. அதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120741

அரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்

அறிபுனை- விமர்சனப்போட்டி அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  விக்ரம், கோவை   அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, எழுத முற்படுபவர்களுக்கும் வாசகர்களுக்கும் நல்ல சாத்தியங்களை எப்போதும் ஏற்படுத்தி தரும் தங்களுக்கு நன்றி.  எது அறிவியல் புனைவு எது அதுவல்ல என்று விளக்கி இருக்கிறீர்கள். கலை மனித உறவுகள், இயற்கை, அரசியல், வரலாறு, மதம், அறிவியல் என்று எதையும் தன் கையில் எடுத்துப் பார்க்கும்போது அது தனக்கே உரித்தான நோக்கையும், உள்வாங்கு-வெளிப்பாட்டு முறைகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120984

தென்காசி- கடிதங்கள்

ஜெ   தென்காசி கோயிலின் ஊர்த்துவர் பற்றி எழுதியிருந்தீர்கள்   ‘ஓங்குநிலை ஒன்பதுற்ற திருக்கோபுரம் பாங்குருவம் பத்துப் பயில் தூணும் தேங்குபுகழ் மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி தன்னிலன்றிஉண்டோ தலத்து?’   தென்காசி கோபுரம் மற்றும் சிற்பத்தூண்களைப்பற்றிய கவிதை இது. இங்குள்ள திருவோலக்க மண்டபத்தில் உள்ளது இந்த ஊர்த்துவர் சிலை. அருகே மகாதாண்டவர் சிலை உள்ளது. இது தமிழகத்தின் பேரழகுகொண்ட சிலைகளில் ஒன்று. இதைப்பற்றிபலர் எழுதியிருக்கிறார்கள்   ஆர். சௌந்தரராஜன் வானோக்கி ஒரு கால் – 2 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120047

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை- கடிதங்கள்

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை   அன்புள்ள ஜெ ஈரோடு விவாத பயிற்சிப் பட்டறை பற்றி படிக்கும்போது ஒரு இனம் தெரியாத ஆனந்தம் பொங்கி விரிகிறது. அதிலும் இத்தனை இளைய முகங்களைப் பார்க்கும் போது, தற்போதைய சாதி, இன, மத பேதங்களைத் தூண்டும் வெறுப்பு மொழிகள் நிறைந்த பிரசார சூழலில், பாலைவனத்தில்  பசுஞ்சோலை கண்டது போல ஒரு பரவசம். விவாதம் என்பது வெற்றி பெற வேண்டுவது ; அப்படி முடியாவிட்டால் கத்தி கூப்பாடு போட்டு எதிரணியை பேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120054

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7

குருக்ஷேத்ரத்தின் சூரியகளத்தில் அமர்ந்து அஜர் சொன்னார். அழிவில்லாதனவற்றை பாடுக! அழிவுள்ளவற்றை பாடலினூடாக அழிவற்றவை என்றாக்குக! அறியவொண்ணாமையை பாடுக! பாட்டினூடாக அவற்றை அறிபடுபொருளென்றாக்குக! தோழரே, பாடல் வாழ்வின் பொருள்மட்டுமே பிரிந்து நின்றிருப்பது. வேரில் கசந்து தண்டில் இறுகி இலையில் விரிந்து மலரில் ஒளிர்ந்து கனியில் இனிப்பது மட்டுமே திரண்டு நின்றிருப்பதையே பாடல் என்கின்றனர். இங்குள்ள ஒவ்வொன்றும் மறையும், அவை உருமாற்றி பாடலில் சென்றமையும். இங்குள்ள ஒவ்வொன்றும் மீண்டும் இவ்வண்ணமே பாடலில் இருந்து எழும். அவை தங்கள் சுவையாலேயே அறியப்படும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120808