Daily Archive: April 15, 2019

வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்

தமிழிலக்கியத்தின் இரு கிளைகளுக்கு முன்னோடியானவர் வ.வே.சு.அய்யர். தமிழ்ச்சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என அவர் எழுதிய மங்கையர்க்கரசியின்காதல் என்ற சிறுகதைத்தொகுதி குறிப்பிடப்படுகிறது. அதில் உள்ள குளத்தங்கரை அரசமரம் தமிழின் முதல் இலக்கணம் அமைந்த சிறுகதை என க.நா.சு. மரபினர் சொல்வார்கள்.  வ.வே.சு.அய்யர் பாரதிபாடல்களுக்கு எழுதிய முன்னுரை தமிழின் விமர்சன மரபுக்கு வழிகோலியது.   வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் வ.வே.சு.அய்யர் கடும் சர்ச்சைகளுக்கு ஆளானார்.பாரதியார் உத்தேசித்த சுதேசிக்கல்வியைப் பரப்பும்பொருட்டு வ.வே.சு.அய்யர் ஒரு கல்விநிலையத்தை சேர்மாதேவியில் நிறுவினார். தமிழ்நாடு ஆசிரமம் என்ற அக்குருகுலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21150

‘உயிர் விளையாட்டு’- கிருஷ்ணன் சங்கரன்

நாமக்கல் கவிஞர்  வெ இராமலிங்கம் பிள்ளை அவர்களின் “இலக்கிய இன்பம்” என்ற உரைநடை நூல் படித்தேன். ஒருவர் எவ்வாறு அறியப்பட வேண்டுமோ அவ்வாறல்லாமல் பலவாறாக அறியப்படுதல் நகைமுரணே. அவர் மிகச் சிறந்த ஓவியர். ஒரு வெள்ளையரின் இறந்துபோன மகளை தத்ரூபமாக வரைந்து பாராட்டுப் பெற்றதை “என் கதை” யில் விவரித்திருப்பார். அவர் பெயரைச் சொன்னாலே ஞாபகத்துக்கு வருவது அவருடைய வாழ்க்கை வரலாறான “என் கதை”. தமிழின் மிகச் சிறந்த தன் வரலாற்று நூல்களில் ஒன்று. ரொம்ப நேரம் யோசித்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119695

அரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்

  அறிபுனை- விமர்சனப்போட்டி அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  ஜினுராஜ்      “ஒரு பொதுவான கதையில் அறிவியல்கூறுகள் சேர்க்கப்பட்டால் அது ஒருபோதும் அறிவியல் கதை அல்ல” “அக்கதையின் மையக்கரு அறிவியல் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்.அதாவது ஓர் அறிவியல் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக அமைவது அறிவியல் ஊகங்கள்( Hypothesis ).அப்படி ஒரு அசலான அறிவியல் ஊகமானது நிரூபணத் தர்க்கத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக புனைவாக்கம் நோக்கி வந்தால் மட்டுமே அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120943

1000 மணிநேர வாசிப்பு சவால்

இப்போட்டிக்கு விதிமுறைகள் என பெரிதாக ஏதுமில்லை. நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திகொள்வது மட்டுமே நோக்கம் ஆகவே இலக்கடைந்த நிறைவும், அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை அளிக்கும் மகிழ்விற்கு அப்பால் பரிசு என ஏதுமில்லை. நாளை சித்திரை 1 இந்த புதிய வருடத்திலிருந்து இப்போட்டி துவங்கும். 1000 மணிநேர வாசிப்பு சவால்

Permanent link to this article: https://www.jeyamohan.in/120979

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-6

ஒவ்வொருநாளும் மூன்றுவேளையும் உணவுண்பதற்கு முன் தன் இல்லத்தின் நான்கு வெளிவாயில்களிலும் வந்து நின்று “எவரேனும் பசித்துளீரா? உலகீரே, பசித்தோர் எவரும் உள்ளீரா?” என்று ஏழுமுறை கேட்டு எவருமில்லை என்பதை உறுதி செய்தபின் “தெய்வங்களே, அவ்வாறே ஆகுக!” என்னும் மொழியுடன் தன் அகம் புக்கு அன்னமேடையில் அமர்வது அஸ்வரின் வழக்கம். அன்று காலைப்பொழுதில் இல்லம் தேடி வந்த அனைவருக்கும் உணவிட்டு, பொருள்தேடி வந்த அனைவரும் உளம்நிறைய அளித்துவிட்டு புறவாயிலில் வந்து நின்று “எவரேனும் பசித்துளீரா? உலகீரே, பசித்தோர் எவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120778