Daily Archive: April 12, 2019

கோடை நடை

கோடையை வெறுக்கும் உளநிலைக்கு முன்னரே வந்துவிடுகிறோம். அதற்குக் காரணம் தமிழ்மொழியிலுள்ள கோடைகுறித்த் மொழிபுகள்தான் எனத் தோன்றுகிறது. சங்ககாலம் முதல் கோடை இங்கே கொடிதாகவே காட்டப்பட்டுள்ளது. பிரிவின் கோடை. உடன்போக்கின் கோடை. உணர்வுகள் வரண்ட கோடை. உளம்வரண்ட ஆறலைக் கள்வர். நீர்தேடித்தவிக்கும் யானைகள். வேட்டைச்செந்நாய் கிளைத்தூண் மிச்சிலை பருகிச் செல்லும் தொலைபயணிகள்.   சங்கதத்திலும் கோடை மொழிபுகள் கொடியவையே. காளிதாசனின் ரிதுசம்ஹாரத்தில் விடாய்கொண்ட பாம்புபடமெடுக்க அதன் நிழலில் தவளை இளைப்பாறுகிறது. தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம் கண்ணீர் நனைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120810

நீரின்றி அமையாது – காளிப்பிரசாத்

அன்புள்ள ஜெ   சென்ற ராயப்பேட்டை புத்தக கண்காட்சியில் வாங்கிய மனைமாட்சி நாவலை சென்றமாதத்தில் ஒரு ரயில் பயணத்தில் தான்  படித்து முடித்தேன். செம்பருத்தி மெர்க்குரிப்பூக்கள் வரிசையில் வைக்கவேண்டிய படைப்பு. திஜா பாலகுமாரன் வரிசையில் இந்த தலைமுறைக்கு இது எனத் தோன்றியது..   மொத்தம் மூன்று வகைகள்.  ஒவ்வொன்றிலும் இழையாக ஓடும்  இரு கதைகள் என ஆறு கதைகள். அனைத்துமே கணவன் மனைவி என்ற ஒன்றில் பிண்ணப்பட்டிருக்கின்றன. ஆண்பெண் உறவுச் சிக்கல் என பொதுமைப்படுத்தலாகாது. கணவன் மனைவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119854

எடுத்த கால் – கடிதம்

  வானோக்கி ஒரு கால் –1 வானோக்கி ஒரு கால் – 2 அன்புள்ள ஜெயமோகன் ,   தங்களின் “வானோக்கிஒரு கால்” வாசித்தேன். “கால்தூக்கி நின்றாடும் பைரவம்” –  நல்லதொரு வரி.   மதுரை மீனாக்ஷி ஆலயத்தில் நெடிதுயர்ந்த ஊர்த்வதாண்டவருக்கு நல்ல வெள்ளை வேட்டி கட்டி விட்டு(மேல்நோக்கிய காலுக்கும் தான்) மானம் காத்த நல்ல உள்ளங்களை கெட்ட வார்த்தையால் திட்டி அம்மாவின் கோவத்துக்கு ஆளாகி  “தெய்வ விக்கிரகத்துக்கு வஸ்திரம் சாத்துறது எல்லாம் ஒரு வேண்டுதல்” போன்ற நல்லுபதேசங்களை பெற்றேன்.   தோசைக்கல்  வாங்க புது மண்டபத்துக்குள்  சென்றால்  அங்கும் நின்றான் ஊர்த்வன் – மார்பணியும்  ஆரங்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120035

கோவை கட்டண உரை -கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, ‘வரலாறு, பண்பாடு, நாம் எனும் கற்பனை‘ கட்டண உரையின் தலைப்பு மிகவும் ஆர்வமூட்டுகிறது. சமூக ஊடங்களைக் கண்டு மிரண்டுபோய் தமிழ்நாட்டின் முதன்மை தினசரிகள், வார இதழ்கள், தொலைக்காட்சிகள் அவற்றில் வருபவற்றை எடுத்துப்போட்டு அவற்றின் அளவேதான் தமது தரமும் என்று காட்டிவரும் வேளையில் உண்மையில் நாட்டம் கொண்டவர்கள் இந்தபக்கம் வரவும் என்று தனித்து நிற்கும் உண்மையான உழைப்பிலும் தங்கள் சொந்த இயல்பான நேர்மையிலும் விளைந்த தங்கள் உறுதி என்னை உவகை கொள்ளச்செய்கிறது. தோளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120043

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-3

ஓசை கேட்டு துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அப்பால் மண்சாலையில் வந்துநின்ற அத்திரிகள் இழுத்த வண்டியிலிருந்து இறக்கி செவிவளையங்களுக்குள் மூங்கில் செருகி நான்கு பணியாளர்களால் தூக்கிவரப்பட்ட பெரிய மரப்பெட்டியில் அங்கநாட்டின் எழுகதிர் முத்திரை இருந்தது. சுப்ரதர் “நல்லவேளையாக அரசர் வரும்போதே தனது அணிகளை எல்லாம் கொண்டுவந்திருந்தார். இல்லையேல் அவற்றை சம்பாபுரியிலிருந்து கொண்டுவரவேண்டியிருந்திருக்கும்” என்றபின் அதிலிருந்த பொருந்தாமையை உணர்ந்து “ஆனால் அது இயல்வதல்ல. அரசரே கொண்டுவந்திருந்தமையால்…” என்றபின் அது மேலும் பொருத்தமல்லாமல் ஆவதை உணர்ந்து நிறுத்திக்கொண்டார். அந்த சொல்லாச்சொல்லின் தவிப்பு வெளிப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120122