Daily Archive: April 11, 2019

திருமூலம்

“ஏல, அம்பத்தாறு ராச்சியத்து அரமனையும் காக்கைக்க குண்டிக்க கீள தானலே?” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப்பார்க்க விழிகளை சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல்நிக்கப்பட்ட எடத்திலே பீயை போட்டு வைக்கது நீருதானா?” என்றார் ஆட்டோ ஓட்டுநர். புன்னகையுடன் பார்வையை திருப்பிக்கொண்டேன். ஆ, கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் அல்லவா? மீண்டும் திரும்பிப்பார்த்தேன். கும்பமுனி மப்ளரால் டீ டம்ளரை சுற்றிப் பிடித்து ஊதி ஊதி குடித்துக்கொண்டிருந்தார். கன்யாகுமரி மாவட்டத்தின் இயல்புகளில் ஒன்று இது, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119459

மரபைச் சிறுமைசெய்தல்

  தேர்தல் அடிபிடிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எனக்கு அரசியல் இருக்கலாம், அதை என் எழுத்துக்களை வாசிப்பவர்களிடம் என் மீதான மதிப்பை பயன்படுத்திக் கொண்டுசெல்லவேண்டியதில்லை என்பதே என் எண்ணம். எல்லா தரப்பிலும் எனக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். இலக்கியத்தை நேரடி அரசியலில் இருந்து அகற்றி நிறுத்தவேண்டும் என எண்ணுபவன் நான், அது என் தெளிவு   ஆகவே எப்போதுமே அரசியல் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. குறிப்பாகத் தேர்தல்நேரத்தில் எல்லாக் காலத்திலும் முழு மௌனம்தான்.   ஆனால் இந்த ஓவியம் ஆழமான ஓர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120833

திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள்

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக… திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன் திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்   அன்புள்ள ஜெ     திராவிட இயக்கம் பற்றிய விவாதங்களை வாசித்தேன். நண்பர்களுடன் விவாதித்தபோது அவர்கள் அண்ணாத்துரை புறக்கணிக்கப்பட்டார் என்றார்கள். இல்லை, அவரைப்பற்றி வேண்டுமளவு பேசியிருக்கிறார்கள் என ஆதாரத்துடன் சொன்னேன்.  இப்போதுகூட அறிஞர் அண்ணா என்று சொல்லமாட்டேன் என்கிறார்களே என்று ஒருவர் ஆவேசமாகக் கேட்டார். என்னால் பதில்சொல்லவே முடியவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120670

சென்னை கட்டண உரை குறித்து…. அகரமுதல்வன்

தமிழ் இலக்கிய உலகில் மிக அண்மையான காலத்தில் அதிகமான வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்த இலக்கிய நிகழ்வாக ஆகுதி நடத்திய இலக்கிய பெருவெளி தொடரின் முதல் நிகழ்வே அமைந்திருந்தது.இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்            மரபை விரும்புவதும்  வெறுப்பதுவும் எப்படி? என்ற தலைப்பில் ஆற்றிய கட்டண உரையை கேட்பதற்கு கிட்டத்தட்ட ஐந்நூறு பேர் கூடினர்.நிகழ்வு தொடங்கும் நிமிஷம் வரையும் விமர்சனங்கள் ஒரு தரப்பினரால் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன.இவ்வாறன புறச்சவால்களின் மீது ஆகுதிக்கொரு தனிப்பிடிப்பு இல்லாமலில்லை.அதனது இலக்கிய செயற்பாட்டிற்கு சவால்கள் எப்போதும் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120005

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-2

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் அந்தி அணைந்த பின்னர் சிதைச்சடங்குகள் தொடங்குவதற்கான முரசொலி எழத்தொடங்கியதும் கௌரவப் படைகள் ஒலியடங்கின. குருதிமணம் கொண்ட காற்று மெல்லிய சுழல்களாக கடந்துசென்றது. புண்பட்டவர்களை மருத்துவநிலைகளுக்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டு திரும்பிச்சென்ற சகடங்களின் ஓசை ஓய்ந்தது. தெற்குக்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த சுடலைச்சகடங்களின் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. முரசு முழக்கமும் கொம்புக்கூவலும் இணைந்த ஓசை காற்றில் கிழிந்து பறந்தது. போரின் முதல்நாள் அவ்வொலி எழுந்தபோது அது என்ன என்று பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை. அதை உண்டாட்டுக்கான அழைப்பு என்றோ, வேறேதோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120100