Daily Archive: April 10, 2019

மாறுதலின் இக்காலகட்டத்தில்…

தமிழினி “இலக்கிய முன்னோடிகள் வரிசை” புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவாக்குகிறது. அதற்குப்பதில் சொல்ல நாம் தொண்ணூறு சொற்களை உருவாக்கவேண்டும். இது முடிவே இல்லாத செயல்பாடு. ஆகவே உலக அளவில்கூட பல முக்கியமான படைப்பாளிகள் காலப்போக்கில் விமரிசகர்கள் ஆகியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் டி எச் எலியட். தமிழில் க.நா.சு. நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41

திராவிட இயக்கம்- கடிதங்கள்

  திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக… அன்புள்ள ஜெ திராவிட இயக்கம் பற்றிய கட்டுரைகள், குறிப்புகளில் எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது நீங்கள் இடதுசாரி அறிவியக்கம் பற்றிச் சொன்னதுதான். இன்று ஊடகங்களில் பேச உண்மையான இடதுசாரியே இல்லை. அருணன் போல மாறுவேடமிட்ட திராவிட இயக்கத்தவர்களே உள்ளனர். அவர்களின் மொழி மட்டுமல்ல உடல்பாவனைகளே கூட வெற்றிகொண்டான் பாணியிலானவை. இடதுசாரி அறிவுஜீவிகள் சென்ற இருபதாண்டுகளுக்கு முன்புவரை அவர்கள் கலாச்சார அரசியல், பொற்காலக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120665

அறிபுனை- விமர்சனப்போட்டி

அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகள் ஒரு பெருந்திறப்பு அன்புள்ள நண்பர்களுக்கு, அறிவியல்சிறுகதைப் போட்டிக்கு வந்து இறுதித்தேர்வான 10 சிறுகதைகள் என் குறிப்புடன் அரூ இணைய இதழில் வெளிவந்துள்ளன. வழிவழியாக வெறும் தொழில்நுட்ப விந்தைகளை வேடிக்கையாக துப்பறியும் கதைகளில் கலப்பதையே அறிவியல்கதை என நம்பி வந்துள்ளோம். இக்கதைகள் அவ்வகையில் தமிழுக்குப் பெருந்திறப்பு. அடிப்படை வினாக்களை உசாவி கற்பனையுடன் மேலே செல்லும் கதைகள் மெய்யான அறிவியல்புனைவின் தகவுகளையும் அறைகூவல்களையும் நமக்குக் காட்டுகின்றன இந்தப் பத்துக்கதைகளைப் பற்றி – அல்லது ஏதேனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120689

வானோக்கி ஒரு கால் – கடிதம்

வானோக்கி ஒரு கால் – 2 வானோக்கி ஒரு கால் -1 அன்புநிறை ஜெ, தங்கள் பயண அனுபவங்கள் அனைத்துமே அவ்விடங்களுக்கு மானசீகமாகக் கடத்தி அந்த மனநிலையையும் உள்ளூர தொட்டு எழுப்பிவிடுபவை. எனினும் இந்த ‘வானோக்கி ஒரு கால்’ சற்று அதிகமாகவே நிலைகுலைய வைத்தது. இத்தகைய ஒரு தனிமையின் அலைதலுக்கு இத்தலைப்பு மேலும் செறிவைக் கூட்டி விடுகிறது. அல்லது அனைத்தையும் சொல்வதற்கு இந்தத் தலைப்பே போதுமென்பது போல. ‘வானோக்கி ஒரு கால்’, ‘வானோக்கி ஒரு கால்’ என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120074

லஷ்மி மணிவண்ணனுக்கு ஷோபா..

அழகியல் விமர்சனமும் ஷோபா சக்தியும். ஷோபா சக்திக்கு…. லக்ஷ்மி மணிவண்ணன் இலக்கியத்தில் மதிப்பீடுகளின் அவசியத்தை ஓர் எழுத்தாளர் உணராமல் இருக்கமுடியாது. ஆனால் நிர்ப்பந்திக்கப்படும் விதிகளும் சட்டகங்களும் தடைக்கற்கள். அந்த விதிகள் மார்க்ஸியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன தேசியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன அழகியல் அல்லது ரசனை சார்ந்து வைக்கப்பட்டாலென்ன அவைகள் மீறிச்செல்லப்பட வேண்டியவை .அதைத்தான் என் பதிவில் சொன்னேன். சுருக்கமாக “இலக்கியத்திற்கு விதிகள் இல்லை“. லஷ்மி மணிவண்ணனுக்கு ஷோபா..

Permanent link to this article: https://www.jeyamohan.in/120784

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-1

சூதரே, மாகதரே, கேளுங்கள்! இந்தப் புலரி மங்கலம் கொள்க! இந்த மரங்கள் தளிர்ச்செவிகோட்டி சொல்கூர்க! இந்தப் புள்ளினங்கள் அறிக! இந்தத் தெள்ளிய நீரோடை இச்சொற்களை சுமந்துசெல்க! இந்தக் காற்றில் நமது மூச்சு என்றென்றுமென நிலைகொள்க! ஆம், அவ்வாறே ஆகுக! நான் வெயிலின் மைந்தனின் கதையை சொல்லவிருக்கிறேன். விழிநிறைத்து வெள்ளியுருக்கிப் பெருகும் வெயில் கதிரோனின் கைகளின் பெருக்கு. அவன் ஆடையின் அலை. கணம் கோடி கரிய மைந்தரைப் பெறுகிறான் வெய்யோன். கருமையே அவனுக்கு உகந்தது. தோழரே, இங்குள்ள ஒவ்வொன்றிலிருந்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120438