Daily Archive: March 22, 2019

ஒரு சிறுகதை விவாதம்

நாகப்பிரகாஷ் இக்கடிதத்தையும் உடனிருக்கும் கதையையும் அனுப்பியிருந்தார். வாசகர்கள், நண்பர்கள் தங்கள் விமர்சனங்களை, ஆய்வை எழுதலாம். மீண்டும் ஒரு கதை விவாதம் நிகழ உதவியாக இருக்கும் ஜெ ஜெ, இது என்னுடைய ஏழாவது சிறுகதை. ஆனால் இதுவும் நண்பர்கள் அனைவராலும், எழுதுகிறவர்களாலும் நிராகரிக்கப்பட்டது. தெளிவாக இல்லை, பெரும்பாலானவர்களுக்குப் புரியாது. எதுவுமே புதிதாக இல்லை. இனி வேறு எப்படிச் சிறுகதை எழுத என்று எழுதியதெல்லாம் மூட்டை கட்டி ஓரம் வைத்துவிட்டுப் படிக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் என் எழுத்தில் என்னதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119353

இரவு – திறனாய்வு

அன்புள்ள ஜெயமோகன் சார், இரவு நாவலை உங்களின் தளத்தில் வாசித்தேன்.விஷ்ணுபுரம், வெண்முரசு போல் இல்லாமல் நிகழ்காலத்தில் கதை நடக்கிறது. நீலியையும் இரவு வாழ்க்கையையும்,தவிர மீதி நாம் தினமும் சந்திப்பது,கேள்விபட்டதுதான்.ஆனால் அந்த சம்பவங்களின் மூலம் கிடைக்கும் தரிசனங்கள்,சாக்த தத்துவங்கள், நாம் உக்கிரமாக சந்திக்கும் தருணங்கள் எப்படி வாழ்க்கையை செதுக்குகிறது?,அதை எப்படி அந்த கணத்தில் சந்திக்கிறோம்,அதன் பொருள் என்ன என்பது எல்லாம் மிகவும் புதியது. இப்படியாக பட்ட தருணங்களை சந்திப்பவனின் மனவோட்டங்களை அப்பட்டமாக வெளிபடுத்துகிறீர்கள்.முதல் கவிதையிலே கூறிவிடுகிறீர்கள் இரவு…இயந்திரங்கள்,கணக்கு வழக்குகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119356

மூன்றாம்பிறை

மூன்றாம்பிறை மம்மூட்டி சுயசரிதை வாங்க அன்புள்ள ஜெ சார், இன்றைய தினம் ஒரு சிறந்த வாழ்வனுபவப் பதிவுகள் கொண்ட நூலை வாசித்தேன். ரசித்தேன் என்றும் சொல்லலாம். யாரென்று தெரியாத நினைவூட்ட முடியாத முகம் கொண்ட எளிய மனிதனில் மகத்தான தருணங்கள், தரிசனங்கள், திறப்புகள் நிகழ்வது போல் உயர்ந்த இடத்தில்  கோடிக்கணக்கான மனிதர்களின் உள்ளங்களில் பதிந்து சட்டனெ நினைவுகளின் மேலடுக்கில் எளிதில் எழும் முகம் கொண்ட ஒருவருக்குள் எளிமையின் பிரகாசமும் வாழ்வின் தரிசனமும் இந்த அளவு வெளிப்படுமா என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119403

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் – கடிதம்

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூல் வாங்க இனிய ஜெயம் பொதுவாக வாசித்த நூல் குறித்துதான் உங்களுக்கு உவகையுடன் எழுதுவேன். முதன் முறையாக இனிமேல் வாசிக்கப்போகிறேன் எனும் நூல் குறித்து குதூகலத்துடன் எழுதுகிறேன். அண்ணன் அனீஷ் கிருஷ்ணன் அவர்கள் வசம் நீங்கள் மதிப்புரை எழுதச்சொன்ன, பேசுகையில் நீங்கள் என் வசம் குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் லகுகீச பாசுபதம் நூல் குறித்து இணையத்தில் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என அலசினேன். ஆச்சர்யம் ஒரு வாசகர்,முனைவர் அந்த நூலை அறிமுகம் செய்து எழுதி இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119350

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88

சஞ்சயன் சொன்னான்: அரசே, குருக்ஷேத்ரக் களத்தில் பொடியும் புகையும் மெல்ல அடங்கிக்கொண்டிருப்பதை இப்போது பார்க்கிறேன். முகில்கள் பெய்தொழிந்து வான் வெளுப்பதுபோல் அங்கே ஒவ்வொரு வீரராக தோன்றுகிறார்கள். அதுவரை அங்கு படைகள் மோதிக்கொண்டிருந்தன. அப்படைகளுக்குள் ஒவ்வொரு வீரனும் பிறிதொரு வீரனை விழியால் நோக்காது தன்னந்தனிமையில் போரிட்டுக்கொண்டிருந்தான். சூழல்வெளிக்க தன்னைச் சூழ்ந்து ஒரு பெருங்களம் இருப்பதை, பல்லாயிரம் பேர் படைக்கலங்களுடன் முட்டிமோதுவதை, மேலும் பல்லாயிரம் பேர் உடல் சிதைந்தும் தலையறுந்தும் இறந்தும் உயிரெஞ்சியும் நிலம் நிறைத்து விழுந்துகிடப்பதை அப்போதுதான் பார்த்தவன்போல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119383