Daily Archive: March 19, 2019

கொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு நாகர்கோயில் ரயில் நிலையத்தில் பழம்பொரியை பார்த்தேன். “ச்சேச்சே’ என விலகி அப்பால் சென்றேன். பழம்பொரி மட்டும் சாப்பிடக்கூடாது, டீயும் சாப்பிடவேண்டும், டீ சாப்பிட்டால் ரயிலில் தூக்கம் வராது, ஆகவே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டேன். ஆனால் ஒரு வட்டம்போட்டு மீண்டும் பழம்பொரிக்கு அருகிலேயே வந்திருப்பதை உணர்ந்தேன். “பால் கிடைக்குமா?” என்று கம்மிய குரலில் கேட்டேன். “ஆமாம்” என்றான். “நீயொக்கே என்னே ஜீவிக்கான் அனுவதிக்கில்ல அல்லெடா?” என ஜெகதி ஸ்ரீகுமார் குரலில் நெஞ்சுக்குள் குமுறிவிட்டு ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119286

புதுவை வெண்முரசு விவாதக்கூடுகை

  அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 24 வது கூடுகையாக “மார்ச் மாதம்” 21.03.2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன்அழைக்கிறோம் . கூடுகையின் பேசு பகுதி  வெண்முரசு நூல்  வரிசை 3  “வண்ணக்கடல்”  பகுதி  நான்கு “வெற்றித்திருநகர்” ,16 முதல் 20 வரையிலான பதிவுகள் குறித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119280

காடு – கடிதம்

காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஜெ,வணக்கம். இது எனக்கு ஜெயமோகனின் நான்காவது நாவல்.முதலில் வெள்ளை யானை பிறகு அறம்,ரப்பர் அடுத்து இதோ காடு.முதல் முறை காடு வாசித்தபோது ஒன்றிரண்டு அத்தியாயங்களாக நின்று நிதானமாக வாசித்து, பின்பு வாசித்தவரை கொஞ்ச நேரம் அசை போட்டு அசை போட்டுத்தான் அடுத்த நகர்வு என்றுதான் வாசிக்க முடிந்தது.  நீங்கள் அடிக்கடி சொல்வது போல் வாசக இடைவெளி கள் மிகுந்த நாவல்.வாசித்து முடித்ததும் அதே சூட்டோடு மறு படியும் வாசிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119143

சிதம்பரம் நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 2008 இனிய ஜெயம் நேற்று நாட்யாஞ்சலி. கடந்த நான்கு வருடங்களாக,நாட்யாஞ்சலி சுதி குறைந்து கொண்டே போகிறது. உள்ளே நாட்யாஞ்சலி நிர்வாகத்தில், கொள்கை வேறுபாடு காரணமாக கருத்து வேறுபாடு முற்றி, நிர்வாகம் இரண்டாக கிழிந்து,ஒன்று கோவிலுக்குள்ளும்,மற்றொன்று ராஜ வீதியிலும் என இரு வேறு தரப்பாக இயங்கத் துவங்கி இருக்கிறது. கோவிலுக்குள் இருப்பது, எதோ தீட்சிதர்கள்  நாட்யாஞ்சலி டிரஸ்ட்.வெளியே உள்ள கோஷ்டியைக் காட்டிலும்,வெளுத்து வாங்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். விளைவு. இந்த வருடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119243

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85

கிருபர் தனியாக தேரில் சென்று அஸ்வத்தாமன் போரிட்டுக்கொண்டிருந்த களத்தை அடைந்து இறங்கியபோது தொலைவில் அம்புகள் பறவைக்கூட்டங்கள்போல் சிறகோசையுடன் வானை நிறைத்திருப்பதை கண்டார். சகுனியும் அஸ்வத்தாமனும் இணைந்து மறுபுறம் முழு ஆற்றலுடன் போரிட்டுக்கொண்டிருந்த சிகண்டியை எதிர்கொண்டிருந்தனர். கிருபர் வருவதை சகுனிதான் முதலில் பார்த்தார். முன்னரே துரோணர் களம்பட்டிருந்த செய்தியை அவர் அறிந்திருந்தமையால் தன் பாகனுக்கு கையசைவால் ஆணையிட்டுப் பின்னடைந்து தேரிலிருந்து இறங்கிக்கொண்டு விழிகளை இமைத்தும் தலையை உலுக்கியும் தன்னிலையை மீட்டார். புண்பட்ட காலை நீட்டி வைத்து மெல்ல தேர்ச்சகடத்திலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119284