Daily Archive: March 17, 2019

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு

அன்புள்ள ஜெ, அண்மையில் ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது. நாராயண குரு என்றல்ல காலனிய காலகட்டத்து இந்திய ஆன்மீக மரபுகள் அனைத்தின் பொதுவான கவலை இதுவாகவே இருந்திருக்கும் எனத் தோன்றியது. வள்ளலார், அய்யா வைகுண்டர் என தமிழக மெய்ஞான மரபுகளுடன் சேர்த்து இவ்வரியை விரித்துக்கொள்ள முடியும். பஞ்சத்திலும் பாராமுகத்திலும் மறந்து போகும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119191

பட்டி நாயும் பாட்டுநாயும்

நாய் பாடும் பாடல் நலமாக வேண்டும் அன்பின் ஜெ.. பட்டி படித்தேன். கடிதங்களும்.. சமவெளிக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்..இதோ என் பங்குக்கு எங்களூர்ச் செய்தி.. செய்தித் தாள்களில்,  agony aunt என்னும் ஒரு பத்தி உண்டு. அதில் உங்களது அந்தரங்கப் பிரச்சினைக்கு, கடிதம் எழுதித் தீர்வு காண முயலலாம். அப்படி ஒரு கடிதம் – நைஜீரியத் தினசரி ஒன்றில் வந்தது. கேள்வி: அன்புள்ள சகோதரி டோலெப்போ, நான் இபேயில் குடியிருக்கிறேன். திருமணமாகிப் பதினேழு வருடங்களாகின்றன. எனக்கும் என் மனைவிக்கும் கருத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119134

கட்டண உரை இன்றும் நேற்றும்

கட்டண உரை – கடிதங்கள் மேடை உரை பற்றி… கட்டண உரை – எதிர்வினைகள் கட்டண உரை, ஐயங்கள் அன்பிற்கினிய ஜெயமோகனுக்கு வணக்கம். கட்டண உரை பற்றிய பதிவுகளைப் படித்து வருகிறேன். தி.மு.க மாநாடுகளில்தான் முதன்முதல் அக்காலத்தில்நுழைவுக்கட்டனம் வைத்திருந்தார்கள். தொண்டர்கள் தொகை செலுத்தி தம் தலைவர்களின் பேச்சைக் கேட்கும் ஆர்வத்துடன்வந்தார்கள். நாளடைவில் காலமாற்றத்தால் எல்லாமே மாறிப் போயின. நான் கடலூர் கூத்தப்பாக்கத்தில் “இலக்கியச்சோலை” என்னும் அமைப்பை நண்பர்கள் உதவியுடன் 1994-ல் தொடங்கிநடத்தி வருகிறேன்.168 நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. சிவ. மாதவன், குறிஞ்சிவேலன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119130

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83

அர்ஜுனன் தேரில் தலைதாழ்த்தி அமர்ந்திருக்க இளைய யாதவர் அவனை நோக்கி “உன் உள்ளம் இன்னும் விசைகொள்ளவில்லை” என்றார். “யாதவரே, நான் அந்த யானையை பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். இளைய யாதவர் “ஆம், நானும் எண்ணினேன்” என்றார். “அதற்கும் எனக்கும் ஒரே அகவை. அஸ்வத்தாமனும் நானும் இணையகவை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “எங்களுக்கிடையே அது எவ்வண்ணமோ வந்துவிட்டது.” இளைய யாதவர் சொல் என்பது போல நோக்கினார். “நெடுங்காலம் முன்னர், நானும் அவரும் ஆசிரியரின் குருநிலையில் சாலைத்தோழர்களாக பயின்றபோது…” என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119201