Daily Archive: March 13, 2019

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

பங்கர் ராய் நாலந்தா பல்கலைக்கழகம், பண்டைய இந்தியாவின் பெருமிதங்களுள் ஒன்று.  1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அங்கே இறையியல், தத்துவம், மொழியியல், மருத்துவம் போன்ற பலதுறைகளில் கல்வி கற்பிக்கப்பட்டது. மத்திய ஆசிய நாடுகள் மற்றும் அண்டை நாடுகளில் இருந்தெல்லாம், ஆசிரியர்களும், மாணவர்களும் இங்கே வந்து, இருந்து கல்வி பயிற்றுவித்து/ பயின்று செல்லும் அளவுக்கு புகழ் பெற்று விளங்கியது. ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள டிலோனியா என்னும் சிற்றூரில், வெறும் பாதக் கல்லூரி என்னும் பெயரில் ஒரு கல்லூரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119089

பால் இரு சுட்டிகள்

பால் – இறுதியாக… பால் அரசியல் அன்புள்ள ஜெ, தங்களது தளத்தில் பால் பற்றிய உரையாடலைப் பார்க்க நேர்ந்தது… http://ksdhileepan.blogspot.com/2015/08/blog-post.html குங்குமம் டாக்டர் இதழில் பால் பற்றி எழுதிய கவர்ஸ்டோரியின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்… இதில் பேட்டி கொடுத்திருக்கும் மருத்துவர் ஜெகதீசன் ‘மெல்லக் கொல்லும் பால்’ எனும் நூலை எழுதியிருக்கிறார்… கி.ச.திலீபன் அன்பின் நண்பருக்கு, வணக்கம். நலமா? பால் பற்றிய உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தேன். போலி மற்றும் கலப்படப் பால், பால்மா குறித்த கவனத்துக்குரிய கட்டுரைகளை வெளியிட்டு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119074

வெண்முரசு விவாதக்கூட்டம் சென்னை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், மார்ச் மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக  ஜா. ராஜகோபாலன் உரையாடினார். வரும் ஞாயிறன்று,   இதுவரையிலான  உரையாடல்களின் தொகுப்பை செளந்தர் தொகுத்துக் கூறுவார். அதன்பின் நிறைவுப்பகுதியாக யக்ஷவனம் பற்றி ஜாஜா உரையாடுவார். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:- …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119099

அடேய் குடிகாரா!

அட பைத்தியக்கார மோகன் என்ற எழுத்தாளரே கொல்லைப் புறமாக வந்து மதுவை வரவேற்க வேண்டாம்.எவனோ ஒருவனுடன் விபச்சாரத்திற்காக மது அருந்தியதை நீங்கள் ஏன் குறிப்பிட்டு தமிழ் இந்து பத்திரிகை நாசம் செய்கிறீர்கள்.வேறு ஏதாவது நல்ல விஷயங்கள் இருந்தால் எழுதுங்கள்.மதுவுக்கு ஆதரவு தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது இது முட்டாள்தனம் தனம் உங்களின் கேடுகெட்ட தனம் உங்களின் வக்கிர புத்தி. கணேஷ்குமார் [email protected] அன்புள்ள அறிவியல்கணேஷ்குமார் நன்றி ஆனால் மோகன் என்ற பேரில் மது அருந்தாத அப்பாவிகளும் இப்புவியில் உலவக்கூடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119079

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79

முதல் அம்பிலேயே துரோணர் தன் முழு ஆற்றலையும் காட்டினார். அந்த நீளம்பு சென்று அறைந்த பாஞ்சால வில்லவன் தேரிலிருந்து தெறித்து பின்னால் சென்றுவிழ அவனை நிலத்துடன் குத்தி நிறுத்தி ஆடியது அது. பாஞ்சால வீரர்கள் ஒருகணம் திகைத்த பின்னர் வெறியுடன் கூச்சலிட்டபடி துரோணரை நோக்கி பாய்ந்தார்கள். துரோணர் அன்று முற்றிலும் வேறொருவராக எழுந்திருந்தார். அவர் பற்கள் தெரியச் சிரிப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவருடைய கைகளில் இருந்து எழுந்த அம்புகளில் முன்பெப்போதும் இல்லாத விசை இருந்தது. அவை சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118773